Published:Updated:

"லண்டனுக்கு ஷூட்டிங் போயிருந்தேன்.. அதுக்குள்ள பொறாமை, கண் திருஷ்டி?!" - விமல்

சனா

'களவாணி 2' படத்தில் நடித்திருக்கும் விமல், அந்தப் படம் குறித்த பிரச்னைகளைப் பற்றி பேசியிருக்கிறார்.

களவாணி 2
களவாணி 2

தமிழ் சினிமாவில் ஒன்பது வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம், `களவாணி'. விமலின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கித் தயாரித்திருக்கிறார், சற்குணம். விமல், ஓவியா நடித்திருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்துப் பல சர்ச்சைகள் வந்தது. குறிப்பாக, படத்தின் காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாக சிங்கரவேலன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ``படத்தின் தயாரிப்பாளர் நான்தான். என்னுடைய படத்தை வெச்சு வியாபாரம் பண்ண விமலும், சிங்காரவேலனும் யார், நான் தயாரித்ததற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் இருக்கு.'' என்று சற்குணம் பேசினார். பல பிரச்னைகளைப் படத்தின் ரிலீஸ் தேதி சந்தித்தது. அனைத்துப் பிரச்னைகளும் முடிந்து படம் ரிலீஸாக இருப்பதாகப் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து விமலிடம் பேசினேன்.

விமல், ஓவியா
விமல், ஓவியா

`` `களவாணி 2' பிரச்னை சுமுகமாக முடிந்திருக்கிறது. ஆக்சுவலா, என்னதான் நடந்தது?"

`` `களவாணி 2' படத்தை சற்குணம்தான் தயாரித்தார். இதைத் தயாரிக்கிற ஐடியா எனக்குத் துளியும் இல்லை. ஆனா, பலரும் இதில் என்ன நடந்ததுனு தெரியாம தவறா புரிஞ்சிக்கிட்டாங்க. அதிலும், சற்குணம் மற்றும் சிங்காரவேலன் இருவருக்குமிடையே பிரச்னைகள் நடந்தப்போ நான் சென்னையிலேயே இல்லை. `சண்டக்காரி' பட ஷூட்டிங்கிற்காக லண்டன் போயிருந்தேன். அங்கிருந்த என்னை இவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், இங்கே நடந்த பிரச்னைகளெல்லாம் எனக்கு லேட்டாதான் தெரியவந்தது. ஒருவேளை நான் சென்னையில் இருந்திருந்தா இந்தப் பிரச்னை எப்போவோ முடிஞ்சிருக்கும். எல்லோரையும் உட்கார வெச்சுப் பேசி முடிச்சிருப்பேன். சென்னைக்குத் திரும்பிய பிறகு எல்லோரிடமும் பேசி சுமுகமாகப் பிரச்னையை முடித்துவிட்டேன். கண்டிப்பாகப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும்.

`களவாணி' ஹிட் படம். அதோட இரண்டாம் பாகம் உருவாகுனு தெரிஞ்சப்போ பலபேர் பொறாமைப்பட்டாங்க. அதனால, இந்தப் பிரச்னைகள் எல்லாத்தையும் கண் திருஷ்டினு நினைக்கிறேன். முதல் பாகத்தில் நடித்த அறிக்கி கேரக்டரில்தான் இரண்டாம் பாகத்திலும் நடிச்சிருக்கேன். விளையாட்டுப் பையனா இருக்கிற ஒருத்தன், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்போது என்ன பிரச்னைகள் வருது. அதுக்குப் பிறகு என்ன நடக்குது அப்படீங்கிறதுதான் கதை. `கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துல அரசியலில் போட்டியிடணும்னு நினைப்பேன். ஆனா, அது முழுநீள அரசியல் படம் இல்லை. `களவாணி 2' முழுநீள அரசியல் படம். கண்டிப்பா ரசிகர்களுக்குப் பிடிக்கும். முக்கியமா, படத்துல அரசியல் சார்ந்த பாட்டு ஒண்ணு இருக்கு. அது செம ஹிட் அடிக்கும். படத்தில் வில்லன் ரோல் பண்ணிருக்கிறவர், எந்தப் படத்திலும் நடிக்காத ஒருத்தர்."

`` `மன்னர் வகையறா' படத்துக்குப் பிறகு, வேறெந்தப் படத்தையும் தயாரிக்கலையே.. என்ன காரணம்?"

``தயாரிப்பாளரா இருக்கிறது பெரிய வேலை. நடிகரா இருந்துட்டு, தயாரிப்புல முழுக் கவனமும் செலுத்த முடியல. கொஞ்சநாள் லண்டன்ல ஷூட்டிங் போனதுக்கே இங்கே இவ்ளோ பெரிய பிரச்னை. ஆனா, கண்டிப்பா திரும்பவும் படம் தயாரிப்பேன்."

`` `சண்டக்காரி' படம் பற்றி?"

``எனக்கு முழுக்க முழுக்கப் புது அனுபவத்தைக் கொடுத்திருக்கிற படம். படத்துல டெக்னிக்கல் டீம் எல்லோரும் புதுசு. ஸ்ரேயா எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. `மகாதீரா'வுல வில்லனா நடிச்ச தேவ் இதுல எனக்கு வில்லன். ஆர்.மாதேஷ் இயக்குகிறார். மலையாளத்தில் ஹிட் அடித்த `மை பாஸ்' படம் மாதிரி இருக்கும், இந்தப் படம். லண்டன்ல முதல் ஷெட்யூல் முடிஞ்சிருக்கு. இனி, இங்கேதான் ஷூட்டிங்.

ஸ்ரேயா பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா நடிச்சவங்க. சில வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்காங்க. அவங்களுக்குத் தமிழ் சரியா தெரியாது; எனக்கு இங்கிலீஷ் சரியா வராது. அதனால ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. போகப் போக செட் ஆகிடுச்சு. படத்துல அவங்கதான் எனக்கு பாஸ். நான் அவங்ககிட்ட வேலை பார்க்கிற தொழிலாளி."

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..