Published:Updated:

"எனது கதை, வசனத்தில் விரைவில் படம் இயக்க இருக்கிறேன்!"- திருச்செந்தூர் கோயிலில் யோகி பாபு

யோகி பாபு, சின்னிஜெயந்த் உள்ளிட்ட நடிகர்கள்

"நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நான் இரண்டாவது படம் நடித்துவருகிறேன். ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்த அனுபவம் மிக அருமையாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்." - யோகி பாபு

"எனது கதை, வசனத்தில் விரைவில் படம் இயக்க இருக்கிறேன்!"- திருச்செந்தூர் கோயிலில் யோகி பாபு

"நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நான் இரண்டாவது படம் நடித்துவருகிறேன். ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்த அனுபவம் மிக அருமையாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்." - யோகி பாபு

Published:Updated:
யோகி பாபு, சின்னிஜெயந்த் உள்ளிட்ட நடிகர்கள்

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் திருநெல்வேலி மாவட்டம்     உவரியில் நடைபெற்று வரும் ‘போட்’ என்னும் திரைப்படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த நிலையில், யோகி பாபு, சின்னி ஜெயந்த் ஆகியோர் கொண்ட படக் குழுவினர்  திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 

யோகிபாபு, சின்னிஜெயந்த் உள்ளிட்ட நடிகர்கள்
யோகிபாபு, சின்னிஜெயந்த் உள்ளிட்ட நடிகர்கள்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த யோகிபாபு, “நான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் அவருடன் சேர்ந்து நடிப்பேன். நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நான் இரண்டாவது படம் நடித்துவருகிறேன். ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்த அனுபவம் மிக அருமையாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் மத்தியில் சேர்ந்து நல்ல மனிதன் என்கிற பெயர் பெற்றுள்ளேன்.

திரைப்படங்களில் படப்பிடிப்பின் போது இயக்குநர்கள் என்ன சொல்லித் தருகிறார்களோ அதைத்தான் நான் காமெடியாக வெளிப்படுத்துகிறேன். தனி ஒருவராகச் செய்வது மட்டும்தான் காமெடி என்று கிடையாது. குழுக்களாகச் சேர்ந்து செய்வதும் காமெடிதான். விரைவில் நானே கதை, வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். ஆனால், அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் கிடைத்ததும் படம் இயக்குவேன். கதாநாயகனாக நடிக்க எனக்கு முகம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், 'மண்டேலா' போன்ற படங்கள் கதாநாயகர்களை வைத்து இயக்கக்கூடிய படம் அல்ல. என் முகபாவனைக்கு ஏற்றாற்போல்தான் ’மண்டேலா’ திரைப்பட வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  

யோகிபாபு
யோகிபாபு

அதனால் நான் அது மாதிரியான படங்களில் கதாநாயகனாகத் தொடர்ந்து நடித்து வருகிறேன். காமெடியனாகவும் கதாநாயகனாகவும் மக்கள் என்னைப் பார்ப்பது ஒரே முகம்தான். அது மக்களுக்கு நன்றாகவே தெரியும். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், மிகவும் கருத்துள்ள மனிதர். அவர் அப்துல்கலாம் போன்ற பெரிய மனிதர்களுடன் அதிகம் பயணித்தவர். இந்தச் சமூகத்திற்குப் பல நல்ல கருத்துகளை நகைச்சுவையுடன் கலந்து சொல்லியிருக்கிறார். அதனால், அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும். மக்களுக்குக் கருத்துச் சொல்லும் அளவிற்கு  எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.