Published:Updated:

`நான் படும் கஷ்டங்கள்..!' - மிஷ்கினுக்கு எதிராகப் பட்டியலிடும் 'துப்பறிவாளன்-2' விஷால்

மிஷ்கின் - விஷால்
மிஷ்கின் - விஷால்

ஒரு இயக்குநர் திரைப்படத்தைவிட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்ன?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்த துப்பறிவாளன் படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்று அறிவித்தது படக்குழு. இந்தப் படமும் விஷால் பிலிம் பேக்டரி சார்பில்தான் எடுக்கப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் `துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் - விஷால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டுவந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று வெளியான போஸ்டரில் மிஷ்கின் பெயர் தவிர்க்கப்பட்டிருந்தது. மேலும் விஷாலே படத்தின் இயக்குநராக மாறியுள்ளார்.

மிஷ்கின் - விஷால்
மிஷ்கின் - விஷால்

இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் ஒன்றை மிஷ்கின், விஷாலுக்கு எழுதியிருந்தது வெளியாகியது. அதில், ஜிஎஸ்டி நீங்கலாக சம்பளம் 5 கோடி ரூபாய், இந்தி ரீமேக் உரிமைகள், இயக்குநரின் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் (இங்கிலாந்தில் கார் வாடகை உட்பட) எனப் பல்வேறு கண்டிஷன்கள் போடப்பட்டிருந்தன. மேலும், இந்த கண்டிஷன் ஏதாவது ஒன்றைத் தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், `துப்பறிவாளன்- 2' படத்தைப் பொறுத்தவரை, விஷால் பிலிம் ஃபேக்டரிக்கு செய்யும் வேலைகளை இயக்குநர் நிறுத்தலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

``என்னை `கொலைகாரப் பாவி'ன்னார் இளையராஜா!" - மிஷ்கின் ஷேரிங்ஸ்

இந்தக் கடிதம் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமீபத்தில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளதை முன்வைத்து அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ``ஒரு இயக்குநர் திரைப்படத்தைவிட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்ன?

கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குநர், தயாரிப்பாளர்கள் பணத்தை ரூ.35 லட்ச ரூபாய் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தைத் தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர், படத்தைவிட்டு ஒரு இயக்குநர் விலகுவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு இயக்குநர் திரைப்படத்தைவிட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்ன? படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை...

மிஷ்கின்
மிஷ்கின்

படத்தின் தயாரிப்பின்போது, ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக்காட்டினால் அது தவறா. இங்கிலாந்தில் 3 முதல் 4 மணிநேரப் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்துக்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா. இல்லை, ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்குப் பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை.

``உதயநிதிக்கும் எனக்கும் ஆரம்பத்துல மிஸ்மேட்ச் ஆச்சு; அது ஏன்னா..." - `சைக்கோ' கதை சொல்லும் மிஷ்கின்

நான் இன்னும் ஆச்சர்யப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அநாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது. இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் விஷால் பிலிம் ஃபேக்டரி அலுவலகத்துக்கு வருவது ஒரு இயக்குநருக்குச் சரியானதா? திரைப்பட தயாரிப்பின்போது ஏற்படும் ஆர்வத்தையும் தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா?

விஷால்
விஷால்

நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், ஏற்கெனவே படங்களைத் தயாரிப்பவரோ, அறிமுகத் தயாரிப்பாளரோ, எந்தத் தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் ஷூட்டிங்கின்போது நான்பட்ட கஷ்டங்களையோ, ஒரு தயாரிப்பாளராகத் தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான். மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையைச் சந்திக்கக் கூடாது.

நல்ல வேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இந்தப் படத்தைக் கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கிச் சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதி செய்கிறேன்.

`` `சைக்கோ' படத்துக்கு ஒளிப்பதிவாளர் நான் இல்லை... மிஷ்கின் புரிந்துகொள்வார்" - பி.சி.ஶ்ரீராம்

இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரைக் கெடுப்பது அல்ல. ஆனால், இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர்கள் அனைவரும் விஷால் பிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துக்கு `துப்பறிவாளன்-2' படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.

இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசிர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராகச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு