Published:Updated:

விஜய் 63 - ஃபர்ஸ்ட் லுக், செகண்டு லுக் எப்போது? தயாரிப்பாளர் தரப்பு பதில்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் முக்கியமான ரோலில் நடிகர் கதிர், இந்துஜா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான இசையமைக்கும் இப்படத்துக்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். கதிருக்கு ஜோடியாக 'ஐருகண்டி' படத்தில் நடித்த ரெபா மோனிகா நடிக்க இப்படத்தில் விஜய் கால்பந்து வீரராக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

Vijay 63
Vijay 63

குறிப்பாக படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் நடிக்கிறார். இவருக்கு இப்படத்தில் வில்லன் ரோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வரவிருப்பதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமா இருந்தது. இந்நிலையில் ட்விட்டரில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் இதுகுறித்து ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதற்கு ஆறு மணிக்கு பதிலளிப்பதாக அர்ச்சனா கூறியிருந்தார். இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் 22-ம் தேதி வெளியாகும் எனவும் தன் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு