Published:Updated:

``தனுஷ் கூட நடிக்க சிவகார்த்திகேயன் கூப்பிட்டார். ஆனா..?!" - `அது இது எது' விக்னேஷ்

விக்னேஷ் கார்த்திக்
விக்னேஷ் கார்த்திக்

ஸ்டாண்ட் அப் காமெடியனாக மீடியாவில் தன் கரியரைத் தொடங்கி, ஆங்கரிங், நடிப்பு, இயக்கம் என அடுத்தடுத்து தனது கிராஃபை உயர்த்திக்கொண்டே இருக்கிறார், விக்னேஷ் கார்த்திக்.

அடுத்து, ஐஷ்வர்யா ராஜேஷை லீட் ரோலில் வைத்து, `திட்டம் இரண்டு' எனும் படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான ஃபர்ஸ்ட் லுக்கையும் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் வெளியிட்டார். க்வாரன்டீன் நாள்கள், ஷார்ட் ஃபிலிம்ஸ், அடுத்தடுத்த அப்டேட்ஸ் என அவரிடம் பேச நிறைய இருந்தது.

``க்வாரன்டீன் எப்படி போயிட்டிருக்கு?"

விக்னேஷ் கார்த்திக்
விக்னேஷ் கார்த்திக்

``ஆரம்பத்துல என்ன பண்ணப்போறோம்னு ஒரு சின்ன குழப்பம் இருந்தது. ஆனா, அதுக்காக அப்படியே இருக்க முடியாதுல... அதனால ஷார்ட் ஃபிலிம்ஸ், படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுறதுனு இப்ப பிஸியா போயிட்டிருக்கு. சமீபத்துல வெளியான என்னோட ஷார்ட் ஃபிலிமுக்கு மக்கள்கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது சந்தோஷமா இருக்கு.”

``மீடியாவுக்கு வந்த இந்த 10 வருடங்கள்ல நீங்க கத்துக்கிட்ட விஷயங்கள்?"

விக்னேஷ் கார்த்திக்
விக்னேஷ் கார்த்திக்

``ஒண்ணா ரெண்டா... நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். முதல் விஷயம், எதுக்குமே ரொம்ப சந்தோஷப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது. அதே சமயம், எதுமேலயும் ரொம்ப நம்பிக்கையும் வைக்கக்கூடாது. நம்ம முன்னாடி ஒரு மாதிரி பேசுவாங்க. பின்னாடி வேற மாதிரி பேசுவாங்க. அதனால, நம்மளப் பத்தி புகழ்ந்தே பேசினாலும் `அப்படியா’னு அமைதியா இருக்குறது நம்ம கிட்னிக்கு ரொம்ப நல்லது.”

``மீடியாவுக்குள்ள நுழைஞ்ச கதை?"

 ‘அது இது எது’
‘அது இது எது’

``காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயத்துலயே டிராமா, மிமிக்ரி, ஆங்கரிங்னு அதகளம் பண்ணுவோம். அந்த சமயத்துல நானும் அஸாரும் நல்ல நண்பர்கள். அஸாருக்கு `அது இது எது’ இயக்குநர் தாம்சன் சாரை முன்னாடியே தெரியும். அப்படியே எனக்கு தாம்சன் சார் பழக்கமாகிட்டார். என்னோட மிமிக்ரி அவருக்கு பிடிச்சுப் போய், `அது இது எது’ல பர்ஃபாம் பண்ண வாய்ப்பு கிடைச்சது. அதுக்குப் பிறகு, அப்படியே ஆங்கரிங், காமெடியன், நடிப்பு, இயக்கம்னு எல்லா பக்கமும் ட்ராவல் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஆனாலும், எனக்கு இயக்குநர் ரோல்ல கிடைச்ச திருப்தி மற்ற எதுலேயும் கிடைக்கல. அதுனாலதான் நல்ல சம்பளம் கிடைச்சிட்டிருந்த நிலையிலேயும்கூட எல்லாத்தையும் விட்டுட்டு இயக்குநரா என் கரியர ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.”

``நடிகரா `பகல் நிலவு’ சீரியலுக்குள்ள வந்தப்ப என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் இருந்தது?"

‘பகல் நிலவு'
‘பகல் நிலவு'

``சீரியலுக்குள்ள நுழைஞ்சது தற்செயலாதான் நடந்தது. ஆனா, அதோட ரெஸ்பான்ஸ் ரசிகர்கள்கிட்ட இருந்து கிடைச்சது எனக்கு வித்தியாசமா இருந்தது. `நம்ம கார்த்திக்'னு அவங்க வீட்டு பிள்ளையா என்னை நினைச்சாங்க. ரியாலிட்டி ஷோக்களுக்கு அப்புறம் இந்த சீரியல்தான் எனக்கு நிறைய ரசிகர்களை சம்பாதிச்சுக் கொடுத்தது.”

``2010, ஷார்ட் ஃபிலிம்ஸ் ட்ரெண்ட்ல இருந்த சமயம். ஒரு டிகேட் கழிச்சு இப்ப 2020 வெப் சீரிஸ்தான் ட்ரெண்ட். இன்னும், குறும்படங்களுக்கு முன்னாடி இருந்த மாதிரியே ஸ்பேஸ் இருக்குனு நினைக்குறீங்களா?"

OTT தளங்கள்
OTT தளங்கள்

``என்னைப் பொறுத்தவரை இப்ப OTT தளங்கள், வெப் சீரிஸ்னு இது எல்லாம் ட்ரெண்டிங்ல இருந்தாலும், ஷார்ட் ஃபிலிம்ஸுக்கான இடம் அப்படியேதான் இருக்கு. ஏன்னா, என்னோட குறும்படத்தாலதான் எனக்கு ரெண்டாவது முறையா இயக்குற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுக்கான வேலையும் ஒரு பக்கம் போயிட்டிருக்கு. இப்ப அதுக்கான ப்ளாட்ஃபார்ம் மாறியிருந்தாலும் அதுக்கான சரியான களத்துல இருக்கோம்கிறதுதான் முக்கியம்."

``சின்னத்திரையில ஷோ பண்ணிட்டிருந்த உங்களுக்கு திருப்பு முனையா இருந்தது என்ன?"

விக்னேஷ் கார்த்திக்
விக்னேஷ் கார்த்திக்

`` `அது இது எது’ல ஆங்கரிங் பண்ணிட்டிருந்தப்ப எனக்கான ரீச் பெருசா இல்லை. ஒரு நாள் ஷோவுக்கு பர்ஃபாம் பண்ண ஆர்ட்டிஸ்ட் இல்லை. அதுக்கு முன்னாடி நாள் நைட், தாம்சன் சார் போன் பண்ணி, `நீதான் பர்ஃபாம் பண்ணணும்'னு சொன்னார். நானும் சிங்கப்பூர் தீபனும் சேர்ந்து பண்ற பர்ஃபாமன்ஸுக்கான ஸ்க்ரிப்ட்டை நைட் முழுக்க ரெடி பண்ணோம். அப்படிப் பண்ண `ஒசாமா ஒபாமா' கான்செப்ட் ஷோவை செட் முழுக்கவே என்ஜாய் பண்ணாங்க. ஷோவும் ஹிட், எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைச்சது."

``சினிமாவுல தவறவிட்ட வாய்ப்புகள் பத்தி?"

'விஐபி'
'விஐபி'

``சில படங்கள் ஹீரோவா பண்ணியிருக்கேன். அது, பொருளாதார சிக்கல்னால இன்னும் ரிலீஸாகாம இருக்கு. ஒரு முறை சிவகார்த்திகேயன்கிட்ட இருந்து போன் வந்திருந்தது. `நடிக்கற ஆர்வம் இருக்கா?’னு கேட்டார். `என்ன ப்ரோ இப்படி கேட்டுட்டீங்க? நிச்சயம் பண்ணலாம்’னு சொன்னேன். அப்ப, `விஐபி' படத்துல தனுஷ் சாரோட தம்பி கேரக்டருக்காகக் கேட்டிருந்தாங்க. உடனே சாயங்காலம் ஆடிஷனுக்கு ஆபீஸுக்கு கிளம்பி வரச் சொன்னாங்க. அப்ப நான் ஒரு ஷோவுல கமிட்டாகியிருந்தேன். ஸோ, வெளி ஊர்ல இருந்து என்னால கிளம்பிப் போக முடியலை. அடுத்த நாள் போன் பண்ணேன். அப்ப வேற ஒருத்தர் அதுக்கு கமிட்டாகிட்டார்னு சொன்னாங்க. எப்ப விஐபி படம் பார்த்தாலும் அந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தப்படுவேன்."

``உங்களுடைய இரண்டாவது படமான `திட்டம் இரண்டு' படத்துக்குள்ள ஐஷ்வர்யா ராஜேஷ் வந்த கதையைப் பத்திச் சொல்லுங்க?"

திட்டம் இரண்டு
திட்டம் இரண்டு

``சினிமா பண்றதுக்கு என்கிட்ட நாலஞ்சு கதைகள் இருந்தது. அதுல ஒரு கதையை ஐஷ்வர்யா ராஜேஷுக்காகவே தயார் பண்ணியிருந்தேன். அவங்ககிட்ட கதை சொல்ல முயற்சி பண்ணிட்டிருந்த சமயத்துல, என்னோட ஷார்ட் ஃபிலிம் பார்த்துட்டு அவங்களே போன் பண்ணாங்க. விஷயத்தைச் சொன்னதும் நேர்ல மீட் பண்ண கூப்பிட்டாங்க. கதையும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நம்ப முடியாத ஒரு உண்மைச் சம்பவத்தை வெச்சுதான் இந்தப் படத்தோட கதை நகரும். இந்த மாதிரி ஒரு கதைக்கு பொண்ணு லீட் ரோல்ல நடிச்சா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணோம். அதேசமயம், முழுக்க வுமன் சென்ட்ரிக் படமா இது இருக்காது. படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும். இப்போதைக்கு படத்தோட ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிஞ்சிருக்கு" என்றார் விக்னேஷ்.

அடுத்த கட்டுரைக்கு