Published:Updated:

`` `சீதக்காதி' ஆச்சர்யம்... `தளபதி' அதிசயம்!" வைபவ் அண்ணனின் விஜய் 64 அனுபவம்

சுனில் ரெட்டி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்தில் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இதில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர், சுனில் ரெட்டி. யார் இந்த சுனில் ரெட்டி?

`` `சீதக்காதி' ஆச்சர்யம்... `தளபதி' அதிசயம்!" வைபவ் அண்ணனின் விஜய் 64 அனுபவம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்தில் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இதில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர், சுனில் ரெட்டி. யார் இந்த சுனில் ரெட்டி?

Published:Updated:
சுனில் ரெட்டி

விஜய் சேதுபதியின் `சீதக்காதி' படத்தில் காமெடி கலந்த வில்லன் ரோலில் நடித்திருந்தார், சுனில் ரெட்டி. நடிகர் வைபவின் அண்ணன் இவர். ஷூட்டிங் அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` நான், ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். வீட்டுல அப்பாவுக்கும் தம்பிக்கும் சினிமாதான் தொழில். அப்பா கோதண்டராமி ரெட்டி தெலுங்குல நிறைய படங்கள் டைரக்‌ஷன் பண்ணியிருக்கார். தம்பி வைபவ் ஹீரோவா நடிச்சிட்டிருக்கார். இயக்குநர் ஆகணும்னு ஆசைப்பட்டேன், கடைசியில் நடிகனாகிட்டேன். `சீதக்காதி' படத்தோட வாய்ப்பு வந்ததே ஆச்சர்யம். இதில், விஜய் படத்தோட வாய்ப்பும் வந்திருக்கு. ஆச்சர்யங்கள், அதிசயங்கள் கலந்ததுதானே வாழ்க்கை'' என்கிறார் சுனில் ரெட்டி.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

`` `சீதக்காதி'க்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் எதுவும் வரல. அதனாலேயே எந்தப் படத்துலயும் நடிக்கல. `சீதக்காதி' படத்துல எனக்கும் விஜய் சேதுபதிக்கும் காம்பினேஷன் சீன்ஸ் இருக்காது. ஷூட்டிங் ஸ்பாட்லகூட அவரை நேர்ல பார்க்கல. ப்ரிவ்யூ ஷோ அப்பதான் அவரைப் பார்த்தேன். கட்டிப்பிடிச்சிக்கிட்டு, `வாடா நடிகா வா... ரொம்ப நல்லா பண்ணியிருக்க... நடிப்பை எப்பவும் விட்றாத'னு சொன்னார். முதல்முறையா பார்க்கும்போதே ஃப்ரெண்டு மாதிரி பேசினார். நம்பிக்கையான வார்த்தைகளை மட்டும்தான் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `சீதக்காதி' படத்தில் என்னோட நடிப்பை கவனிச்சிருக்கார். விஜய்யை வைத்து அவர் எடுக்கும் படத்துக்கு நான் சரியாயிருப்பேன்னு அவருக்குத் தோணியிருக்கு. இது சம்பந்தமா வைபவுக்குதான் முதலில் போன் வந்தது. அவன்கிட்ட என்னோட போன் நம்பர் வாங்கியிருக்கார். வைபவ் என்கிட்ட நடந்த விஷயத்தைச் சொன்னப்போ ஆச்சர்யமா இருந்தது. லோகேஷின் `மாநகரம்', `கைதி' படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். திரைக்கதையைச் சரியாக வடிவமைத்திருப்பார். அவர்கிட்ட இருந்து போன் வர்ற வரைக்கும் பதற்றமாவே இருந்தது. படத்தோட கதையைச் சொல்லிட்டு என்னோட கேரக்டர் பத்தியும் சொன்னார். மறுவார்த்தை பேசல... உடனே ஓகே சொல்லிட்டேன்.

சுனில் ரெட்டி
சுனில் ரெட்டி

தம்பி வைபவ்கிட்ட கன்ஃபார்ம்னு சொன்னேன். அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான். வீட்டுல இருக்குற பசங்கதான் எங்களை விட ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணாங்க. என் பொண்ணு விஜய்யோட ரசிகை. `விஜய் சாரைப் பார்க்கணும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டுப் போங்க'ன்னு கேட்டாங்க. ``முதல்ல நான் ஸ்பாட்டுக்கு போறேன்... அப்புறம் நாமெல்லாம் போலாம்''னு சொன்னேன். விஜய் படத்துல நடிக்க எல்லாருக்கும் ஆசை இருக்கும். ரெண்டாவது படத்துலேயே அது எனக்கு அமைஞ்சது அதிசயம்தான்.

டெல்லில முதல் ஷெட்யூல் முடிச்சிட்டு வந்துட்டேன். செகண்ட் ஷெட்யூலுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். பாலாஜி தரணிதரன்கிட்ட விஜய் படத்துல கமிட்டானதைச் சொன்னேன். `சூப்பர்ங்க, நல்லா பண்ணுங்க. தனித்துவமான கேரக்டரா செலெக்ட் பண்ணுங்க'ன்னு சொன்னார். படத்தோட முக்கியமான கதாபாத்திரத்துல நான் நடிக்கிறேன். அதனால கேரக்டர் பத்தி எதுவும் சொல்ல முடியாது. அது மட்டும் சர்ப்ரைஸ். ரெண்டாவது படத்துலயும் விஜய் சேதுபதி இருக்குறது சந்தோஷமா இருக்கு. அவர்கூட காம்பினேஷன் சீன்ஸ் இருக்குமானு தெரியல. ஷூட்டிங் போகப்போகத்தான் எல்லாம் தெரியும்'' என்கிறார் சுனில் ரெட்டி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism