Published:Updated:

``என் மேல் அன்பில் இருந்தவர்கள் நிறைய பேர்!" - சிம்பு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

சிம்பு
News
சிம்பு

மாநாடு படம், காதல், திருமணம் என பல விஷயங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

மாநாடு படத்தின் மூலம் மீண்டும் ரேஸில் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உடல் இளைத்து துறுதுறுவென, பஞ்ச் பேசாத சிம்பு படத்தை ரிப்பீட் கேட்டனர் மக்கள். மாநாடு வைரல் அடங்குவதற்குள்ளாக `வெந்து தணிந்தது காடு படத்தின் க்ளிம்ஸையும் வெளியிட்டு அசத்தினர். புல் எனர்ஜியில் இருக்கும் சிம்புவைச் சந்தித்து உரையாடினோம். மாநாடு படம், காதல், திருமணம் என பல விஷயங்களள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

``அப்பா, அம்மாவும் உங்க பஞ்சாயத்திற்கு வந்து நிக்கிறாங்களே?’’

நான் வேண்டாம்னு சொல்றேன், மாட்டேங்கிறாங்க. அவர்களைத் தடுக்க முடியலை. அம்மா என்மேல் அப்படி பிரியம் வச்சிருக்காங்க. எம்மதமும் சம்மதம்னு எல்லோரும் சும்மா பேச்சுக்குச் சொல்வாங்க. எங்க வீட்டுல தம்பி முஸ்லிமாக, தங்கச்சி கிறிஸ்துவராக, நான் இந்துவாக வாழ்க்கையை நடத்துறோம். எனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு அவங்களுக்கு ஆசையா இருக்கு. எனக்காக சர்ச், கோயில், தர்ஹான்னு போறாங்க. நானே இந்தக் கொரானாவில் 100 கோயில்களுக்கு மேலே போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்துட்டேன். வெள்ளிக் கிழமை தர்ஹா, ஞாயிறுன்னா சர்ச், மத்த நாள்களிலும் கோயிலுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். இனிமேல் அம்மா அப்பாவைப் பஞ்சாயத்துக்குக் கொண்டு போய் விடாமல் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.”

மாநாடு - வெங்கட் பிரபு, சிம்பு
மாநாடு - வெங்கட் பிரபு, சிம்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``உங்க மேல ஒரு இமேஜ் இருக்கு. ‘அடடா, செம டேலன்ட்... ஆனால் கொஞ்சம் டைம் கீப்பப் பண்ண மாட்டாரு’ன்னு. அப்படி ஒரு வளையத்தை ஏன் போட்டுக்கிட்டீங்க?’’

“கொஞ்சம் லேட்டா போனேன், உண்மைதான். ஆனால் எல்லாத்தையும் ஒரே டேக்கில் முடிச்சுக் கொடுத்தேன். அதை யாரும் சொல்லவே இல்லை. நல்லா ஸ்டெப் வச்சு ஆடினேன், பிரமாதமா ஃபைட் பண்ணினேன், பக்குவமா நடிச்சேன்னு யாரும் சொல்ல மறந்துட்டாங்களே. எல்லாத்தையும் மீறி லேட்டா வந்தது மட்டும்தான் நின்னுச்சு. ‘சரி, இனிமேல் அதையும் சரி பண்ணிருவோம்'னு இப்ப முதல் ஆளாகப் போயிட்டு, கடைசி ஆளாகத் திரும்புறேன். இப்ப யாரும் தாமதமாக வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்றதில்லையே.”

``உங்களோட வந்தவங்க எல்லாம் முன்னாடி ஓடுறாங்க... இவ்வளவு மன வலிமை உள்ள நீங்கள் இன்னும் உச்சம் தொடறதுதானே நியாயம்?’’

``உங்க மேல ஒரு இமேஜ் இருக்கு. ‘அடடா, செம டேலன்ட்... ஆனால் கொஞ்சம் டைம் கீப்பப் பண்ண மாட்டாரு’ன்னு. அப்படி ஒரு வளையத்தை ஏன் போட்டுக்கிட்டீங்க?’’

``பழைய காதல்கள் உங்களைத் தொந்தரவு செய்யுமா..?’’

உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலைப் படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்

ரஜினியிடம் பேசியது என்ன? - சிம்பு சொல்லும் சீக்ரெட்!