Published:Updated:

சாலிகிராமத்தில் எக்மோர் ஸ்டேஷன்! - டப்பிங்கில் 'பிகில்' விஜய்

அட்லி-விஜய் காம்போ மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்திருக்கும் படம் 'பிகில்.' வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதால் படத்துக்கான பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து விஜய், அவரது போர்ஷனின் டப்பிங் பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விஜய்
விஜய் ( பிகில் )

'தெறி', 'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து அட்லி - விஜய் காம்போ, மூன்றாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. எக்மோர் ரயில்வே ஸ்டேஷனை அப்படியே சென்னை சாலிகிராமத்திலிருக்கும் பிரசாத் லேப்பில் செட் அமைத்து நடைபெற்றுவரும் படப்பிடிப்பு, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியோடு நிறைவு பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் விஜய்க்கான போர்ஷன் முடிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

Vijay
Vijay

இதை உறுதி செய்யும் விதமாக, தற்போது பிகில் படத்தின் டப்பிங்கில் விஜய் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, மெர்சல் படத்தில் பணியாற்றிய கே.ஜி.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை முடிப்பதற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது படக்குழு.