Published:Updated:

"என் சம்பளத்தை இப்படித்தான் தீர்மானிக்கிறேன்!" - சிவகார்த்திகேயன் பகிரும் 'கணக்கு'

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

எல்லோரையும் சந்தோஷப்படுத்துற கமர்ஷியல் படங்கள் மட்டும்தான் நான் பண்றேன். அதில் வெவ்வேறு ஜானர்களை எடுத்துக்குறேன்

"இந்த வருஷத்தோட பெரிய ஹிட் படங்களில் ஒன்று 'நம்ம வீட்டுப் பிள்ளை.' இந்தப் படத்துக்கு முன்னாடி உங்களோட சில படங்கள் சரியாப் போகல. 'நம்ம வீட்டுப் பிள்ளை' திட்டமிட்டுப் பண்ணிய படமா?''

" 'ஹீரோ' படத்துக்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பிச்சு, வில்லன் மட்டும் முடிவாகாமல் இருந்தது. அப்போ பாண்டிராஜ் சார் என்னைச் சந்திச்சு 'ஒரு படம் பண்ணலாம். 7 நாள் கால்ஷீட் கொடுங்க. குழந்தை களுக்கான படமா இதை எடுத்துடலாம்'னு சொன்னார். அந்தக் கதை எனக்கு ரொம்பவே பிடிச்சது. ஆனா, போன வருஷம் வந்த 'கடைக்குட்டி சிங்கம்' செம ஹிட். 'இந்தக் கதையை எப்போ வேணாலும் பண்ணலாம். கடைக்குட்டி ஃப்ளேவர்ல ஒரு படம் பண்ணுங்க சார்'னு சொன்னேன். இப்படித்தான் 'நம்ம வீட்டுப் பிள்ளை' ஆரம்பிச்சது. என் சில படங்கள் நல்லாப் போகலைன்னு சொன்னீங்க. ஆனா, நீங்க குறிப்பிட்ட படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்கள்தான். கன்டென்ட்லதான் இன்னும் கூடுதலா கவனம் தேவைப்படுது.'' விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/34tBJbN

"கல்வித் திட்டம், கார்ப்பரேட் அரசியல் குறித்துதான் 'ஹீரோ' படத்தில் பேசப்போகிறாரா?''

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

"ஹீரோ கல்வித் திட்டத்தை மாத்துறான்ங்கிறதைத் தாண்டி, இப்போ படிக்கிற மாணவர்களுக்கு என்ன தேவைங்கிறதைப் படத்துல சொல்லியிருக்கோம். இதைக் கமர்ஷியலாவும், சர்வதேசத் தரத்திலும் கொடுக்க ட்ரை பண்ணியிருக்கோம்.''

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

"கமர்ஷியல் படங்கள்தான் உங்கள் ஏரியா... திடீர்னு சூப்பர் ஹீரோ, சயின்ஸ் ஃபிக்‌ஷன்னு வேறு வேறு ஜானர்கள்ல படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே?''

"எல்லோரையும் சந்தோஷப்படுத்துற கமர்ஷியல் படங்கள் மட்டும்தான் நான் பண்றேன். அதில் வெவ்வேறு ஜானர்களை எடுத்துக்குறேன். நம்மளை மூலதனமா வெச்சு போடப்படுற பணத்தை, தயாரிப்பாளர் திரும்ப எடுக்கணும். இதுதான் என் கணக்கு. இதுக்குள்ள ஸ்பெஷலா என்ன பண்ண முடியும்ங்கிறது மட்டும்தான் நான் பார்க்குறேன். என்னுடைய சம்பளத்தையும் இதை வெச்சுத்தான் நான் தீர்மானிக்கிறேன்.''

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

''தனுஷ் உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல். 'அசுரன்' படத்தில் அவருடைய நடிப்பு ரொம்பவும் பாராட்டப்பட்டது. படம் பார்த்தீங்களா?''

"தனுஷ் சார் பக்கத்துல இருந்து அவர் நடிப்பைப் பார்த்திருக்கேன். அவரோட முகத்துல சின்னச் சின்ன ரியாக்‌ஷன்ஸ் சேஞ்ச் ஆகுறதை '3' படத்துல எதிர்ல நின்னு பார்த்திருக்கேன். 'மத்தவங்களுக்கு முன்னாடி உங்க நடிப்பை நான் பார்த்துடறேன் சார்'னு அவர்கிட்ட சொல்லுவேன். இந்தியாவோட சிறந்த நடிகர்களில் தனுஷ் சார் முக்கியமானவர். அதுக்கு இன்னொரு உதாரணம்தான் 'அசுரன்'னு நினைக்கிறேன். யார்கிட்டயும் சாத்தியப்படாத நடிப்பு மொழியும், உடல் மொழியும் தனுஷ் சார்கிட்ட இருக்குன்றது 'காதல் கொண்டேன்' படத்திலிருந்தே தெரியும். அது இன்னும் இன்னும் அடுத்தடுத்த லெவலுக்குப் போயிட்டே இருக்கு.''

- தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன். சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த முழுமையான உரையாடலை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு!” - சில், தில் சிவகார்த்திகேயன் https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-actor-sivakarthikeyan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு