Published:Updated:

எம்.ஜி.ஆரின் படம் பார்த்துட்டு எங்க அம்மா காலை பிடிச்சு கண்ணீர் விட்டேன்! - நெகிழும் தம்பி ராமையா

தம்பி ராமையா

''நைட்ஷோ முடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும், அசந்து தூங்கிட்டு இருந்த எங்க அம்மா காலை பிடிச்சு, அழுறேன். 'இனி உன்னை எதிர்த்து பேச மாட்டேன்ம்மா'னு சொல்லிச் சொல்லி அழுறேன்...''

எம்.ஜி.ஆரின் படம் பார்த்துட்டு எங்க அம்மா காலை பிடிச்சு கண்ணீர் விட்டேன்! - நெகிழும் தம்பி ராமையா

''நைட்ஷோ முடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும், அசந்து தூங்கிட்டு இருந்த எங்க அம்மா காலை பிடிச்சு, அழுறேன். 'இனி உன்னை எதிர்த்து பேச மாட்டேன்ம்மா'னு சொல்லிச் சொல்லி அழுறேன்...''

Published:Updated:
தம்பி ராமையா

'' `அடிமைபெண்' என் வாழ்க்கையையே மாத்தின படம். அந்தப் படம் ரிலீஸானப்போ சின்னப் பையனா இருந்தேன். என் குடும்ப சூழல் வறுமையில் இருந்துச்சு. அந்த சூழலிலும் நான் எம்.ஜி.ஆர்.பட ரசிகன். பக்கத்து ஊர் தியேட்டர்ல `அடிமைப் பெண்' ஓடுது. அதைப் பார்க்குறதுக்காக ஐம்பது பைசா காசு கையில இல்ல. என்னால படம் பார்க்காம இருக்கவும் முடியல. அதுக்காக வீட்டுல கோழி அடைகாக்க வச்சிருந்த அஞ்சாறு முட்டைகளை திருடிட்டேன். அதை எங்க அப்பா குருவா மதிக்கற மைக்கேல் பிள்ளை வாத்தியார்கிட்ட பொய் சொல்லி வித்திருக்கேன். அன்னிக்கு தியேட்டர்ல 'அடிமைப்பெண்' பார்க்கப் போனேன். அது என் மனசையே மாத்துற படமா இருக்கும்னு தெரியாது. அந்த படத்தை பார்த்து முடிச்சிட்டு.. '' - நினைவுகளில் இயக்குநரும் நடிகருமான தம்பிராமையாவுக்கு குரல் கணத்தது.

''ஒரு தப்பை செஞ்சுட்டு, இனிமே செய்யமாட்டேன்னு சொல்லிட்டு, அதை செய்யாமல் இருந்தவங்கனு யாரையும் சொல்ல முடியாது. இனிமே குடிக்கவே மாட்டேன்னு சொல்வாங்க. ஆனா, அடுத்தநாளே நண்பர் வாங்கிக் குடுத்தார்னு குடிச்சிட்டு வந்து நிப்பாங்க. இப்படி பல உதாரணங்கள் அடுக்க முடியும். ஆனா, நான் என் சின்ன வயசில எங்க அம்மாக்கிட்ட எதிர்த்து பேசியிருக்கேன். இப்ப அவங்க இல்லை. சில வருஷங்களுக்கு முன்னாலதான் அவங்க இறந்தாங்க. அவங்க இருக்கும்போது, நடந்த சம்பவம் இது. நான் சிறுவனா இருக்கறப்ப அவங்ககிட்ட நீ ஏன்மா இத்தனை பெத்த? என்னையை மட்டும் பெத்ததோடு, நீ ஒரு குழந்தையோடு நிறுத்தியிருக்க வேண்டியதுதானே? எதுக்குமா அஞ்சு குழந்தை பெத்தே?னு கோபமா பேசியிருக்கேன். அப்ப என் குடும்ப சூழல் அப்படி.

தம்பி ராமையா
தம்பி ராமையா

படம் பாக்குறதுக்காக வீட்டுல கோழி அடைகாக்க வச்சிருந்த அஞ்சாறு முட்டைகளை திருடிட்டேன். அதை எங்க அப்பா குருவா மதிக்கற மைக்கேல் பிள்ளை வாத்தியார்கிட்ட பொய் சொல்லி வித்திருக்கேன். அன்னிக்கு தியேட்டர்ல 'அடிமைப்பெண்' பார்க்கப் போனேன். படத்துல எம்.ஜி.ஆர்., 'தாய் இல்லாமல் நானில்லை.. ' பாடுறார். என் கண்ணுல இருந்து பொலபொலனு கண்ணீர் கொட்டுது. நைட்ஷோ முடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும், அசந்து தூங்கிட்டு இருந்த எங்க அம்மா காலை பிடிச்சு, அழுறேன். 'இனி உன்னை எதிர்த்து பேச மாட்டேன்ம்மா'னு சொல்லிச் சொல்லி அழுறேன்.

என் கண்ணீர் அவங்க கால்ல பட்டு, எழுந்து, என்னை 'சரிடாய்யா.. போய் சாப்பிடு'னு தேத்தினாங்க. அந்த சம்பவத்துக்கு பிறகு அவங்கள ஒருநாளும் எதிர்த்துப் பேசினதில்ல. எங்க அப்பா குருவா மதிக்கற மைக்கேல் பிள்ளை வாத்தியார்கிட்டக் நான் முட்டையை திருடி வித்ததை நினைச்சு வருத்தமும் பட்டிருக்கேன். அந்த தப்பை மறுபடியும் பண்ணக்கூடாதுனு நினைச்சேன். அதன்பிறகு திருடுற எண்ணமும் வந்ததில்ல.'' என்கிறார் தம்பி ராமையா.