Published:Updated:

“ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க சீரியலில் நடிச்சேன்!”

விக்னேஷ்
பிரீமியம் ஸ்டோரி
விக்னேஷ்

பணத்தை இரட்டிப்பாத் தர்றோம்’னு சொல்லி ஏமாத்தற இந்த மாதிரி ஆளுங்ககிட்ட மாட்டிக்கிட்டவங்களை, பேராசைக்காரங்களாப் பார்க்குது இந்தச் சமூகம்.

“ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க சீரியலில் நடிச்சேன்!”

பணத்தை இரட்டிப்பாத் தர்றோம்’னு சொல்லி ஏமாத்தற இந்த மாதிரி ஆளுங்ககிட்ட மாட்டிக்கிட்டவங்களை, பேராசைக்காரங்களாப் பார்க்குது இந்தச் சமூகம்.

Published:Updated:
விக்னேஷ்
பிரீமியம் ஸ்டோரி
விக்னேஷ்

``நான் சினிமாவுக்கு வந்து சரியா இது 30வது வருஷம். இந்த சினிமா வாழ்க்கை எனக்குத் தந்தது, `ஒரு நடிகனா நாலு பேருக்குத் தெரியும்’ங்கிற ஒரே விஷயம்தான். ஹீரோவா என்னுடைய முதல் படமே நல்ல பேரு வாங்கித் தந்தது. பாரதிராஜா, பாலுமகேந்திரா எனப் பெரிய இயக்குநர்களின் படங்களில்கூட நடிச்சேன். ஆனாலுமே எனக்கான ஒரு இடம் கிடைக்கலை. இதுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் செஞ்சேன். இப்ப ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ன்னு ஒரு படம் பண்ணினேன். திரும்ப வில்லனா ஒரு பெரிய பேனர்ல வர இருக்கிறேன். செகண்ட் இன்னிங்ஸ்லயாவது எனக்கான இடத்தை அடையணும்னு உறுதியா இருக்கேன்.’’

சமீபத்தில் இரிடியம் மோசடி தொடர்பான செய்தியில் `ஒரு கோடிக்கும் மேல் பணத்தை இழந்தார்’ எனத் தெரிய வந்ததும் விக்னேஷிடம் பேசியபோது இப்படிச் சொன்னார். அப்படியே நீண்டது அந்த உரையாடல்.

“ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க சீரியலில் நடிச்சேன்!”

`` `இரிடியம் மோசடி’ என எவ்வளவோ செய்திகள் வந்து கொண்டிருக்கிற சூழலில் எப்படி நீங்களும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சிக்கினீர்கள்?’’

“ `பணத்தை இரட்டிப்பாத் தர்றோம்’னு சொல்லி ஏமாத்தற இந்த மாதிரி ஆளுங்ககிட்ட மாட்டிக்கிட்டவங்களை, பேராசைக்காரங்களாப் பார்க்குது இந்தச் சமூகம். ஆனா நான் பேராசைப்பட்டு இவங்க வலையில விழலை. இந்த மாதிரி ஆளுங்க ஒருத்தருடைய பலவீனத்தைப் பார்த்துக் காய் நகர்த்திக் காசை ஏமாத்தறாங்க. என்னுடைய பலவீனம், சினிமா. எங்கிட்ட ஒரு சினிமாத் தயாரிப்பு கம்பெனி ஆரம்பிக்கலாம்னும், நானே பொறுப்பா இருந்து அதைக் கவனிச்சுக்கணும்னும் சொல்லித்தான் என்னை நம்ப வச்சாங்க. இந்த மாதிரி அடுத்தவங்க பணத்தை ஏமாத்தறது தனிநபரா செய்கிற காரியமில்லை. பெரிய நெட் ஒர்க்கா இயங்கிட்டிருக்காங்க. மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிற இந்த மாதிரியான குற்றங்களுக்குத் தண்டனை கடுமையா இருந்தா மட்டுமே இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். அரசு இதைச் செய்யணும்.’’

``சினிமாவுல உங்களுக்கான இடம் கிடைக்காததன் காரணம்னு என்ன நினைக்கிறீங்க?’’

“கிராமத்துப் பின்புலத்துல இருந்து சினிமாவுக்கு வந்தவன் நான். முதல் படம் நல்லா ஓடுனதுமே, அடுத்து என்ன மாதிரியான படங்கள்ல நடிக்கிறதுன்னு படங்களைத் தேர்வு செய்கிற விஷயத்துலகூட எனக்கு முடிவு எடுக்கத் தெரியலை. வழிகாட்டவும் ஆள் இல்லை. ‘சின்னத்தாயி’க்குப் பிறகு வரிசையா ஏழெட்டுப் படங்கள்ல கமிட் ஆனேன். ஆனா அவையெல்லாம் வெளியாகாத, அல்லது பாதியில நின்னுபோன, சிம்பிளாச் சொல்லணும்னா ‘உப்புமா கம்பெனி’ப் படங்கள்.

இருந்தும்கூட 50 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். ஆனாலும் ஒரு கட்டத்துல, சினிமாவையே நம்பி இருக்க முடியாது. குடும்பம் நடத்த வழி வேணுமே’ன்னு பிசினஸ் பக்கம் போயிட்டதும் இன்னொரு காரணம். நம்மை நம்பி வந்த மனைவி பிள்ளைகளுக்கு ஏதாச்சும் சேர்த்து வைக்கணுமில்லையா? இப்ப அந்த எண்ணம் ஓரளவு நிறைவேறிடுச்சு. அதனாலதான் என்னுடைய கம்பேக் சிறப்பானதா அமையும்கிற நம்பிக்கையும் வந்திருக்கு.’’

“ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க சீரியலில் நடிச்சேன்!”

``பாலுமகேந்திராவின் ‘வண்ண வண்ணப் பூக்கள்’, பாலாவின் `சேது’ ஆகிய படங்கள் நீங்க தவற விட்ட படங்கள்தானே? உங்களுடைய அறைத் தோழரான பாலா அடுத்தடுத்த படங்களில் உங்களுக்கு வாய்ப்பு தரவில்லையா?’’

“ ‘வண்ண வண்ணப் பூக்கள்’ நான் நடிக்க வேண்டியதுதான். அதுல நடிக்க முடியாமப்போனதுக்குக் காரணம் அர்ச்சனா மேடம். காலங்கடந்து அதைப் பேசி எந்தப் பயனுமில்லை. ‘சேது’ முடிஞ்சு ‘நந்தா’வும் முடிவடைந்த நிலையில பாலாகிட்ட கேட்டேன். ‘பெரிய நடிகர்களை வச்சுப் பண்ணிட்டேன், கொஞ்சம் வெயிட் பண்ணு, பண்ணலாம்’னு சொன்னார். எனக்குக் கோபம் வந்திடுச்சு. அவருமே கோபக்காரர் ஆச்சே, அதனால `ரெண்டு பேருக்கும் முட்டிக்கிடப்போகுது’னு அதன் பிறகு அவர்கிட்ட போய் சான்ஸ் கேக்கவே இல்லை. அவருடைய படங்கள்ல நான் நடிக்க இன்னும் காலம் ஒண்ணும் கடந்து போயிடலைன்னே நினைக்கிறேன்.’’

``இப்ப என்ன பிசினஸ் பண்ணிட்டிருக்கீங்க?’’

“ஆரம்பத்துல முக அலங்காரம் செய்யும் ஸ்பா நடத்திட்டிருந்தேன். இப்ப ஹோட்டல் பிசினஸ் போயிட்டிருக்கு.’’

``சமீபமா சீரியலில்கூட நடித்தீர்கள் போல?’’

``உண்மையைச் சொல்லணும்னா, கொரோனா நேரத்துல பிசினஸ் பாதிக்கப் பட்டு, எங்கிட்ட பணிபுரிந்த ஊழியர்களுக்குச் சம்பளம் போடவே பெரிய பிரச்னையா இருந்தது. அந்த நேரத்துல சின்னத்திரை ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடந்திட்டிருந்தது. சீரியல்கள்ல நடிச்சா வேலைக்கும் வேலையும் ஆச்சு, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஒரு வழி கிடைக்கும்னு நண்பர்கள் சிலர் சொன்னாங்க. அதனால நடிச்சேன், நல்ல சம்பளமும் தந்தாங்க.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism