Published:Updated:

``இங்கிலாந்துல இன்ஜினீயரிங் படிச்சுட்டு, சென்னைக்கு வந்தது இதுக்காகத்தான்!'' - நடிகர் வெற்றி

வெற்றி

``எதைப் பண்ணணும், பண்ணக் கூடாதுனு எனக்கு நான் பார்த்த படங்கள்தான் சொல்லிக் கொடுத்தது.'' என்கிறார், '8 தோட்டாக்கள்', 'ஜீவி' படங்களின் நாயகன் வெற்றி.

``இங்கிலாந்துல இன்ஜினீயரிங் படிச்சுட்டு, சென்னைக்கு வந்தது இதுக்காகத்தான்!'' - நடிகர் வெற்றி

``எதைப் பண்ணணும், பண்ணக் கூடாதுனு எனக்கு நான் பார்த்த படங்கள்தான் சொல்லிக் கொடுத்தது.'' என்கிறார், '8 தோட்டாக்கள்', 'ஜீவி' படங்களின் நாயகன் வெற்றி.

Published:Updated:
வெற்றி

``வார வாரம் வெள்ளிக்கிழமை தியேட்டர் பக்கம்போனா, என்னைப் பார்க்கலாம். எல்லாப் படங்களையும் பார்த்திடுவேன். ஒரு படம் பார்க்கும்போது, எது போர் அடிக்குது, எது சுவாரஸ்யமா இருக்குனு நமக்குத் தெரியும். இப்படிப் பல படங்களைப் பார்த்துதான் கதைகளைத் தேர்ந்தெடுக்கிறது எப்படினு கத்துக்கிட்டேன். சினிமாதான் என் வாழ்க்கைனு முன்னாடியே முடிவு பண்ணியிருந்தேன். அதனால, இங்கிலாந்துல சிவில் இன்ஜினீயரிங் படிச்சுட்டு, சென்னைக்கு வந்துட்டேன்.

ஜீவி
ஜீவி

அப்பா எனக்காக சென்னையில் பிசினஸ் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார். ஆனா, எனக்கு சினிமாவுல நடிக்க ஆசை. அதனால, கூத்துப் பட்டறையில சேர்ந்து கத்துக்க ஆரம்பிச்சேன். பிறகு, `மைம்' கோபி சாரின் மைம் டீம்ல கொஞ்சநாள் டிராவல் பண்ணேன். நிறைய மேடை நாடகங்கள் பண்ணிக்கிட்டிருந்தேன். வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கிட்டு இருந்தது. சினிமாவுல நடிக்க வாய்ப்பு கேட்டுப் பல அலுவலகங்களுக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தேன். அப்பாதான், 'வாய்ப்புக்காக ரொம்ப அலையாதே. கவலைப்படாம இரு. நாமளே ஒரு படத்தைத் தயாரிப்போம்'னு சொன்னார். அதுதான், '8 தோட்டாக்கள்' படம்!" என்று சினிமாவுக்கு வந்த கதையைச் சொன்னார், வெற்றி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

" '8 தோட்டக்கள்' படத்துக்குப் பிறகு இத்தனை வருட இடைவெளி ஏன்?"

"இயக்குநர் ஶ்ரீகணேஷ் '8 தோட்டாக்கள்' கதையைச் சொன்னப்பவே ரொம்ப ஆர்வமா இருந்தேன். அவர் சொன்ன ஹீரோவுக்கு ஏத்த மாதிரி என் உடல்மொழியை மாத்திக்கிட்டேன். இந்தப் படத்துல நமக்குப் பெரிய கேரக்டர், வெயிட் கிடையாதுனு கதையைக் கேட்கும்போதே தெரியும். ஆனா, அதையெல்லாம் தாண்டி கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எல்லாத் தரப்பு ஆடியன்ஸையும் '8 தோட்டாக்கள்' திருப்திப்படுத்தும்னு தெரிஞ்சுதான் நானும், அப்பாவும் இந்தக் கதையைத் தயாரிக்க இறங்கினோம். இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. எல்லாமே '8 தோட்டாக்கள்' கேரக்டர் சாயலிலேயே இருந்ததுனால, ஒப்புக்கல. ஒருவேளை இயக்குநர்கள் எல்லோரும் 'இவனுக்கு இவ்வளவுதான் நடிக்க வரும்'னு நினைச்சிட்டாங்களானு தெரியல. அதனால, அந்தப் படத்துக்கு அப்படியே நேரெதிரா இருக்கிற ஒரு கேரக்டருக்காகக் காத்திருந்தேன். 'ஜீவி'யில அது கிடைச்சது."

வெற்றி
வெற்றி

" 'ஜீவி' வாய்ப்பு எப்படி வந்தது?"

"இந்தப் படத்தோட இயக்குநர் கோபிநாத்தும், கதாசிரியர் பாபு தமிழும் என்னைச் சந்திச்சு கதையைச் சொன்னாங்க. முக்கியமா, என் கேரக்டர் பற்றி விவரிச்சப்போ, அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வித்தியாசமாவும் இருந்தது. அதனால, உடனே நடிக்க ஓகே சொல்லிடேன். என் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னோட கேரக்டர் மாதிரியே, இந்தப் படத்தோட கேரக்டரும் இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் ஒரு சின்ன ஆர்வத்தோடுதான் நான் அப்ரோச் பண்ணுவேன். ரிமோட், கார் இதெல்லாம் என் கையில கிடைச்சா, அதுக்குள்ள என்ன இருக்குனு பிரிச்சுப் பார்த்திடுவேன். படத்தோட வசனங்களை டெலிவரி பண்றதுல மட்டும் ரொம்பக் கவனமா இருந்தேன். ஏன்னா, பாபு தமிழ் சார் அழுத்தமான வசனங்களை எழுதியிருந்தார். இந்தப் படத்துக்காக கோபிநாத்தும், பாபு தமிழ் சாரும் அதிகமா உழைச்சிருக்காங்க."

2015-ல இருந்து இந்தக் கதையைப் பல பெரிய ஹீரோக்களுக்குச் சொல்லியிருக்காங்க. யாரும் நடிக்க ஓகே சொல்லல. என் நல்ல நேரம். இந்தக் கதை என்கிட்ட வந்தது.
வெற்றி
வெற்றி
வெற்றி
ஜீவி

" 'மைம்' கோபி, கருணாகரன் பற்றி?"

"என் ரெண்டு படத்துலேயும் 'மைம்' கோபி சார் நடிச்சிருப்பார். நல்ல மனிதர் அவர். அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தாலே நமக்குப் பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும். முதல் முறையா கருணாகரன் சார்கூட சேர்ந்து நடிச்சேன். அவர்கூட நடிக்கிறதுக்குக் கொஞ்சம் பயந்தேன். அவர் ரொம்ப நட்பாதான் இருந்தார். எல்லாத்தையும் சரியா டீல் பண்ணுவார். ஒவ்வொரு காட்சியும் டேக் போறதுக்கு முன்னாடி டயலாக் டெலிவரி சரியா இருக்கான்னு நடிச்சுப் பார்த்துட்டுதான் போவார்."

"யாரோ ஒருத்தருக்கு நடந்தது, நமக்கு நடந்த மாதிரி இருக்கும்னு படத்துல சொல்லியிருப்பாங்க. அதுமாதிரி, உங்க வாழ்க்கையில ஏதாவது நடந்திருக்கா?"

"என் வாழ்க்கையில இதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கல. ஒருவேளை தேடிப் பார்த்தா, ஏதாவது இருக்கலாம். படம் பார்த்த பலரும் அவங்க வாழ்க்கையில இப்படியான சம்பவங்கள் நடந்ததா சொன்னாங்க. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இப்போ நடந்துக்கிட்டு இருக்கு. அதுல, 1992-ல் பாகிஸ்தானுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இந்த வருடம் நடந்துக்கிட்டிருக்கிற போட்டியிலும் நடக்குது. கிரிக்கெட்டைத் தொடர்ந்து ஃபாலோ பண்றவங்களுக்கு இது புரியும்."

கருணாகரன்
கருணாகரன்

"பெரிய ஹீரோ ஆகுறதுக்கு கமர்ஷியல் படங்கள்தான் சரியான தேர்வு. உங்களுக்கு அப்படி ஒரு ஆசை இல்லையா?"

"கமர்ஷியல் படங்கள் மட்டும் பண்ணாதான் பெரிய ஹீரோ ஆகமுடியும்னு எனக்குத் தோணல. விஜய் சேதுபதி அப்படி வரலையே! அவர் வித்தியாசமான கதைகள், வித்தியாசமான ஜானர்களைத் தேர்ந்தெடுத்துதான் மேலே வந்திருக்கார். விஜய் ஆண்டனி சார் தேர்ந்தெடுக்கிற கதைகளும் வித்தியாசமா இருக்கும். அதுமாதிரி, நானும் படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கு சலிப்பை ஏற்படுத்தாத கதைகளில்தான் நடிப்பேன். பாட்டு, ஃபைட் இருக்கணும்னு நினைக்கமாட்டேன்." என்று முடித்தார், வெற்றி.