Election bannerElection banner
Published:Updated:

விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டனின் கூட்டணியில் புதிய படம்!

விஜய் மில்டன் மற்றும் விஜய் ஆண்டனி
விஜய் மில்டன் மற்றும் விஜய் ஆண்டனி

இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் விஜய் மில்டன் எடுக்கயிருக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கயிருக்கிறார்.

இசையமைப்பாளர் டூ நடிகர் என அவதாரம் எடுத்து படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. சில தினங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் 'கொலைகாரன்' த்ரில்லர் படம் ரிலீஸானது. தற்போது இவரது நடிப்பில் 'அக்னி சிறகுகள்' 'தமிழரசன்' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களுக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வருகிறது.

விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டனின் கூட்டணியில் புதிய படம்!

இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள்.மேலும், இப்படத்துகான ஒளிப்பதிவும் விஜய் மில்டனே செய்ய இருக்கிறார். படப்பிடிப்பு கடற்கரை பகுதிகளான கோவா, டையூ, டாமன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. அக்டோர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் கடைசியாக 'கோலி சோடா 2' ரிலீஸானது. படத்தில் நடிக்கப் போகும் மற்றவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு