Published:Updated:

“நல்லவனுக்கு வெரைட்டி கிடைக்காது!”

வினோத் சாகர்
பிரீமியம் ஸ்டோரி
வினோத் சாகர்

முன்னாடியெல்லாம் நான் நடிச்ச குறும்படங்களைக் கொடுத்து, வாய்ப்புகள் கேட்பேன். சசி சாரோட ‘பிச்சைக்காரன்' உட்பட பல நிறைய வாய்ப்புகளை ஷார்ட் பிலிம்கள் கொடுத்துச்சு

“நல்லவனுக்கு வெரைட்டி கிடைக்காது!”

முன்னாடியெல்லாம் நான் நடிச்ச குறும்படங்களைக் கொடுத்து, வாய்ப்புகள் கேட்பேன். சசி சாரோட ‘பிச்சைக்காரன்' உட்பட பல நிறைய வாய்ப்புகளை ஷார்ட் பிலிம்கள் கொடுத்துச்சு

Published:Updated:
வினோத் சாகர்
பிரீமியம் ஸ்டோரி
வினோத் சாகர்

``அட, இவர் ‘ராட்சசன்' படத்தில் வரும் கணக்கு வாத்தியாராச்சே!'' என்கிறீர்களா? நீங்க சொன்னது சரிதான். ‘ராட்சசன்' படத்திற்குப் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் கேரக்டர் ரோலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் வினோத் சாகர். ‘‘வாரம் ஒரு படமாவது ரிலீஸ் ஆகிடுது’’ என அடக்கத்துடன் சிரிக்கிறார். அமலாபாலின் ‘கடாவர்', மலையாளத்தில் துல்கர் சல்மானின் ‘சல்யூட்', பிருத்விராஜின் ‘ஜனகணமன' என சமீபத்திய படங்களில் ஸ்கோர் செய்துவருகிறார்.

‘‘ஆச்சரியம் என்னன்னா, என்னைப் பார்க்கிற யாருமே, ‘இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ன்னு யோசிப்பாங்க. நான் நடிச்ச கேரக்டர்கள் நினைவுக்கு வராது. என் பிரச்னையே அதுதான். ‘கடாவர்’ ஸ்பாட்ல அமலாபால் மேம்கிட்ட பேசுறப்பதான், ‘ராட்சசன்’ல நான் ஒர்க் பண்ணின விஷயமே அவங்களுக்குத் தெரியும். அதோட இயக்குநர் அனூப் பணிக்கரும், அபிலாஷும், ‘நீங்க இதுல டீன் ரோல் பண்றீங்க. பிளேசர் போட்டுட்டு ரிச் லுக்ல வர்றீங்க’ன்னு சொன்னாங்க. ஆனா, முழுக்கதையும் கேட்ட பிறகு, எனக்கு அந்த மார்ச்சுவரி கேரக்டர் பிடிச்சிருந்தது. ‘எனக்கு டீன் ரோல் வேணாம். மார்ச்சுவரி ரோலே பண்றேன்’னு கேட்டு வாங்கிக்கிட்டேன். ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பா கேரக்டர்னு தெரியும். நான் ஏதோ எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு அப்பாவா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா, ரித்திகா மாதிரி பெரிய பொண்ணுங்களுக்கு அப்பான்னு ஷூட்டிங் போனப்பதான் தெரியும். அதை எதிர்பார்க்கலைன்னாலும், இப்படி ஒரு கேரக்டர்ல நடிச்சது சந்தோஷம்தான்’’ என்கிறார் வினோத்.

வினோத் சாகர்
வினோத் சாகர்

‘‘என்னால ஒரு போலீஸாவோ, பெரிய ரவுடியாகவோ, அல்லது மிகப்பெரிய பணக்கார லுக்கிலோ பண்ண முடியாது. அதற்கான உயரமும் தோற்றமும் எனக்கில்ல. ஆனா, இன்னிக்கு எல்லா ரோல்களும் எனக்கு ஃபிட் ஆகுது. ‘நான்', ‘பிச்சைக்காரன்', ‘ராட்சசன்', ‘காலா', ‘குலேபகாவலி', ‘குருதி ஆட்டம்', ‘தமிழ்ராக்கர்ஸ்’னு இதுவரை 50 படங்களுக்கு மேல பண்ணிட்டேன்'' என முகம் மலரும் வினோத் சாகர், ஒரு டப்பிங் கலைஞரும்கூட!

‘‘பூர்வீகம் சென்னை. பள்ளி நாள்களில் படிச்சிருக்கேன்னு சொல்றதைவிட நடிச்சிருக்கேன்னுதான் சொல்வேன். அவ்ளோ டிராமாக்களில் நடிச்சேன். அப்புறம், டிகிரி முடிச்சிட்டு, குடும்பச் சூழல் காரணமா சேல்ஸ் மேனேஜரா ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். ஆர்.ஜே ஆகிட்டா, சினிமாவுல எளிதா நுழைஞ்சிடலாம்னு நினைச்சு துபாய்ல உள்ள ஒரு ரேடியோவுல ஆர்.ஜே. ஆனேன். அங்கே போனதும், ஆர்.ஜே. வேலை சினிமா என்ட்ரிக்கு உதவாதுன்னு புரிஞ்சுகிட்டேன். அப்புறம், பயிற்சிப்பட்டறையில் கொஞ்சம் நடிப்பு கத்துக்கிட்டேன். எனக்குத் திருமணமாகி, முதல் பையன் பிறந்த பிறகுதான் சினிமாவில் அடியெடுத்து வைக்க ஆரம்பிச்சேன். நான் வேலையை உதறிட்டு சினிமாவை செலக்ட் பண்ணினதும், என் மனைவி பயந்தாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. வெளியூர்ல இருந்து இங்கே வந்து யார் யாரெல்லாமோ பிழைக்கிறாங்க. இந்த ஊர்ல பிறந்த என்னால ஏன் பொழைக்கமுடியாதுன்னு கேள்வி எழுந்துச்சு. நம்பிக்கையோடு வந்தேன். சினிமா என்னையும் அரவணைச்சிடுச்சு.

முதல் வாய்ப்பு தந்த படம், ‘இதயம் திரையரங்கம்.' முழு நேர நடிகனானேன். ஆனாலும் வாழ்க்கையை ஓட்டறதுக்காக டப்பிங் யூனியன்ல உறுப்பினராகி, டப்பிங்குகளும் பண்ணிட்டிருக்கேன்'' எனும் வினோத், குறும்படங்களிலும் அதிகம் நடித்திருக்கிறார்.

வினோத் சாகர்
வினோத் சாகர்

‘‘முன்னாடியெல்லாம் நான் நடிச்ச குறும்படங்களைக் கொடுத்து, வாய்ப்புகள் கேட்பேன். சசி சாரோட ‘பிச்சைக்காரன்' உட்பட பல நிறைய வாய்ப்புகளை ஷார்ட் பிலிம்கள் கொடுத்துச்சு. அந்தப் படத்துக்குப் பிறகு நான் அதிகம் வெளியே தெரிஞ்சது ‘ராட்சசன்'லதான். இயக்குநர் ராம்குமாரோட ‘முண்டாசுபட்டி' குறும்படத்துல வாய்ஸ் கொடுத்தேன். அவரோட இன்னொரு குறும்படமான ‘சைனா டீ'யில் ஒரு ரோல் பண்ணினேன். அப்படிக் கிடைச்ச வாய்ப்பு, ‘ராட்சசன்’. ‘குலேபகாவலி' இயக்குநர் கல்யாண், குறும்படங்களிலிருந்து வந்தவர். நெகட்டிவ் ரோல்கள் இன்னிக்கு நான் அதிகம் நடிச்சிட்டிருந்தாலும் என்னை காமெடியனாக அவர் ஒருத்தர்தான் பார்க்கறார். அவரோட மூணு படங்களிலும் காமெடி ரோல் கொடுத்தார்'' எனும் வினோத், கெட்டவன் ரோல்களில்தான் நடிக்க விரும்புகிறார். ‘‘ஆமாங்க. நல்லவனா நடிச்சா வெரைட்டி ரோல்ஸ் கிடைக்காது. வில்லனா, கெட்டவனா நடிக்கறப்ப விதவிதமான ரோல்கள் அமையும்'' என்கிறார் வினோத் சாகர்.