Published:Updated:

"ஹலோ நான் பொதுச்செயலாளர்!" ஜெயலலிதாவிடமிருந்து வந்த அந்த போன் கால்... பகிரும் சிங்கமுத்து!

சிங்கமுத்து

''அவங்க எனக்கு பத்து நிமிஷம் டைம் கொடுத்திருந்தாங்க. ஆனா, அம்மா என்கிட்ட அரைமணிநேரம் பேசினாங்க. அவங்க அவ்ளோ நேரம் பேசுறதுக்கு காரணம், 'பேச்சாளருக்கு இவன் சரிபட்டு வருவானா?'னு தெரிஞ்சக்கத்தான்.''

"ஹலோ நான் பொதுச்செயலாளர்!" ஜெயலலிதாவிடமிருந்து வந்த அந்த போன் கால்... பகிரும் சிங்கமுத்து!

''அவங்க எனக்கு பத்து நிமிஷம் டைம் கொடுத்திருந்தாங்க. ஆனா, அம்மா என்கிட்ட அரைமணிநேரம் பேசினாங்க. அவங்க அவ்ளோ நேரம் பேசுறதுக்கு காரணம், 'பேச்சாளருக்கு இவன் சரிபட்டு வருவானா?'னு தெரிஞ்சக்கத்தான்.''

Published:Updated:
சிங்கமுத்து

``அ.தி.மு.க.வில் ஒரு பேச்சாளராக இதுரைக்கும் 1400 மீட்டுங்குகள் பேசியிருக்கேன்'' என்கிறார் நகைச்சுவை நடிகரும் அதிமுக பேச்சாளருமான சிங்கமுத்து. ஆனந்த விகடன் அவுட் ஆஃப் டாபிக்கிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி இது.

`` நான் அதிமுகவில் பேச்சாளராக ஆனதே ஒரு சுவாரஸ்யமான சம்பவம். ஒருமுறை 'நாங்க கார்டன்ல இருந்து பேசுறோம்'னு எனக்கு போன் கால் வந்துச்சு. நான் ஏதோ வடிவேலுதான் ஆளு வச்சு போன் பண்ணி கலாய்க்கறாரோனு நினைச்சு, 'சும்மா வையுங்க சார். என்னை ஏன் அந்தம்மா கூப்ட போறாங்க?'னு சொல்லிட்டேன். அப்புறமும் அதே போல போன்வந்தது. அதையும் திட்டுப்புட்டேன். அப்புறம் அம்மாவே நேரிடையாக பேசினாங்க. ``ஹலோ நான் பொதுச்செயலாளர்" னு குரல் கேட்டதுமே நெசமாகவே அம்மாதான் போன் பண்ணியிருக்காங்கனு பதறி.. ``இதோ வந்துடுறேன்மா.. ஐயோஅம்மா தாயே"னு உடனே போய்ப் பார்த்தேன்.

சிங்கமுத்து
சிங்கமுத்து

அவங்க எனக்கு பத்து நிமிஷம் டைம் கொடுத்திருந்தாங்க. ஆனா, அம்மா என்கிட்ட அரை மணிநேரம் பேசினாங்க. அவங்க அவ்ளோ நேரம் பேசுறதுக்குக் காரணம், 'பேச்சாளருக்கு இவன் சரிபட்டு வருவானா?'னு தெரிஞ்சக்கத்தான். இவன் கரெக்ட்டாகத்தான் பேசுறானா? இவன் மூளைக்குள் இருந்து அறிவு வருதானு தெரிஞ்சுக்கத்தான் அம்மா என்கிட்ட அவ்ளோ நேரம் பேசுனாங்கனு எனக்கும் தெரியும். அவங்களுக்கு பாசமும் இருக்கு. பேச்சாளராக நான் சரிபட்டு வருவேன்னு தெரிஞ்சதும், எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிச்சு அனுப்பி வச்சாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானும் மனசார உழைச்சேன். இதுவரைக்கும் கொஞ்ச நஞ்சமல்ல 1400 மீட்டிங்குகள் பேசியிருக்கேன். ஆனா, அதிமுகவில் இப்ப பேச்சாளர்கள் புறக்கணிப்படுகிறார்கள். பேச்சாளர்கள்தான் ஒரு கட்சியின் திட்டங்களை, செயல்பாடுகளை, திமுகவை அப்படி இப்படினு விமர்சிச்சு.. அதிமுகதான் சிறந்த கட்சி என்றுதான் பொதுமக்களிடத்தில் பேசுவார்கள். அது அதிமுகவுக்காகத்தானே பெனிஃபிட்டு. நூறு பேர்ல பத்து பேராவது இந்தப் பேச்சைக் கேட்டு ஓட்டுப்போடுவாங்க. ஐம்பதாவது ஆண்டு விழாவுக்கு கூட பேச்சாளர்களை கூப்பிட்டு தமிழ்நாடு முழுவதும் மீட்டிங்குகள் போடல. பல மீட்டிங்குகளை தவிர்க்கிறார்கள்.'' என்கிறார் சிங்கமுத்து..