Published:Updated:

``மேடம்னு சொல்லாம எந்தப் பொண்ணுகிட்டயும் சிம்பு பேசமாட்டார்..!'' - `விடிவி' கணேஷ்

விடிவி கணேஷ் மற்றும் சிம்பு
விடிவி கணேஷ் மற்றும் சிம்பு

`விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார் `விடிவி' கணேஷ். தயாரிப்பாளரும் நடிகருமான இவர் சிம்புவின் மிக நெருங்கிய நண்பரும் கூட. சமீபத்தில் வெளியான குக்கிங் வீடியோவில் `விடிவி' கணேஷ்தான் சிம்புவின் பார்ட்னர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``லாக்டெளன் ஆரம்பிச்சு ஐம்பது நாள்தான் ஆகுது. ஆனா, இது ஏதோ ஐம்பது வருஷத்தைக் கடந்த மாதிரியிருக்கு. இவ்ளோ வருஷத்துல எனக்கு வீட்டுல மட்டும் இருந்து பழக்கமேயில்ல. இப்போ முழுக்க முழுக்க வீட்டுல இருக்குற மாதிரி ஆகிடுச்சு'' புலம்பலும் சிரிப்புமாகத் தன் ட்ரேட்மார்க் கரகரக் குரலில் பேச ஆரம்பித்தார் கணேஷ்.

``நான், என் மனைவி ரெண்டு பேர் மட்டும்தான் வீட்ல இருக்கோம். அப்ப வீடு எவ்ளோ ரணகளமா இருக்கும்னு பார்த்துக்கோங்க. சண்டைகள் வரும், போகும். எதுவா இருந்தாலும் நான் முதல்ல அவங்ககிட்ட சரண்டர் ஆகிடுவேன். இல்லைனா சண்டை பெருசாகி வீடு ரெண்டாகிடும்.

இப்ப நிறைய படம் பார்க்குறேன். சில இங்கிலீஷ் படங்களும் பார்த்தேன். ஆனா, பெரும்பாலும் பழைய படங்கள்தான். தமிழ்ல `சிவந்த மண்,' `அன்பே வா,' `உலகம் சுற்றும் வாலிபன்' படங்கள்லாம் பார்த்தேன். ரொம்ப நாளா பார்க்காம மிஸ் பண்ணியிருந்த `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் பார்த்தேன். படம் வந்து எட்டு வருஷம் கழிச்சு பார்த்திருக்கேன். விஜய் சேதுபதி ரொம்ப நல்லா நடிச்சிருந்தார். திரைக்கதை நல்லா இருந்தது'' என்றவரிடம் சினிமா, சண்டைதவிர வேற என்ன பொழுதுபோக்கு எனக் கேட்டேன்.

``லாக் டெளன்ல புதுசா டைம் டேபிள் போட்டு வாழ ஆரம்பிச்சிருக்கேன். இதுக்குக் காரணம் இயக்குநர் கெளதம் மேனன்தான். அவர்தான் `டைம் டேபிள் போட்டு வேலையைச் செய்யுங்க'னு சொன்னார். அதுக்கு ஏத்த மாதிரி தூங்க, குளிக்க, சாப்பிட, படம் பார்க்கனு எல்லாத்துக்கும் ஒரு நேரம் செட் பண்ணி இயங்கிட்டிருக்கேன்'' என்றவரிடம் சிம்புவின் சமையல் வீடியோ பற்றிக் கேட்டேன்.

த்ரிஷா - சிம்பு
த்ரிஷா - சிம்பு

``சிம்புகூட அடிக்கடி வீடியோ கால்ல பேசுவேன். மனுஷன் செம ஸ்டைலா இருக்கார். நல்ல பொண்ணு கிடைச்சா உடனே கல்யாணம் பண்ணிடுவார். ஆனா, அதுதான் தேடிட்டிருக்கோம். இன்னும் எதுவும் செட் ஆகல. வீட்ல பார்க்குற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கார் சிம்பு.

நான் சிம்புகூட இருக்குற மாதிரி சமீபத்துல வெளியான அந்த சமையல் வீடியோ இப்ப எடுத்ததில்லை. அது லாக்டெளனுக்குலாம் முன்னாடி எடுத்தது. இப்போதான் போஸ்ட் பண்ணியிருக்காங்க. இந்த வீடியோல சொன்னபடி சிம்பு வருங்கால மனைவியை நல்லா பார்த்துக்குவார். ரொம்ப மரியாதை தெரிஞ்சவர் சிம்பு. நல்லா பழக்கமானவங்ககிட்ட மட்டும்தான் ரொம்ப க்ளோஸா இருப்பார். மத்தவங்க யாரா இருந்தாலும் வயசுல சின்னவரா இருந்தாகூட `சார்'னு சொல்லித்தான் பேசுவார். மேடம்னு சொல்லாம எந்தப் பொண்ணுகூடயும் பேசமாட்டார்.

`கார்த்தி டயல் செய்த எண்' குறும்படத்துல நான் நடிக்கல. குறும்படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு நானும் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.
கணேஷ்

இந்த லாக்டெளன்னால சிம்புவும் வீட்லதான் இருக்கார். வீட்டுல இருக்குற எல்லோருக்கும் சேர்த்து சமைக்கவும் செய்றார். நிறைய வொர்க்அவுட் பண்ணிட்டு இருக்கார். எல்லாம் சரி ஆகிடுச்சுனா `மாநாடு' ஷூட்டிங்குக்குக் கிளம்பிடுவார். என்னோட `சுமோ' படம் லாக்டெளன் காரணமா ரிலீஸாகமா இருக்கு. ஜீவா கூட ஒரு படத்துல நடிக்க கமிட்டாகி இருக்கேன். இந்தப் படத்துக்காக ஷூட்டிங் போறப்போதான் லாக்டெளன் ஆரம்பிச்சிருச்சு. அதனால பேலன்ஸ் இருக்குற எல்லா வேலைகளையும் செஞ்சு முடிக்கணும். இந்த லாக்டெளன் எப்போ முடியும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். வீட்ல இருக்க முடியல. கொரோனாகூட வாழப் பழகித்தான் ஆகணும். இதுக்கு நான் ரெடியாகிட்டேன். வேற வழியில்ல. நம்ம மக்கள் எல்லோரும் கொஞ்சம் சுத்தம், சுகாதாரமா இருந்தா நல்லாயிருக்கும்.''

விடிவி கணேஷ்
விடிவி கணேஷ்

`` `விடிவி' கணேஷ் விடிவி குறும்படத்துல நடிச்சிருக்காரா?'' என்றேன். ``நான் இந்தக் குறும்படத்துல நடிக்கல. நானும் குறும்படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன். கெளதம் இப்போ படத்துலயும் நடிக்க ஆரம்பிச்சிட்டார். மலையாளத்துல நடிச்சிருந்த `Trance' படம் பார்த்தேன். சூப்பர் ஆக்டிங்'' என்று கரகரத்தார் கணேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு