Published:Updated:

வித் லவ் விஜய்! - கிளம்பினேன் சிவகாசி!

Actor Vijay's Diwali Celebration
பிரீமியம் ஸ்டோரி
Actor Vijay's Diwali Celebration

`உலகத்துக்கே பட்டாசு பண்ணி அனுப்பற மக்களின் அன்பில் கரைஞ்சிட்டேன்!

வித் லவ் விஜய்! - கிளம்பினேன் சிவகாசி!

`உலகத்துக்கே பட்டாசு பண்ணி அனுப்பற மக்களின் அன்பில் கரைஞ்சிட்டேன்!

Published:Updated:
Actor Vijay's Diwali Celebration
பிரீமியம் ஸ்டோரி
Actor Vijay's Diwali Celebration

னசுக்குப் பிடிச்சவங்க எதிர்ல இருந்தா, மச்சான் பேரு ‘மதுர’ன்னு போன வாரம் சொன்னேன்ல. சொல்லி அடிக்கிற ‘கில்லி’மாதிரி, சிவகாசியில் பட்டையக் கிளப்பிட்டேன் இந்த வாரம். அட, சினிமாவைச் சொல்லலைங்ணா...

இது நிஜ சிவகாசி! இந்த வருஷம் நமக்கு டிரிபிள் தீபாவளி!  'சிவகாசி ரிலீஸ் தனி தீபாவளி. சிவகாசிக்குப் போய் ஆட்டம்பாட்டத்தோட ஒரு அட்வான்ஸ் தீபாவளியும் கொண்டாடிட்டு வந்துட்டேன். இது விஜய் டி.வி-யில் தீபாவளிக்காக ஒரு ஷோ!

Actor Vijay's Diwali Celebration
Actor Vijay's Diwali Celebration

உலகத்துக்கே பட்டாசு பண்ணி அனுப்பற ஜனங்களின் தீபாவளி எப்படி இருக்கும்னு எட்டிப் பார்க்கலாம்னு ஐடியா. அங்கே இருக்கிற நம்ம ‘குட்டி ஜப்பான்’மக்களும் பட்டாசு கணக்கா சும்மா சுறுசுறுன்னு தான் இருக்காங்க. ஞாயிற்றுக் கிழமை, லீவ்ல ஜாலியா இருப்பாங்கனு நினைச்சுப் போனா, பட்டாசு ஃபேக்டரியில் பரபர பரபரன்னு நடக்குது வேலை. ‘சண்டே லீவு கெடையாதாங்க’ன்னு கேட்டா, ‘தீபாவளி நெருக்கத்துல சனியாவது, ஞாயிறாவது. ஏழு நாளும் வேலை கிடைக்கிறது எம்புட்டுப்பெரிசு. இந்த வருஷத்துலயாவது எல்லா நாளும் வேலை கிடைக்கணும்னு வேண்டிக்க சாமி!’ன்னு சொன்னாங்க.

பொழைக்கிறதுல ஆர்வமா இருக்கிறவங்க மத்தியில, உழைக்கிறதுக்கும் இவ்ளோ ஆர்வமா இருக்காங்களே. ஒரு சல்யூட்டுங்க!‘நாங்க எல்லாரும் தீபாவளி கொண்டாடுறது உங்களால... நீங்க எப்படி தீபாவளி கொண்டாடுவீங்க?’னு அங்கே ஒரு பெரியம்மாவிடம்  கேட்டேன். ‘மொதலாளி மாருங்க கொஞ்சம் பட்டாசு தருவாங்க. அதைக் கொண்டு போய் பேரப்புள்ளைகளுக்குத் தந்தா, அதுக வெடிச்சு வெளையாடும். நாம இட்லி சுட்டு, கறிக்குழம்பு வெச்சோம்னா தீபாவளி முடிஞ்சு போயிரும்!னு சிரிச்சாங்க.

Actor Vijay's Diwali Celebration
Actor Vijay's Diwali Celebration

‘நான் நடிச்ச படங்களைப் பார்த்திருக்கீங்களா’னு ஒரு அம்மாவிடம் கேட்டேன். ‘என் பேரன் வீட்ல டி.வி-யில ஒம் படத்தைத் தவிர, வேறெதுவும் வைக்க விட மாட்றான். ஒன்ன மாதிரியே ஆடுறான், பாடுறான். நீயும் நல்லாத்தான் நடிக்கிறே, நல்லாயிரு சாமி!’ன்னு வாழ்த்தினாங்க.

கோயிலுக்குப் போனா பரிவட்டம், ஜீப்ல ஏறினா மாலை மரியாதை, வண்டி கெளம்புச்சுன்னா வழியெல்லாம் கூட்டம், ‘அண்ணே’, ‘பிரதர்’, ‘நண்பா’ன்னு விசிலு பறக்குது. ஆசை ஆசையா துரத்தி ஓடி வர்றாங்க. நிஜமாவே நெகிழ்ந்துபோயிட்டேங்க! பொதுவா இப்பல்லாம் வெளியில் போறதுன்னா ரொம்ப யோசிப்பேன். ஜனங்க கூடிடுறாங்க, நமக்கும் பிரைவஸி போயிடுது, பப்ளிக்குக்கும் டிஸ்டர்பன்ஸ்னு யோசிப்பேன். ஆனா, சிவகாசி மக்களின் அன்பில் ஒரு கிலோ கரைஞ்சிட்டேன்.

அவங்க உபசரிப்பில் எக்ஸ்ட்ரா ஒரு கிலோ ஏறிட்டேன். ‘சிவகாசி’ பட போஸ்டர்களைச் சுடச் சுட பிரின்ட் பண்ற பிரஸ்க்கு போய்ப் பார்த்தேன். பட்டாசு ஃபேக்டரிக்குள் போய் எல்லோரிடமும் ஜாலியா பேசிட்டு இருந்தேன். தாரை தப்பட்டைன்னு நானும் கொஞ்ச நேரம் கலந்து ஒரு ஆட்டம் போட்டேன். சும்மா விறுவிறுன்னு ரெண்டு ரவுண்டு சிலம்பம் சுத்தி ஆடினேன். ஒரு கட்டத்தில் ஆசையா கிரவுண்டில் இறங்கி, பத்து நிமிஷம் பரபரப்பா கபடி ஆடியும் கலக்கிட்டேன். நமக்கு எப்பவுமே கபடிதான் ஃபேவரைட் கேம். எல்லாரும் கிரிக்கெட் பின்னால் ஓடினபோதே, நான் கபடி பக்கம்தான் நின்னேன்.

‘கில்லி’ படத்தில் கபடி ஆட்டம் ஒரு முக்கியமான விஷயம்னு தரணி சொன்னப்போ, எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். ஏன்னா, ஹாக்கி ப்ளேயர்னு சொன்னாத்தான், நான் நடிக்கணும். கபடி நம்ம ஏரியா!

Actor Vijay's Diwali Celebration
Actor Vijay's Diwali Celebration

எனக்கு ஒரு பழக்கம் என்னன்னா, எனக்கு எப்பவுமே பிரிக்கிற ஆட்டம் பிடிக்காது. ஸ்கூல் படிக்கும்போது டிரேட் மார்க் கேம் ரொம்ப பிரபலம். ஒரு அட்டையை வெச்சுக்கிட்டு நாடு பிடிக்கிற விளையாட்டு விளையாடுவாங்க. - - - நான் அந்த ஏரியா பக்கம் தலைவெச்சுக்கூடப் படுக்க மாட்டேன். ஏன்னா, அது ஆட ஆரம்பிச்சோம்னா, பொறாமை வந்துடும். என் ஃப்ரெண்டுதான் எதிரில் உட்கார்ந்து ஆடுவான். ஆனாலும் அவன் அதிகம் பணம் சேர்க்கிறானேன்னு எதிரி மாதிரியே பார்க்கத் தோணும்.

அதனாலயே அந்த மாதிரி ஆட்டங்களில் ஆர்வம் காட்டறது கிடையாது. 'கபடி'யைப் பார்த்தீங்கன்னா, அது ஒற்றுமையா இருக்கிறது எப்படின்னு சொல்லித் தர்ற மந்திரம். ‘ஏ, என்னோட ஆள் ஒருத்தன் வெளியில் போயிட்டான். அவனை எப்படியாவது உள்ள கொண்டு வரணும். அவன் இல்லாம நான் இல்லை‘ங்கிற தத்துவம்தான் அந்த ஆட்டம். தூரதுார நின்னு விளையாடாம, ஒருத்தரை ஒருத்தர் கைகோத்து, கட்டித் தழுவி ஆடுவாங்க.

எதிரில் இருக்கிறவங்க எதிரி இல்லை, இது போட்டி, இது ஆட்டம்னு அப்போதான் விளையாட்டில் வேகம் வரும். போட்டி இருந்தாத்தான் அது ருசிக்கும். அது விளையாட்டுனாலும் சரி, சினிமான்னாலும் சரி! ஓ.கே, எல்லோருக்கும் ‘ஹேப்பி தீபாவளி!". அப்பிடியே தியேட்டருக்கு வாங்கண்ணா, சிவகாசியோட கொண்டாடலாம்! 

படங்கள் என்.விவேக்

(06.11.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism