Published:Updated:

யோகி பாபு ஹீரோ; பா.இரஞ்சித் தயாரிப்பு... கதை என்ன தெரியுமா?

பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் யார், கதை என்ன என்பது குறித்து விசாரித்தோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித், நீலம் புரொடெக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி `பரியேறும் பெருமாள்,' `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களைத் தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார். இதில் மாரி செல்வராஜ் இயக்கிய `பரியேறும் பெருமாள்' மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு, நல்ல விமர்சனங்களையும் பெற்றுத்தந்தது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீலம் புரொடக்‌ஷன்ஸில் இருந்து ஒரே நேரத்தில் 5 புதிய படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்தார் இரஞ்சித். இந்த 5 படங்களில் மூன்று படங்களை புதுமுக இயக்குநர்களான சுரேஷ் மாரி, அகிலன் மோசஸ், ஃபிராங்க்ளின் ஆகியோர் இயக்க இருப்பதாகவும், மீதி இரண்டு படங்களை மாரி செல்வராஜும், `மேற்குத் தொடர்ச்சி மலை' இயக்குநர் லெனின் பாரதியும் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

Yogi Babu, யோகி பாபு
Yogi Babu, யோகி பாபு

மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. லெனின் பாரதி படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் நடந்துவருகின்றன. இதற்கிடையே, இந்த 5 படங்கள் இல்லாமல் இன்னொரு புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார் இரஞ்சித். இதில்தான் யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

ஏற்கெனவே இரஞ்சித்தின் தயாரிப்பில் `பரியேறும் பெருமாள்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் யோகி பாபு. ஹீரோ கதிரின் நண்பனாக நடித்திருந்த இந்தக் கதாபாத்திரத்துக்கு பெரும்வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில்தான் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷான் இயக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் யோகி பாபு. ஷான், இயக்குநர் ஆர்.கண்ணணிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். `ஜெயம்கொண்டான்,' `கண்டேன் காதலை', 'இவன் தந்திரன்' உள்ளிட்டப் பல படங்களை இயக்கியவர்தான் இந்தக் கண்ணன்.

இயக்குநராக அறிமுகமாகும் ஷான் இந்தக் கதையைப் பல்வேறு நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் சொல்லி பல ஆண்டுக்கால காத்திருப்பில் இருந்தார். இந்த நிலையில்தான் இரஞ்சித்திடம் கதை சொல்லும் வாய்ப்புக் கிடைக்க, அவர் உடனடியாக நான் தயாரிக்கிறேன் என்று சொன்னதோடு ஹீரோ கேரக்டருக்கு யோகி பாபுவையும் பரிந்துரைத்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா
கோலமாவு கோகிலா

சமீபகாலமாக நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி அற்புதமான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்கிற பெயரையும் பெற்றுவருகிறார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி ஹீரோக்களை விடவும் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பர் பாபுதான். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த `கோலமாவு கோகிலா' படத்தில் மிக முக்கியமான லீட் ரோலில் நடித்திருந்தார் யோகி பாபு. இப்படத்தில், நடிகை நயன்தாராவுடன் ஒரு பாடலில் நடனமும் ஆடியிருப்பார். இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களைக் கொடுத்த நிலையில்தான், இவரின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய கதைகள் இவரைத் தேடி வர ஆரம்பித்தது. அப்படி யோகி பாபுவைத் தேடி வந்திருக்கும் படம்தான் ஷானின் கதை என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு நடுத்தரவர்க்க அப்பா - மகள் எமோஷனல் உறவு குறித்து பேசும் கதைதான் படம். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது.

Pa Ranjith
Pa Ranjith
``எனக்குதான் முதல்ல `இளைய தளபதி' பட்டம் கொடுத்தாங்க... எப்போ, யார் தெரியுமா?'' - `பிக்பாஸ்' சரவணன்

அப்பாவாக யோகிபாபு நடிக்க இருக்கிறார். மகள் கேரக்டருக்கான இறுதிக்கட்டத் தேடல் நடந்துவருகிறது. இசையமைப்பாளர் உட்பட டெக்னிக்கல் டீமை இறுதி செய்யும் வேலைகள் தற்போது வேகவேகமாக நடந்துவருகிறது.

லாக்டெளன் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு கடலூரில் தொடங்கயிருக்கிறது. குறுகிய நாள்களில் படமாக்கப்பட இருக்கும் இந்தப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஆர்யா நடிக்க பா.இரஞ்சித் இயக்கும் படத்தின் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தமிழக அரசின் அனுமதி கிடைத்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு