Published:Updated:

``வாழ்க்கையில ரெண்டு வருஷம் ஆடிஷன்லே போயிடுச்சு; ஆனா இப்போ?!" - `ஜீவி' வெற்றி

வெற்றி
வெற்றி

`8 தோட்டக்கள்' மூலம் நடிகராக அறிமுகமான வெற்றி, அதன் பின்னர் `ஜீவி' படத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்து கேட்டோம்.

``சினிமாவில் நடிக்கிறதுக்காக நிறைய ஆடிஷன் போயிருக்கேன். விஜய்யையும் தனுஷையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில நடிப்புத் திறன்களை இவங்களைப் பார்த்து கத்துக்கிட்டிருக்கேன். தனுஷ் சார் நடிச்ச `மாரி' படத்தோட ஆடிஷனுக்கும் நான் போயிருக்கேன். ஆனா, நான் தேர்ந்தெடுக்கப்படல. மணிரத்னம் சாரோட `காற்று வெளியிடை' படத்துக்கு ஆடிஷன் போயிருக்கேன். அதுலேயும் செலக்ட் ஆகல. இப்படியே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆடிஷன்களுக்கு மட்டுமே போயிட்டு அதுக்காகவே காசு செலவு பண்ணியிருக்கேன். இப்ப நான் நடிச்ச படம் ரிலீஸாகி `நல்லா இருக்கு'னு மத்தவங்க சொல்றதைக் கேட்கும்போது சந்தோஷமா இருக்கு. இன்னும் ஓட வேண்டிய தூரம் நிறைய இருக்கு. பெரிய இயக்குநர்கள் படங்கள்ல நடிக்கிறதுக்கு நான் இன்னும் கடுமையா உழைக்கணும்" என்று அவர் நடித்திருக்கும் படங்கள் பற்றி பேசினார்.

``வாழ்க்கையில ரெண்டு வருஷம் ஆடிஷன்லே போயிடுச்சு; ஆனா இப்போ?!" - `ஜீவி' வெற்றி

``இந்த ஜானர் படங்கள்ல வெற்றி நடிச்சா நல்லா இருக்கும்னு நிறைய பேர் தேடி வர்றாங்க. கதை பிடிச்சிருந்தா உடனே ஓகே சொல்லிடுவேன். அப்படி ஓகே சொன்ன படங்களுக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கல. இருந்தாலும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு வித்தியாசமா இருக்கும்னு நடிச்சுகிட்டிருக்கேன். முக்கியமா என்னைக் கவனிக்கிற ஆடியன்ஸ் `வெற்றி படம்னா நல்லா இருக்கும், கொடுத்த காசுக்கு பிரயோஜனமா இருக்கும்'னு படம் பார்க்க வர்றாங்க. என்னை வெச்சு படம் எடுக்கிற இயக்குநர்களும் என்னோட வளர்ச்சியில ஆர்வமா இருக்காங்க. கோபிநாத், ஶ்ரீகணேஷ் சார்கூட தொடர்ந்து பேசிக்கிட்டிருக்கேன். `குருதி ஆட்டம்' ரிலீஸுக்கு ரெடியாகிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு."

`` 'C/O காதல்'ங்கிற தெலுங்கு படத்தோட ரீமேக்ல நடிச்சு முடிச்சிருக்கேன். ஹைதராபாத்துக்கு படத்தோட பூஜைக்காக போயிருந்தேன். அப்ப படத்தோட தயாரிப்பாளர், தெலுங்குல இந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது; கமிட்டாகிட்டேன். ஆந்தாலஜியா எடுக்கிற இந்தப் படத்துல என்னோட கதை சின்ன பகுதியா 20 நிமிஷம் வரும். குறைவான நேரம் வந்தாலும் ஆடியன்ஸுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும். முந்தைய ரெண்டு படங்கள்ல பண்ணாத கேரக்டரை பண்ணியிருக்கேன். காதல் கதையில `தாடி'ங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். என்னோட ஜோடியா `இறுதிச் சுற்று'ல நடிச்ச மும்தாஜ் நடிச்சிருக்காங்க. மணிரத்னம் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தவர் இந்தப் படத்தை இயக்கியிருக்கார். தமிழ்ல இது இவரோட முதல் படம்."

``வாழ்க்கையில ரெண்டு வருஷம் ஆடிஷன்லே போயிடுச்சு; ஆனா இப்போ?!" - `ஜீவி' வெற்றி

``இதுதவிர ஶ்ரீகாந்த் இயக்குற `வனம்' படத்துல காலேஜ் ஸ்டூடன்ட் கேரக்டர்ல நடிச்சு முடிச்சிருக்கேன். சம்மர் ரிலீஸுக்குப் பிளான் பண்ணியிருக்காங்க. `தடம்' படத்துல நடிச்ச ஸ்ம்ருதி வெங்கட் எனக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் சார்னு சீனியர் நடிகர்களோட இதுல நடிச்சிருக்கேன். பூர்வ ஜென்மம் பத்தி பேசக்கூடிய ஃபேன்டஸி த்ரில்லர் ஜானர் படம். நடிப்பு அனுபவமே ரொம்ப சுவாரஸ்யமா இருந்து.''

``ஷ்யாம் பிரவீன்னு ரெண்டு இயக்குநர்கள் எடுக்கிற `மெமரீஸ்'னு படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்ல இப்போ இருக்கேன். இவங்க மலையாளத்துல நிறைய குறும்படங்கள் எடுத்திருக்காங்க. படத்தோட ஷூட்டிங் 10 நாளா போயிட்டிருக்கு. சைக்கோ த்ரில்லர் ஜானர்ல படம் தயாராகிட்டிருக்கு. படம் முழுக்க கேரளாவுல ஷூட் பண்ண இருக்கோம். இங்கேயும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு பேசுறது எனக்கு சந்தோஷமா இருக்கு. `சினிமா டைரக்‌ஷனுக்காக லொக்கேஷன் பார்க்க வர்ற ஒருத்தன், எதிர்பாராத விதமா ஒரு இடத்துல மாட்டிக்கிட்டு எப்படித் தப்பிக்கிறான்கிறது'தான் கதை" என்கிறார் நடிகர் வெற்றி.

அடுத்த கட்டுரைக்கு