Published:Updated:

`அடுப்பை மட்டும் அணையாம பார்த்துக்கோங்க!'- ஏழைகளுக்கு விலையில்லா விருந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தை தொடங்கி தினமும் காலை உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர். அம்மா உணவகம் மாதிரிதான். ஆனால் உணவு இலவசமாக வழங்கப்படுவதாகவும் இதுவரை எட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.

விலையில்லா உணவகம்
விலையில்லா உணவகம்

நடிகர் விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தின் சார்பில் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் ஏழை மக்களுக்கு தினமும் காலை உணவை இலவசமாக கொடுத்து வருகின்றனர். எட்டு மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் ஏழைகளுடைய பசியைப் போக்குறது என்பது சாதாரண விஷயம் இல்லை. இதற்கான செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். இந்த அடுப்பை மட்டும் அணையாம பார்த்துக்கொண்டு எல்லோரையும் பசியாற வைக்க வேண்டும் என விஜய், அவரது ரசிகர்களைப் பாராட்டி உற்சாகப் படுத்தியதில் நெழ்கிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

இளைய தளபதியாக ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விஜய் தளபதியாக மாறிவிட்டார். விஜய்யின் பிறந்த நாள் மற்றும் அவருடைய புதுப்படம் ரீலிஸாகும் போதும் மக்களுக்கான நலத்திட்டங்களை விஜய் ரசிகர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர். விஜய் மேல் எப்போதும் ஒரு வித அரசியல் படர்ந்துகொண்டே இருப்பது போல் அவர் ரசிகர்கள் மீதும் இதுபோன்ற நலத்திட்டங்களைச் செய்வதால் அரசியல் வட்டம் இருந்துகொண்டே இருப்பதுடன் அவ்வப்போது சர்ச்சைகளும் எழும்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையில்லாமல் அவருடைய ரசிகர்கள் ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கி எப்போதும் நிரந்தரமாக ஒரே இடத்தில் தினமும் காலை உணவை ஏழை மக்களுக்குக் கொடுத்து பாசியாற்றும் செயலைச் செய்து வருகின்றனர். 50 நாள்களுக்கு மேலாக பல மாவட்டங்களில் இதைச் செய்து வருவதாக உற்சாகமுடன் கூறுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

விலையில்லா விருந்தகம்
விலையில்லா விருந்தகம்

இது குறித்து தஞ்சை மாவட்ட தலைவர் விஜய் சரவணனிடம் பேசினோம். ``தொடக்கத்தில் விஜய்யின் ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட மன்றம் பின்னர் மக்கள் இயக்கமாக மாறி 25 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. தொடர்ந்து களத்தில் நின்று மக்கள் பணிகளைச் செய்து வருகிறோம். இலவச திருமணம், கண் தானம், ரத்த தானம், கல்விக்கு உதவுதல் போன்றவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. இதைப் பெரிய அளவில் விஜய் ரசிகர்களாகிய நாங்கள் எங்கள் சொந்தச் செலவில் செய்து கொண்டிருக்கிறோம்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் அனைத்து சீர்வரிசை பொருள்களையும் சீதனமாக கொடுத்து விஜய் தலைமையில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தோம். இதுபோன்று பல மாவட்டங்களில் செயல்படுத்தினோம். அந்த நேரத்தில் தளபதி எங்களை நெகிழ்ந்து பாராட்டியது பெருமையாக இருக்கு என வாழ்த்தினார். இதேபோல் பல வகையான பணிகள் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

விலையில்லா விருந்தகம்
விலையில்லா விருந்தகம்

இன்றைக்கு இருக்கிற வேலை பரபரப்புகளாலும், பல சூழல்களாலும் பலரால் காலை உணவு சாப்பிட முடிவதில்லை. குறிப்பாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்பவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் அவசரத்தால் காலை உணவு சாப்பிட முடியாமல் வந்து விடுகின்றனர். அப்படிபட்டவர்கள் பயன் பெருகிற வகையில் தற்போது தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் 150 பேருக்கு காலை உணவு கொடுக்கும் திட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறோம்.

மக்கள் கூடுகிற ஒரு இடத்தை நிரந்தரமாக தேர்வு செய்துள்ளதுடன் தினமும் இட்லி, பொங்கல், தோசை, ரவா உப்புமா என ஏதேனும் ஒன்றைச் சாப்பிட வைக்கிறோம். கிட்டத்தட்ட அம்மா உணவகம் மாதிரிதான். ஆனால் காசே இல்லாமல் சாப்பிடக்கூடிய உணவகம். மதுரை, புதுக்கோட்டை, வேலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இவை நடைமுறை படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் தஞ்சாவூரில் கரந்தைப் பகுதியில் ஆரம்பிக்கிறோம். பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதை தளபதிக்கு தெரியபடுத்தியதும் எங்களை வாழ்த்தி பாராட்டியதுடன் இதற்கான முழுச் செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். பசியைப் போக்குறது என்பது சாதாரண விஷயம் இல்லை. இதற்கான அடுப்பை மட்டும் அணையாம பார்த்துக்கொண்டு தொடர்ந்து இதைச் செய்து எல்லோரையும் பசியாற உதவுங்கள் என்றார். விஜய் கொடுக்கும் பணத்தை மறுத்து நாங்கள் எங்களுடைய சொந்தச் செலவிலேயே செய்து கொள்கிறோம் என்றதும் நெகிழ்ந்துவிட்டார். இதற்கு மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள் தங்களால் முடிந்த பண உதவியைச் செய்கின்றனர். 5 வருடம் வரை இதைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கு. வரும் நாள்களில் காலை, மதியம் என இரண்டு வேளை உணவு கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.

உணவு
உணவு

இதை தளபதிக்கு தெரியபடுத்தியதும் எங்களை வாழ்த்தி பாராட்டியதுடன் இதற்கான முழுச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். பசியைப் போக்குறது என்பது சாதாரண விஷயம் இல்லை. இதற்கான அடுப்பை மட்டும் அணையாம பார்த்துக் கொண்டு தொடர்ந்து இதைச் செய்து எல்லோரையும் பசியாற்ற உதவுங்கள் என்றார். விஜய் கொடுக்கும் பணத்தை மறுத்து நாங்கள் எங்களுடைய சொந்தச் செலவிலேயே செய்து கொள்கிறோம் என்றதும் நெகிழ்ந்துவிட்டார். இதற்கு மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள் தங்களால் முடிந்த பண உதவியைச் செய்கின்றனர். 5 வருடம் வரை இதைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கு வரும் நாள்களில் காலை, மதியம் என இரண்டு வேளை உணவு கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்'' என்றார்.