Published:Updated:

கதை மட்டும்தான் காலம் கடந்து நிற்கும்!

வெற்றி
பிரீமியம் ஸ்டோரி
வெற்றி

முதல்ல ஸ்ரீகணேஷ் என்கிட்ட ‘கருவி'னு ஒரு கதை சொன்னார். ரொம்ப நல்ல கதை. அந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகிப் போய்க்கிட்டிருந்தது.

கதை மட்டும்தான் காலம் கடந்து நிற்கும்!

முதல்ல ஸ்ரீகணேஷ் என்கிட்ட ‘கருவி'னு ஒரு கதை சொன்னார். ரொம்ப நல்ல கதை. அந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகிப் போய்க்கிட்டிருந்தது.

Published:Updated:
வெற்றி
பிரீமியம் ஸ்டோரி
வெற்றி

`8 தோட்டாக்கள்', `ஜீவி’... இந்த இரு படங்களில் தன் பெயரை கோலிவுட்டில் பதிய வைத்தவர், நடிகர் வெற்றி. சின்ன பட்ஜெட்டில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வளர்ந்துவரும் நாயகன். ஆறேழு படங்கள் இவர் நடிப்பில் வெளிவரக் காத்திருக்கின்றன. வெற்றியைச் சந்தித்தேன்.

``சினிமாப் பயணம் எப்படி ஆரம்பமாச்சு?’’

‘‘சொந்த ஊர் திருநெல்வேலி. படிச்சதெல்லாம் சென்னையில்தான். சிவில் இன்ஜினீயரிங் படிச்சேன். அப்புறம், லண்டனில் மேல் படிப்பு பண்ணினேன். ஃபேமிலியில ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி இருக்கு. அதை நடத்தணும்னுதான் வெளிநாடு போய் கோர்ஸ் பண்ணினேன். படிச்சு முடிச்சுட்டு சென்னை வந்த சமயத்துல ரியல் எஸ்டேட் துறை ரொம்பத் தொய்வடைஞ்சிருந்தது. கையில இருந்த புராஜெக்ட்ஸ் எதுவும் விற்கலை. அதனால, புது புராஜக்ட்ஸ் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணினேன். அப்போ என்ன பண்ணலாம்னு குழப்பமா இருந்தது. சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை இருந்தது. என் ப்ரெண்ட் கூத்துப்பட்டறையில நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்தான். அவன்தான் கூத்துப்பட்டறை வரச் சொன்னான். முத்துசாமி சார் இருக்கும்போதே கூத்துப்பட்டறையில சேர்ந்து ஆறு மாசம் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அப்புறம், மைம் கோபி அண்ணன்கிட்ட போய் மைம் கத்துக்கிட்டேன். அப்படித்தான் சினிமாப் பயணம் ஆரம்பமாச்சு.’’

கதை மட்டும்தான் காலம் கடந்து நிற்கும்!

`` `8 தோட்டாக்கள்' உங்கள் முதல் படம். நீங்கதான் தயாரிப்பாளரும்கூட. அதுக்குக் கிடைச்ச வரவேற்பை எப்படி எடுத்துக்கிட்டீங்க?’’

‘‘ரொம்ப சந்தோஷமா இருந்தது. அது என் அதிர்ஷ்டம்னு நினைக்கிறேன். முதல்ல ஸ்ரீகணேஷ் என்கிட்ட ‘கருவி'னு ஒரு கதை சொன்னார். ரொம்ப நல்ல கதை. அந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகிப் போய்க்கிட்டிருந்தது. அப்புறம் ஒரு நாள் மீட் பண்ணும்போது, ‘8 தோட்டாக்கள்' லைனைச் சொன்னார். அப்போ அதுக்குப் பெயர் வைக்கலை. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘அந்த எஸ்.ஐ கேரக்டர் பண்ணுங்க'ன்னு சொன்னார். முதல் படம் நடிக்கிறதே பதற்றம்தான். இதுல முதல் படமே போலீஸா எப்படி நடிக்கிறது, செட்டாகுமான்னு நிறைய கேள்விகள் இருந்தது. ஆனா, ஸ்ரீகணேஷ் கொடுத்த நம்பிக்கையிலதான் நடிச்சேன். பவர்ஃபுல்லான போலீஸா இல்லாமல், இதுவரை காட்டாத ஒரு போலீஸ் கேரக்டர் அது. என் கேரக்டரைத் தாண்டி, படமா நல்ல படம்னு பெயர் வாங்கிடுச்சு. தெலுங்குல ரீமேக் பண்ணி ‘ஆஹா' தளத்துல வெளியாகி அங்கேயும் நல்ல ரெஸ்பான்ஸ். இப்போ இந்தி ரீமேக் உரிமையும் கொடுத்துட்டோம். பெரிய ஸ்டார்கள்கிட்ட பேசிட்டிருக்காங்க. யார் பண்றாங்கன்னு பார்க்க ஆவலா இருக்கேன்.’’

``முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இயங்கினது எப்படி இருந்தது?’’

‘‘அப்பாவுக்கு சினிமா தெரியாது. ஒருநாள் ஷூட்டிங் எவ்வளவு செலவாகும், என்னென்ன செலவுகள் இருக்குன்னு எதுவுமே தெரியாது. நான் சினிமாவுக்குள்ள போகணும்னுதான் இந்த முயற்சியை எடுத்தார். பெரிய செலவில்லாமல் நல்ல கதையைக் கொடுத்தாலே மக்கள்கிட்ட ரீச்சாகும்ங்கிற நம்பிக்கை மட்டும்தான் இருந்தது அப்பாவுக்கு. ‘8 தோட்டாக்கள்', ‘ஜீவி' இந்த ரெண்டு படங்களுக்கான பட்ஜெட்டை ஒரே படத்துல போட்டு நாலு பாட்டு, நாலு ஃபைட்னு என்னை மட்டுமே முன்னிறுத்திப் படம் பண்ணியிருக்கலாம். ஆனா, அதை நாங்க பண்ணலை. கதைதான் எப்போவும் பேசும்னு எங்களுக்கு நல்லாவே புரிதல் இருந்தது. முன்னாடி சொன்ன ஃபார்முலாவுல நிறைய ஹீரோக்கள் வந்திருக்காங்க. நாலஞ்சு படத்துல அவங்க எங்கே போனாங்கன்னே தெரியாது. எப்பவும் கதைமட்டும்தான் காலம் கடந்து நிற்கும். தயாரிப்பு, நடிப்புன்னு முதல் படத்திலேயே ரெண்டு குதிரையில ஓடுறது சிரமமாதான் இருந்தது. நிறைய கத்துக்கிட்டேன்.’’

``முதல் பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த படத்திற்கான கதைத் தேர்வுல எவ்வளவு கவனமா இருந்தீங்க?’’

‘‘ ‘8 தோட்டாக்கள்' படத்துக்குப் பிறகு, நிறைய போலீஸ் கதைகளா வந்தது. அப்படி இல்லைனா, நிறைய பேசாமல் அமைதியா இருக்கிற இன்ட்ரோவெர்ட் கேரக்டரா வந்தது. ஒரே மாதிரி பண்ணினா நல்லாருக்காதுன்னு எதையும் கமிட் பண்ணலை. அப்படியே ஒரு வருஷம் போயிடுச்சு. அப்போதான், ‘ஜீவி' கதை வந்தது. பாபு தமிழ் என்கிட்ட சொல்லும்போதே இதை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு நினைச்சுக்கிட்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ‘ஜீவி’ நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.என் அடையாளமே இந்த ரெண்டு படங்கள்தான்.’’

கதை மட்டும்தான் காலம் கடந்து நிற்கும்!

``சினிமாவுக்கு வந்த இந்த ஐந்து வருடங்களில் நீங்க கத்துக்கிட்ட விஷயம் என்ன?’’

‘‘ஓவர் நைட்ல சிலர் ஸ்டாராகிடுவாங்க. நான் ஒவ்வொரு அடியா எடுத்து வெச்சு, பொறுமையாவே போகலாம்னு இருக்கேன். அதுதான் கற்றலையும் அனுபவத்தையும் கொடுக்கும்னு நம்புறேன்.’’

``கிட்டத்தட்ட ஆறேழு படங்கள் வெச்சிருக்கீங்க. ஒவ்வொரு படமும் என்ன மாதிரி இருக்கும்?’’

‘‘லாக்டெளன் முடிஞ்ச பிறகு, தொடர்ந்து நடிச்சுட்டுதான் இருக்கேன். ‘பம்பர்', கேரளாவுல நடக்கிற லாட்டரி தொடர்பான உண்மைக்கதை. நானும் ஷிவானி நாராயணனும் நடிச்சிருக்கோம். 60 நாள் ஒரே ஷெட்யூல்ல முடிச்சோம். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ‘ஜீவி' எங்கே முடிஞ்சதோ அங்கிருந்து தொடங்கும் கதைதான் ‘ஜீவி 2'. ரொம்ப நல்லா வந்திருக்கு. ‘தீங்கிரை' படத்துல ஸ்ரீகாந்த் சாருடன் சேர்ந்து நடிச்சிருக்கேன். பயங்கரமான சைக்கோ த்ரில்லர் கதை. அதுல மைம் ஆர்ட்டிஸ்டா நடிச்சிருக்கேன். மைம் கத்துக்கிட்டது எனக்கு உதவியா இருந்தது. ‘மெமரீஸ்' படத்துல அசிஸ்டென்ட் டைரக்டரா நடிச்சிருக்கேன். ‘ரெட் சாண்டல்' படமும் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். இதுபோக, ‘உல்ஃப்'னு ஒரு படத்துல நடிச்சிட்டிருக்கேன். ‘பஞ்சதந்திரம்', ‘பம்மல் கே.சம்பந்தம்' மாதிரி ஜாலியான படங்கள் பண்ண ஆசைப்படுறேன்.’’