Published:Updated:

``யோகி பாபு ரொம்பவே அப்செட்ல இருக்கார்!" - தகவல் சொல்லும் நண்பர்கள்

யோகி பாபு
யோகி பாபு

``அண்ணன் கொஞ்சம் அப்செட்ல இருக்கார்'’ என்ற அவரது நெருங்கிய சகாக்கள் சிலர், ``நடந்தது இதுதான்; இதுல எந்த திட்டமிட்ட உள்நோக்கமும் இல்லை" என்றபடி விஷயத்தை விவரிக்கத் தொடங்கினார்கள்...

இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிற சூழலில், முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு திட்டமிட்ட படி வரும் ஏப்ரல் 5-ம் தேதி சென்னையில் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இவரது திருமணம், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, சொந்த ஊரான செய்யாறு அருகே குலதெய்வக் கோயிலில் வைத்து எளிமையான முறையில் நடந்தது.

ஒருபுறம் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்துவிட்டு, மறுபுறம், அந்தக் கொரோனோவைப் பொருட்படுத்தாமல், 300 பேரை அழைத்து தன்னுடைய திருமண வரவேற்புக்குத் தயாராகிறார் என யோகி பாபு மீது விமர்சனங்கள் எழத் தொடங்கிய நிலையில், அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

யோகி பாபு
யோகி பாபு

``அண்ணன் கொஞ்சம் அப்செட்ல இருக்கார்'’ என்ற அவரது நெருங்கிய சகாக்கள் சிலர், ``நடந்தது இதுதான்; இதுல எந்த திட்டமிட்ட உள்நோக்கமும் இல்லை" என்றபடி விஷயத்தை விவரிக்கத் தொடங்கினார்கள்...

``முன்னணி காமெடி நடிகரா இருக்கிற அண்ணனின் திருமணம் தவிர்க்க இயலாத சில குடும்பப் பிரச்னைகளால் அவசரக் கல்யாணமா நடக்குற மாதிரி ஆகிடுச்சு. கல்யாணம் முடிஞ்சதும் வாழ்த்துச் சொன்ன பல முன்னணி ஹீரோக்கள், `என்ன யோகி இப்படிப் பண்ணீட்டீங்களே'னு கேட்டாங்க. அதனால, சினிமா நண்பர்களுக்குன்னு வரவேற்பை பிரமாண்டமா சென்னையில நடத்தணும்னு, திருமணம் முடிஞ்ச அடுத்த சில தினங்கள்லயே முடிவுசெஞ்சிட்டார். ஷூட்டிங் இல்லாத நாளா, விடுமுறை தினமாப் பார்த்து நடத்தணும்னு அன்னைக்கு முடிவுசெஞ்ச தேதிதான் ஏப்ரல் 5. இந்தத் தேதியை முடிவுசெஞ்சப்ப இந்தியாவுல கொரோனா பத்தின பேச்சே இல்லை."

`` கொரோனோ பாதிப்பு தெரியத் தொடங்கினதும், எல்லாரையும் போல நமக்குப் பெரிய அளவுல பாதிப்பு இருக்காதுன்னு நம்பினார். ஆனா நாள் ஆக ஆக, சூழ்நிலை நாங்க நினைச்ச மாதிரி இல்லை. அதேநேரம், ஷூட்டிங் ஷெட்யூல் பிசியா இருந்ததால `பிறகு நேரம் இருக்காது’னு இன்விட்டேஷன் அடிக்கிற மாதிரியான சில விஷயங்களை முன்னாடியே செய்துட்டார்.

`சரி, ஆட்களை குறைவான எண்ணிக்கையில கூப்பிட்டு கல்யாணத்தைப் போலவே வரவேற்பையும் சிம்பிளாவே நடத்திடலாம்... என்னை வருத்தப்பட வெச்ச பாவம் கொரோனாவைச் சேரட்டும்’னு நகைச்சுவையாவே பேசி, அதையும் ஈஸியாவே எடுத்துக்கிட்டார். தமிழ்நாடு அரசு 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போட்டிருந்ததால ஏப்ரல் 5 தேதிக்குள் ஓரளவு நிலைமை சரியாகிடும்னு நம்பினார்."

மஞ்சு பார்கவி மற்றும் யோகிபாபு
மஞ்சு பார்கவி மற்றும் யோகிபாபு

``ஆனா மத்திய அரசு, 21 நாள்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவிடும்னு நாங்க எதிர்பார்க்கல. இப்ப வரவேற்பே நடக்காதுங்கிற அளவுக்கு நிலைமை கைமீறிடுச்சு’’ என்றார்கள்.

பத்திரிகை வைக்கக்கூட தயங்கித் தயங்கித்தான் எல்லோர்கிட்டயும் பேசினார். விஜயகாந்தைக்கூட பலவித யோசனைகளுக்குப் பிறகே சந்திச்சார்" என்கிறார்கள் யோகி பாபுவுக்கு நெருக்கமானவர்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வத்தை சந்தித்து, யோகிபாபு வரவேற்பு அழைப்பிதழ் தந்தபோது உடன் சென்ற, பாடகர் வேல்முருகனிடம் பேசினோம்.

பாடகர் வேல்முருகன்
பாடகர் வேல்முருகன்
மஞ்சு பார்கவியை மணந்தார் யோகிபாபு... அவசரத் திருமணம் எங்கு நடந்தது, என்ன நடந்தது? #Yogibabu

``முதல்வர் ஆபீஸ்லயே `இந்த டைம்ல வச்சிருக்கீங்களே’னு ஒரு வார்த்தை கேட்டாங்க. இன்விட்டேஷன் முன்கூட்டியே அடிச்சது குறித்துச் சொன்னோம். இப்ப நாடு முழுக்க ஊரடங்குன்னு ஆன பிறகு என்ன சொல்றது? யோகியே இது சம்பந்தமா சீக்கிரம் பேசுவார்னு நினைக்கிறேன்" என்றார் வேல்முருகன்.

அடுத்த கட்டுரைக்கு