Published:Updated:

“நான் ‘விக்ரம் தம்பி’ன்னு சொல்லிக்க மாட்டேன்!”

அரவிந்த் ஜான் விக்டர்
பிரீமியம் ஸ்டோரி
அரவிந்த் ஜான் விக்டர்

என்னதான் நான் துபாய்ல வசதியா இருந்தாலும் எங்க அப்பாவுக்கு நான் சினிமாவுல நடிக்கணும்னுதான் ரொம்ப ஆசை. என்கிட்ட பலமுறை அதைச் சொன்னார்.

“நான் ‘விக்ரம் தம்பி’ன்னு சொல்லிக்க மாட்டேன்!”

என்னதான் நான் துபாய்ல வசதியா இருந்தாலும் எங்க அப்பாவுக்கு நான் சினிமாவுல நடிக்கணும்னுதான் ரொம்ப ஆசை. என்கிட்ட பலமுறை அதைச் சொன்னார்.

Published:Updated:
அரவிந்த் ஜான் விக்டர்
பிரீமியம் ஸ்டோரி
அரவிந்த் ஜான் விக்டர்

விக்ரமும் துருவும் போட்டி போட்டுப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் விக்ரமின் தம்பியும் சினிமாவில் நடிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆமாங்க! அசப்பில் விக்ரம் 2-ஆக அப்படியே அண்ணனைப் போலவே இருக்கிறார். சைலன்ட்டாக நான்கு படத்தில் நடித்தும் முடித்திருக்கிறார்.

``விக்ரமுக்கு ஒரு தம்பி இருப்பதே எங்களுக்கு இப்போதான் தெரியுது. எங்கே இருந்தீங்க இவ்ளோ நாளா?’’

‘‘என் பெயர் அரவிந்த் ஜான் விக்டர். நடிகர் விக்ரமோட கூடப்பொறந்த தம்பி நான். எங்க அப்பா வினோத் ராஜும் சினிமாவில் நடிச்சிருக்காரு. ‘கில்லி', ‘திருப்பாச்சி' படங்கள்ல அப்பாவை நீங்க பார்த்திருப்பீங்க. இப்படி சினிமாக் குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் சினிமா மேல எனக்கு ஆர்வம் இல்லாமதான் இருந்தேன். பிசினஸ்லதான் என் கவனம் முழுக்க இருந்துச்சு. துபாய்ல ஒரு பெரிய நிறுவனத்துல சேல்ஸ் மேனேஜரா இருந்தேன். உலகின் உயரமான கட்டடமா பெருமையோட சொல்ற புர்ஜ் கலீபா டவர், துபாய் ஏர்போர்ட் இங்கெல்லாம் இன்டீரியர் ஃபர்னிச்சர் டிசைன்ல வொர்க் பண்ணியிருக்கேன். அப்படியே மனைவி, குழந்தைகளோட துபாய்லயே இருந்துட்டேன்.

“நான் ‘விக்ரம் தம்பி’ன்னு சொல்லிக்க மாட்டேன்!”

என்னதான் நான் துபாய்ல வசதியா இருந்தாலும் எங்க அப்பாவுக்கு நான் சினிமாவுல நடிக்கணும்னுதான் ரொம்ப ஆசை. என்கிட்ட பலமுறை அதைச் சொன்னார். அப்போ அதை நான் பெருசா எடுத்துக்கல. கடைசில அவர் இறக்குறதுக்கு 6 நாள் முன்னால ‘எனக்காக நீ சினிமாவுல நடிச்சே ஆகணும்'னு சொல்லிட்டு இறந்துட்டார். அப்பாவோட அந்த ஆசையை நிறைவேத்தணும்னு மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. நேரா கிளம்பி சென்னை வந்துட்டேன். நான் நடிக்கப்போற விஷயத்தை அண்ணன் விக்ரம்கிட்டதான் முதல்ல சொன்னேன். ஒரு அண்ணனா சினிமா பத்தி நிறைய விஷயங்களை எனக்கு அவர் சொன்னார். ‘நல்லா பண்ணு’ன்னு வாழ்த்தி அனுப்பினார். அவர் கொடுத்த தைரியத்துலதான் நான் இப்போ இவ்ளோ ஸ்ட்ராங்கா இறங்கியிருக்கேன். அண்ணன் பெயரைப் பயன்படுத்தாமத்தான் நான் சினிமா வாய்ப்பு தேடினேன். அந்த நேரத்தில சில உதவி இயக்குநர்கள் ‘நாங்க உங்களுக்கு சினிமா சான்ஸ் ஏற்பாடு பண்றோம். ஆனா விக்ரம் சாரையும் அந்தப் படத்துல நீங்க பேசி நடிக்க வைக்க முடியுமா'ன்னு கேட்டாங்க. அதுல எனக்கு உடன்பாடு இல்ல. அதனால வேண்டாம்னு சொல்லிட்டேன். கடைசில நடிகர் ஜீவா ரவி மூலமா ‘பேசா மடந்தை'ன்னு ஒரு ஷார்ட் பிலிம்ல நடிச்சேன். அதைப் பார்த்துட்டு ‘எப்போ கல்யாணம்'னு ஒரு படத்துல வில்லனா நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்படியே தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு மத்த மொழிகள்லயும் இப்போ நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

நிறைய படங்கள்ல கேரக்டர் ரோல் பண்ணதான் என்னைக் கூப்பிடுறாங்க. எனக்கும் அப்படி ரோல்ல நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு. இயக்குநர் ஹரி உத்ரா டைரக்‌ஷன்ல ‘லிப்ஸ்டிக்'னு ஒரு படத்துல போலீஸா இப்போ நடிச்சிட்டிருக்கேன். அண்ணன் படங்களை அதிகம் பார்த்து நடிப்பு கத்துக்குறேன்.’’

“நான் ‘விக்ரம் தம்பி’ன்னு சொல்லிக்க மாட்டேன்!”

``நம்ம ஊர் நடிகர்களுக்கு துபாய்ல கோல்டன் விசா கொடுக்கிறாங்க. நீங்க இப்போ நடிகராவும் இருக்கீங்க, துபாய்லயும் இருந்திருக்கீங்க உங்களுக்கு அந்த கோல்டன் விசா ஆசை இருக்கா?’’

‘‘ஒருமுறை எனக்கும் கோல்டன் விசா கொடுக்க முன்வந்தாங்க. நான்தான் அப்போ அதை வாங்க மறுத்துட்டேன். ஏன்னா, அதை வாங்க எனக்கு ஒரு தகுதி இருக்கணும்னு நினைச்சேன். அந்த அளவுக்கு நான் இன்னும் வளரல. அதான் வாய்ப்பு வந்தும் தவிர்த்துட்டேன். சிறந்த நடிகன்னு பேரெடுத்து சினிமால ஜெயிச்சதுக்கு அப்பறம் அந்த விசா கொடுத்தா, கண்டிப்பா அப்போ வாங்கிக்குவேன்.’’

``விக்ரம் தம்பிங்கிறது உங்களுக்கு நெகட்டிவா, பாசிட்டிவா?’’

‘‘கண்டிப்பா அது பாசிட்டிவ்தான். என் பின்னாடி இவ்ளோ பெரிய ஸ்டார் இருக்குறது எனக்குப் பெருமைதான். இருந்தாலும் நான் ‘விக்ரம் தம்பி’ன்னு வெளியே எங்கேயும் சொல்லிக்க மாட்டேன். ‘சூர்யவம்சம்’ ஸ்டைல்ல சொன்னா, விக்ரம் தம்பி அரவிந்த்னு சொல்றதைவிட, அரவிந்த் அண்ணன்தான் விக்ரம்னு சொல்ற அளவுக்கு நான் வரணும். அதே சமயம் அண்ணன் பெரிய ஸ்டாரா இருக்கிறதால, அவரோட தம்பிங்கிற முறையில என் மேலயும் ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கு. அதுதான் இப்போ எனக்கு சவாலா இருக்கு.

“நான் ‘விக்ரம் தம்பி’ன்னு சொல்லிக்க மாட்டேன்!”
“நான் ‘விக்ரம் தம்பி’ன்னு சொல்லிக்க மாட்டேன்!”

பொதுவா அண்ணன் தம்பி இருக்குற வீட்ல சண்டை வரும்னு சொல்வாங்க. ஆனா, சின்ன வயசுல இருந்து இப்போ வரை எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன சண்டைகூட வந்ததில்ல. அவர் ரொம்ப அமைதியான ஆள். நான் கொஞ்சம் வாலுத்தனம் பண்ணுவேன். கேரக்டர்ல வேற வேறயா இருந்தாலும் பாசத்துல ரெண்டு பேரும் ஒண்ணுதான். ஒரு முறை அண்ணனுக்கு ஒரு பெரிய ஆக்சிடென்ட் ஆச்சு. அந்த டைம்ல ஹாஸ்பிட்டல்ல அவர்கூட நான்தான் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டேன். ரெண்டரை வருஷம் அண்ணன் ரொம்பக் கஷ்டப்பட்டார். அதை என்னால தாங்கிக்கவே முடியல. அப்படி இருந்தவர் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஸ்டாரா வந்து சாதிச்சிருக்கார்னா அது சாதாரண விஷயம் இல்ல. நானும் அவர் மாதிரி போராடித்தான் இப்போ நடிகனாகியிருக்கேன். கண்டிப்பா நானும் ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருக்கு’’ என்கிறார் சின்ன சீயான் அரவிந்த்.