Published:Updated:

விஜய் சேதுபதியின் இன்னொரு சுட்டியும் 👧 கோலிவுட்டுக்கு வர்றாங்க !

சனா

விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை தொடர்ந்து அவரது மகள் ஶ்ரீஜாவும் நடிக்க வந்திருக்கிறார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. 'லாபம்', 'சங்கத்தமிழன்' 'க/பெ.ரணசிங்கம்' மற்றும் இன்னும் பெயரிடாத படம் என இவர் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் செம பிஸி.

இதுதவிர விரைவில் அருண்குமார் இயக்கத்தில் இவரும், அஞ்சலியும் நடித்திருக்கும் 'சிந்துபாத்' திரைப்படம் திரைக்கு வரயிருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்திருக்கிறார். இதற்கு முன்னரே சூர்யா 'நானும் ரெளடிதான்' படத்தில் சிறிய ரோலில் தோன்றியிருப்பார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மகள் ஶ்ரீஜாவும் நடிக்க வந்திருக்கிறார்.

சங்கத்தமிழன்
சங்கத்தமிழன்

'சங்கத்தமிழன்' படத்தில் இவரது மகள் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தையாக நடிக்கிறார். 'அண்ணன் நடிப்பது பார்த்து என் பொண்ணு ஏங்கிறகூடாதுனுதான் இந்த முடிவை எடுத்தேன்' என்று ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி டபுள் ரோலில் நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் இவருக்கு ஜோடியாக நடிக்கும் படத்தை விஜய் சந்தர் இயக்கி கொண்டிருக்கிறார்.

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..