Published:Updated:

"சின்னப் பையனுங்ணா, விட்ருங்ணா... ப்ளீஸ்!" - விஜய் #VikatanVintage

விஜய்
விஜய்

எங்க காம்பினேஷன்ல சின்னச் சின்ன விஷயத்திலும் செம ஸ்டைலான வித்தியாசம் தெரியும், பாருங்க! பிரபுதேவா.

- த.செ. ஞானவேல்

"இப்போ 'திருப்பாச்சி'ன்னா நாலு விரலையும் விபூதியில் குளுப்பாட்டி நெத்தியில் பட்டையடிக்கிற ஸ்டைல் ஞாபகம் வரும். 'சிவகாசி'ன்னா ஒத்தைக் காலை மடக்கி நெத்தியில் நீட்டா குங்குமம் வெக்கிறது மனசுக்குள்ள வரும். அதே போல 'போக்கிரி'க்கு இது! ச்சும்மா பம்பரம் மாதிரி சுத்தியடிச்சு ஒரு சூப்பர் கும்பிடு போடுவான். ஆட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால கிரிக்கெட்ல 'டாஸ்' போடுவாங்களே, அப்படித்தான் இந்த பம்பர சிக்னல்!" என்று காந்தம் போலச் சிரிக்கிறார் விஜய்.

"தெலுங்குப் பட ரீ-மேக்கில் அப்படியென்ன உங்களுக்குக் காதல்?"

"என் ரசிகர்கள் என்கிட்டே என்ன எதிர்பார்க்கிறாங்கன்னு இப்போதான் பல்ஸ் லேசா புரிய ஆரம்பிச்சிருக்கு. அதைச் செய்து தர வேண்டியது என் வேலை. எல்லாரையும் திரும்பிப் பார்க்க வெச்ச படங்கள்தான் அடுத்தடுத்த மொழியில் 'ரீ-மேக்' ஆகும். 'கில்லி' ரீ- மேக் படம்தான். அதைத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிச்ச மாதிரி கொஞ்சம் மாத்திக் கொடுத்ததும், படம் தெலுங்கைவிட இங்கே பெரிய ஹிட்!

விஜய்
விஜய்

இப்போ 'போக்கிரி' படத்தை தெலுங்கில் பார்த்தேன். எனக்குத் தெலுங்கு தெரியாது. புரியாத பாஷையிலேயே அந்தப் படம் அப்படியே என்னைக் கட்டிப்போட்டுடுச்சு. 'தீராத விளையாட்டுப் பிள்ளை'னு எல்லா இடங்களிலும் ஒரு கேரக்டர் இருப்பாங்க. அந்தப் 'போக்கிரி'யை ரசிக்கிறதைத் தவிர, வேறொண்ணும் பண்ண முடியாது. அடுத்தவங்களைக் காயப்படுத்துற கலாட்டாவா இல்லாம, ரசிக்கிற விதமான குறும்புகள் செய்யற வங்களை எல்லோருக்கும் பிடிக்கும்தானே? அப்படி எல்லோரையும் மயக்குவான் இந்தப் 'போக்கிரி'. 'ஆஹா, வந்துட்டாண்டா நம்ம ஆளு!'னு விசில் அடிக்கவைக்கிற கேரக்டர். அப்படி எல்லோரையும் எப்பவும் சந்தோஷப்படுத்துற ஆளுதான் நம்ம போக்கிரி."

"பிரபுதேவா டைரக்ஷனில் நடிக்கப்போகிற அனுபவம் உங்களுக்குப் புதுசுதானே?"

"இந்தியாவே கொண்டாடுற டான்ஸ் மாஸ்டர். ரஜினி சார் தொடங்கி சிரஞ்சீவி சார் வரைக்கும் எல்லா ஸ்டேட் சூப்பர் ஸ்டார்களையும் பெண்டெடுத்தவர் பிரபுதேவா. நடிகராவும் ரொம்ப நல்லா சக்ஸஸ் ஆனார். திடீர்னு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டைரக்டராகி தெலுங்கு சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கின மனுஷன். பிரபுதேவான்னா பெண்டு நிமித்துற தேவான்னு அவர் டான்ஸ் மாஸ்டரா இருந்தபோதே அனுபவப்பட்டவன் நான். இப்போ நம்ம படத்துக்கு டைரக்டரே அவர்தான். எங்க காம்பினேஷன்ல சின்னச் சின்ன விஷயத்திலும் செம ஸ்டைலான வித்தியாசம் தெரியும், பாருங்க! பிரபுதேவா. அசின், பிரகாஷ் ராஜ், நெப்போலியன்னு பெரிய டீமே இருக்கோம். பொங்கலுக்கு ரெடியாகிடுவான் 'போக்கிரி'!"

விஜய்
விஜய்

"ரஜினியோட 'சிவாஜி', கமலோட 'தசாவதாரம்', விஜய்யோட 'போக்கிரி'ன்னு..."

"ஹலோ... ண்ணா, நாலு மாசத் துக்கப்புறம் இப்பத்தான் ஷூட்டிங்குக்கு ரெடியாகிட்டிருக்கேன். 'கேப்'பே கொடுக்காம அடுத்த 'பிட்'டைப் போட ஆரம்பிச்சுட்டீங்களே..! சின்னப் பையனுங்ணா, பெரிய மனசு பண்ணி விட்ருங்ணா... ப்ளீஸ்!" என்று போடுகிறார் விஜய் ஒரு சூப்பர் கும்பிடு!

- ஆனந்த விகடன் ஜூலை 02, 2006 இதழில் இருந்து.

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக இப்போது ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv

அடுத்த கட்டுரைக்கு