Published:Updated:

“சினிமாவைப் புரிஞ்சுக்க எனக்கு பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கு!”

விமல்
பிரீமியம் ஸ்டோரி
விமல்

கதையைக் கேட்டப்போ வித்தியாசமான ஜானர்ல இருக்குன்னு தோணுச்சு. எதார்த்தமான போலீஸ் கேரக்டரா இருந்தது. கன்டென்ட்டா நல்லாருந்தது.

“சினிமாவைப் புரிஞ்சுக்க எனக்கு பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கு!”

கதையைக் கேட்டப்போ வித்தியாசமான ஜானர்ல இருக்குன்னு தோணுச்சு. எதார்த்தமான போலீஸ் கேரக்டரா இருந்தது. கன்டென்ட்டா நல்லாருந்தது.

Published:Updated:
விமல்
பிரீமியம் ஸ்டோரி
விமல்

‘‘ஸ்கூலுக்குப் போற வழியெங்கும் சினிமா போஸ்டர் ஒட்டியிருக்கும். வேடிக்கை பார்த்துக்கிட்டே போவேன். இப்படித்தான் சினிமா மேல எனக்குக் காதல் வந்தது. பத்தாவது பெயிலானவுடனே சினிமாவுல நடிக்கப் போறேன்னு சொன்னேன். வீட்டுல இருக்கிறவங்க எல்லாரும் சிரிச்சிட்டு விட்டுட்டாங்க. பிடிவாதமா சென்னைக்கு வந்து கூத்துப்பட்டறையில சேர்ந்து நடிப்பு கத்துக்க ஆரம்பிச்சேன். கிடைச்ச எல்லா வேஷமும் போடுவேன். லேடி கெட்டப்கூட போட்டிருக்கேன். ‘பசங்க' படத்துல நடிக்கிறதுக்கு அட்வான்ஸ் பத்தாயிரம் செக் கொடுத்தப்போதான் பேங்க் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணினேன். சினிமாவுக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆனா, சினிமாவைப் புரிஞ்சிக்கவே எனக்கு பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கு...'' வெளிப்படையாகப் பேசுகிறார் விமல்.

ஒரு காலத்தில் லோ பட்ஜெட் புரொட்யூசர்களின் விருப்ப ஹீரோ. வெள்ளிக்கிழமை தவறாமல் படங்கள் ரிலீஸாகும் அளவு பிஸியாக இருந்தார். நெருக்கடியான ஒரு பிரேக்கைக் கடந்து, இப்போது ‘விலங்கு’ வெப் சீரீஸ் மூலம் கவனம் ஈர்த்தவரிடம் பேசினேன்.

“சினிமாவைப் புரிஞ்சுக்க எனக்கு பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கு!”

‘‘சினிமாவில் பெரிய இடைவெளி விழுந்தது. இதை எப்படிக் கடந்து வந்தீங்க?’’

‘‘கிட்டத்தட்ட மூணு வருஷம். பலருக்கும் இப்படி ஆகியிருக்கு. எல்லாரும் ‘டைம் சரியில்ல’ன்னு சொன்னாங்க. யோசிச்சுப் பார்த்தப்போ எனக்கும் டைம்தான் சரியில்ல போலன்னு தோணுச்சு. நல்லாதான் போயிட்டு இருந்தது. அப்புறம், படங்கள்ல எப்படி கமிட்டாகிறதுன்னு எனக்குத் தெரியாமப்போயிருச்சு. சில படங்கள்ல நடிச்சுதான் ஆகணும்னு பிரஷர் ஆகிருச்சு. கதையைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரம்கூடப் போயிருச்சு. இப்படியொரு சூழலைக் கடந்து வந்தது பெரிய விஷயம். என்னைச் சுத்தி நடக்கிறத புரிஞ்சுக்கவே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகிருச்சு.

சூப்பரான கதைகளைத் தேர்ந்தெடுத்து ஹிட் கொடுத்திருக்கேன். இருந்தும், மத்தவங்க மைண்ட் செட்டுக்கு ஓடுன மாதிரி ஒரு எண்ணம். என் மனசுக்குத் தோணின மாதிரி வேலை செய்யாம, வேற யார் யார் மைண்ட்செட்டுக்கோ வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். எல்லாம் புரிஞ்சதும், அதை நிறுத்த ஆரம்பிச்சேன். என்னைச் சுத்தி தேவையில்லாம இருந்த வங்களைத் தவிர்த்தேன். இதுக்கு அப்புறம் எனக்காக செலக்ட் பண்ணுன கதைதான் ‘விலங்கு.' இப்போ என் மனசு சொல்றத கேட்டு ஓட ஆரம்பிச்சிருக்கேன். ‘விலங்கு’ வெப்சீரிஸுக்குப் பிறகு பாண்டிராஜ் தயாரிப்புல கதை கேட்டு ஓகே பண்ணியிருக்கேன். மித்ரன் ஜவகர் படமும் பண்ணப்போறேன். போஸ் வெங்கட் சாரும் கதை சொல்லியிருக்கார். இனி என் லைன் அப் வேற மாதிரி இருக்கும்.’’

“சினிமாவைப் புரிஞ்சுக்க எனக்கு பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கு!”

‘‘ ‘விலங்கு' வெப்சீரிஸ் வெற்றியை எதிர்பார்த்தீங்களா?’’

‘‘கதையைக் கேட்டப்போ வித்தியாசமான ஜானர்ல இருக்குன்னு தோணுச்சு. எதார்த்தமான போலீஸ் கேரக்டரா இருந்தது. கன்டென்ட்டா நல்லாருந்தது. தயாரிப்புக்கு மதன் சார் உள்ளே வந்தவுடனே கான்பிடென்ட் லெவல் அதிகமாகிருச்சு. ஜீ5 வெளியிடுறப்போ சரியான ரூட்ல போறோம்னு தோணுச்சு. ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர் பிரசாந்த் எடுத்த விதமும் சரியா இருந்துச்சு. பிரசாந்த் ‘புரூஸ்லீ' படம் எடுத்துத் தோற்றுப்போனவர். தயாரிப்பாளர் மதனுக்கும் நல்ல படங்கள் எடுத்து வெற்றி வரல. நானும் தோல்வில இருந்த ஹீரோ. எங்க மூணு பேருக்கும் ஒரு வெற்றி தேவைப்பட்டுச்சு. தோற்றுப் போயிருந்த மூணு பேருக்குமே, ஜெயிச்சே ஆகணும்னு வெறி இருந்தது. இதுக்கான பரிசை ‘விலங்கு' கொடுத்துச்சு.

ஆனா, ஓ.டி.டி-ல யாரெல்லாம் பார்ப்பாங்கன்னு டவுட் இருந்தது. ஏன்னா, மேல்தட்டு மக்கள் மட்டும்தான் வெப் சீரிஸ் பார்ப்பாங்கன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ரிலீஸுக்குப் பிறகு கிராமத்துல இருந்துகூட ‘யப்பா, நல்லா பண்ணியிருக்கப்பா’ன்னு பூக்கட்டுற அக்காகூட பார்த்துட்டுச் சொன்னாங்க. நல்ல படைப்பா இருந்தா எதுல ரிலீஸானாலும் மக்கள் பார்ப்பாங்க.’’

‘‘ ‘விமலுக்கு என்னாச்சு, ஏன் இப்படி ஆகிட்டார்’ங்கிற வார்த்தைகளை எப்படிக் கடந்து வந்தீங்க?’’

‘‘சினிமாவுல நல்லது சொல்றதையும் கேட்டிருப்போம். கெட்டது சொல்றதையும் கேட்டிருப்போம். நம்முடைய சூழ்நிலை எப்படியிருக்குன்னு நமக்குத்தானே தெரியும். சில இடங்கள்ல தப்பு பண்ணிட்டேன். அப்புறம், தப்பு என்னன்னு கண்டுபிடிச்சு இப்போ சரி பண்ணிட்டு இருக்கேன். ஜீரோல இருந்து தொடங்கி கோடிகளைப் பார்த்திருக்கேன். ஒண்ணும் இல்லாமலும் வாழ்ந்திருக்கேன். சிலருக்குக் கையில காசு இல்லன்னா வாழ முடியலன்னு சொல்லுவாங்க. நான் அப்படி இல்ல. கோடி ரூபாய்லயும் வாழ்ந்திருக்கேன். நூறு ரூபாய்லயும் சமாளிச்சுப் பழகியிருக்கேன்.’’

‘‘சிங்காரவேலன் பிரச்னைல என்னதான் நடந்துச்சு?’’

‘‘இந்த மாதிரியான ஆளுங்ககிட்ட சகவாசம் வெச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஒரு மனிதனை எப்படிக் காயப்படுத்தணும், அடிமையா வெச்சுக்கணும்னு நினைக்குறாங்கன்னு இவரைப் பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. இப்போ இவருடைய மனச்சாட்சி உறுத்தும்னு நினைக்குறேன். மூணு வருஷமா என்னுடைய வாழ்க்கையை என்னை வாழ விடாமப் பண்ணிட்டாங்க. என்னுடைய வாழ்க்கையை இன்னொருத்தர் வாழ்ந்துட்டு இருந்திருக்காங்க. இதுக்கு நானும் அனுமதி கொடுத்திருக்கேன்னு லேட்டாதான் புரிய வந்தது. தம்பி தினேஷ் மற்றும் வழக்கறிஞர் மூலமாகதான் உண்மையைப் புரிஞ்சிக்கிட்டேன். என் வாழ்க்கையை மீட்கவும் ஆரம்பிச்சேன்.

இனி வேற விமலைப் பார்க்கலாம். ‘குலசாமி’ படத்துல கொஞ்சம் சீரியஸான லுக்ல நடிச்சிருக்கேன். படத்துக்கு விஜய் சேதுபதிதான் வசனம் எழுதியிருக்கார். படத்துல காமெடியே இருக்காது. ரெகுலர் விமலைத் தாண்டிய ஒருத்தரை இதுல பார்க்கலாம். ‘துடிக்கும் கரங்கள்' படத்துல சிட்டி பையனா நடிச்சிருக்கேன். ‘தெய்வ மச்சான்' காமெடி ஜானர். எல்லாம் கண்டிப்பா ஹிட் அடிக்கும்.’’

“சினிமாவைப் புரிஞ்சுக்க எனக்கு பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கு!”

‘‘சோஷியல் மீடியாவில் ‘விமலிசம்' வைரலானதே?’’

‘‘முதல்ல, ‘விமலிசம்'னா என்னன்னுகூட எனக்குத் தெரியல. ஆனா, ‘நம்ம வீட்டுப் பையன் விமல். நல்ல படங்கள் பண்ணணும்’னு நினைச்சிட்டு என் ரசிகர்கள் இருக்காங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து அக்கறையா பேசுவாங்க. இவங்களாலதான் இன்னும் சினிமால இருந்துகிட்டிருக்கேன்.

‘‘உங்ககூட வந்தவங்க இப்போ வேறொரு இடத்துக்கு மேல போயிட்டாங்கன்னு நினைக்குறது உண்டா?’’

‘‘அப்படி எந்த நினைப்பும் இல்ல. ஏன்னா, என்கூட நடிச்சவங்க மேலயும் போயிருக்காங்க. கீழேயும் இறங்கியிருக்காங்க. நான் எப்படியிருக்கேன்னு மட்டும்தான் பார்க்குறேன். நம்மள நம்மகூட ஒப்பிட்டுப் பார்த்தா மட்டும் போதும். மத்தவங்ககூட என்னை ஒப்பிட்டுப் பார்க்குறதுல உடன்பாடு இல்ல.’’

‘‘உங்க திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?’’

‘‘ ‘களவாணி' ஸ்டைல்ல காதல் திருமணம். முதல்ல என் மாமனார் வீட்டுல ஒரு நடிகனுக்கு பொண்ணைக் கொடுக்கக்கூடாதுன்னு உறுதியா இருந்தாங்க. அவங்க அப்படி நினைச்சத தப்புன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, என் மனைவி டாக்டருக்குப் படிச்சிட்டு இருந்தாங்க. ஆனா, மனைவி என் மேல நம்பிக்கையா இருந்தாங்க. அதனால, நாங்களா முடிவெடுத்து திருமணம் பண்ணிக்கிட்டோம். இப்போ மாமனார் வீட்டுல சமாதானம் ஆகிட்டாங்க. மூணு குழந்தைகள் இருக்காங்க. ரெண்டு பையனுக்குப் பிறகு பொண்ணு பொறந்தா. அவ பொறந்ததுக்குப் பிறகு கூடுதல் பொறுப்பு உண்டாகியிருக்கு. வாழ்க்கையும் நேர்த்தி ஆகியிருக்கு.’’