சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

"உதவ நினைக்கிற ஒவ்வொருத்தரும் ஹீரோதான்!”

பாலிவுட் நடிகர் சோனு சூட்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலிவுட் நடிகர் சோனு சூட்

இது மூலமா தினமும் 40,000 முதல் 50,000 பேருக்கு அன்னதானம் பண்ணிக்கிட்டிருக்கோம்.

மும்பை கனமழையால பாதிக்கப்பட்டிருக்கு. கூடிய சீக்கிரமே இந்தக் கசப்பான நாள்களிலிருந்து மீளும்னு நம்பிக்கை இருக்கு. எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்’’ நம்பிக்கை யுடன் பேசுகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.
சோனு சூட்
சோனு சூட்

``விதவிதமா நிறைய உதவிகள் செய்து வருகிறீர்கள். இதற்காக உங்களுக்கென்று தனி டீம் செயல்படுகிறதா?’’

‘`ஆமா, என் நண்பர்கள் டீம் இருக்கு. இவங்க இதுக்காகவே உழைக்கு றாங்க. உதவிக்காக எங்களைத் தேடி வரும் அழைப்புகள் உண்மை தானான்னு செக் பண்ணுறோம். இதுக்குப் பிறகு களத்துல இறங்கி உதவி செஞ்சிட்டு வரோம். இப்படித்தான் டிராக்டர் வாங்கிக் கொடுத்தது, டாக்டர்ஸை ப்ளைட்ல அழைச் சிட்டு வந்ததெல்லாம் நடந் தது. சக்தி அன்னதான திட்டம்’ என்னோட பெரிய கனவு. ரொம்ப நாளா பண்ண நினைச் சிக்கிட்டு இருந்த விஷயம். இப்போ இந்த லாக்டெளன்ல ஆரம்பிச்சிருக்கேன். இது மூலமா தினமும் 40,000 முதல் 50,000 பேருக்கு அன்னதானம் பண்ணிக்கிட்டிருக்கோம்.’’

"உதவ நினைக்கிற ஒவ்வொருத்தரும் ஹீரோதான்!”

``உதவிகளுக்கு நிறைய செலவாகுமே... எப்படி சமாளிக்கிறீர்கள்?’’

‘`என்னால முடிஞ்ச அளவுக்கு செய்றேன். இன்னும் நிறைய பேருக்கு உதவிகள் தேவையாயிருக்கு. சில நண்பர்கள் பண உதவி் செய்யறாங்க. வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் மக்கள் உதவிகள் கேட்டு வராங்க.எல்லார்கிட்டயும் ஜூம்லயும் போன்லயும் பேசிட்டு வரேன். வெளிநாடுகளில் தவிச்சுட்டி ருந்த பயணிகளுக்கு டிக்கெட் போட்டு சொந்த ஊருக்குப் போக உதவி செஞ்சேன். இதுக்கு முன்ன, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவங்க சொந்த ஊருக்குக் குழந்தை களோடு நடந்து போய்ட் டிருந்ததைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால அவங்க எல்லாரும் சொந்த ஊருக்குப் போறதுக்காக ஏற்பாடுகள் பண்ணலாம்னு தோணுச்சு. இதுக்காக 10 சொகுசுப் பேருந்துகளை ரெடி பண்ணினேன். அவங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும் கொடுத்திருந்தோம்.’’

``அரசியலுக்கு வருகிற எண்ணமிருக்கா?’’

‘`அரசியலுக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. கேமரா முன்னாடி நின்னு நடிக்கதான் ஆசைப்படுறேன். முக்கியமா, ஹீரோ மற்றும் வில்லன்ங்குற விஷயத்தைத் தாண்டி நிஜ வாழ்க்கையில் எல்லாரும் ஹீரோதான். குறிப்பா மத்தவங்களுக்கு உதவ நினைக்கிறதுதான் உண்மையான ஹீரோயிசம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைக் கண்டுபிடிச்சு அடையாளம் காணுறது முக்கியம்னு நினைக்குறேன்.’’

"உதவ நினைக்கிற ஒவ்வொருத்தரும் ஹீரோதான்!”

▶ விஜயகாந்த் நடித்த ‘கள்ளழகர்’ படத்தின் மூலமாக இந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சோனு சூட். இதைத் தொடர்ந்து விஜய்யின் ‘நெஞ்சினிலே’ படத்திலும் வில்லன் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

▶ தெலுங்கில் இவர் நடித்த ‘அருந்ததி’ திரைப்படம் இவருக்கு நந்தி விருது மற்றும் சிறந்த துணை நடிகருக்கான பிலிம் பேர் விருதை வாங்கிக் கொடுத்தது.

▶ மும்பையில் இயங்கும் அவரது சக்தி சாஹர் என்னும் பைவ் ஸ்டார் உணவகத்தை, அங்கிருக்கும் மக்கள் பயன்பாட்டுக்காக இந்தக் கொரோனாச் சூழலில் கொடுத்திருக்கிறார்.

▶ ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் தீவிர விசிறியான சோனு, ஜாக்கி சானுடன் இணைந்து `குங்பூ யோகா’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.

▶ சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சோனு சூட் பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதாக அறிவித்துள்ளார்.

▶ மஹாராஷ்டிர மாநில ஆளுநர் கோஷ்யாரி, இவரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

▶ தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடிக்கொண்டிருக்கும் போது சென்னை வடபழனியில் ஒரு சின்ன அறையில் தங்கியிருக்கிறார் சோனு. மேலும், சென்னையில் சில காலங்கள் இருந்ததால் மூலை முடுக்கெல்லாம் தனக்குத் தெரியும் எனக் கூறுகிறார்.

▶ தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஆங்கிலம், மாண்டரின், இந்தி எனப் பல மொழிகளில் தொடர்ந்து நடித்துவருகிறார்.