சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கணும்!”

ஐஸ்வர்யா லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா லட்சுமி

என் குடும்பத்துல யாரும் சினிமாவுல இல்லை. நான் வளரும்போது ரொம்பக் குறைவான படங்கள்தான் பார்த்திருப்பேன்

மலையாள சினிமா கோலிவுட்டுக்கு ஏராளமான ஹீரோயின்களைக் கொடுத்திருக்கிறது. அந்தப் பட்டியலில் ஐஸ்வர்யா லட்சுமியும் இணைகிறார். தமிழ், தெலுங்கில் வாய்ப்புகள் குவிய, செம சந்தோஷத்தில் இருக்கும் இவரிடம் கேஷுவல் சாட்.

“தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கணும்!”

`` ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடிக்கிற வாய்ப்பு எப்படி வந்தது?’’

‘‘ ‘மாயநதி’ பார்த்துட்டுதான் ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. ஆடிஷன்ல செலக்ட்டாகி யிருந்தேன். அப்போதான் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு ‘பேட்ட’ படம் வந்தது. அந்தப் படத்தை முடிச்சுட்டு இதை ஆரம்பிக்கிறோம்னு சொன்னாங்க. அந்த ஒரு வருஷத்துல நான் சிம்மையும் மொபைலையும் மாத்திட்டேன். எப்போதாவதுதான் பழைய சிம் பயன்படுத்துவேன். அப்படி ஒருமுறை பார்க்கும்போது அதுக்கு நிறைய கால் வந்திருந்தது. யாரா இருக்கும்னு பார்க்கும்போது மறுபடியும் கால் வந்தது. எடுத்துப் பேசினபோதுதான், அது கார்த்திக் சார் டீம்னு தெரிஞ்சது. ‘இந்தக் காலையும் நீங்க எடுக்கலைனா நாங்க வேற ஹீரோயின்கிட்ட பேசலாம்னு முடிவு பண்ணிருந்தோம்’னு சொன்னாங்க. நல்ல வேளை, அந்தப் போனை நான் அட்டென்ட் பண்ணிட்டேன். இல்லைனா, இந்தப் படத்தை மிஸ் பண்ணியிருப்பேன். இன்னொரு ஸ்பெஷலான விஷயம் என்னன்னா, என்னுடைய பிறந்தநாள் அன்னைக்கு சரியா நைட் 12 மணிக்கு முதல் ஷாட் நடிச்சேன்.’’

“தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கணும்!”

``உங்க கரியர் ஆரம்பிச்சதிலிருந்து இப்போ வரை பெரிய பெரிய டெக்னீஷியன்கள், ஹீரோக்கள்னு வேலை செஞ்சுட்டிருக்கீங்க. இதெல்லாம் எதிர்பார்த்தீங்களா?’’

‘‘என் குடும்பத்துல யாரும் சினிமாவுல இல்லை. நான் வளரும்போது ரொம்பக் குறைவான படங்கள்தான் பார்த்திருப்பேன். இருந்தாலும் தொடர்ந்து சினிமாவுல நல்ல படங்கள்ல பயணிக்கிறது ரொம்ப ரொம்ப சந்தோஷம். கதை எனக்குப் பிடிச்சிருந்ததுன்னா, கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு அந்தக் கேரக்டரை என்னால பண்ண முடியுமான்னு யோசிச்சு ஓகே சொல்லுவேன். நல்ல கதைகள்தான் எனக்கு வருது. அந்த விதத்துல நான் அதிர்ஷ்டசாலி.’’

``மலையாளம், தமிழ், தெலுங்குன்னு மூணு மொழிகளிலும் நடிக்கிறீங்க. ஒவ்வொரு இன்டஸ்ட்ரிக்கும் என்னென்ன வித்தியாசங்களை உணர்றீங்க?’’

‘‘எந்த ஊர் சினிமாவா இருந்தாலும் ஒரே எண்ணம்தான். சினிமாவை ரொம்ப விரும்பிப் பண்றாங்க. தமிழ், தெலுங்கு சினிமாக்கள் பெரிய பட்ஜெட்ல உருவாகுது. மலையாளத்துல அப்படியில்லை. ‘ஜகமே தந்திரம்’ பட பட்ஜெட்ல மலையாளத்துல பத்துப் படங்கள் பண்ணியிருப்பாங்க. மலையாளத்துல மேக்கப், ஹேர்ஸ்டைல் இதுல ரொம்ப பர்ஃபெக்‌ஷன் தேவையில்லை. கேரக்டர்தான் பார்ப்பாங்க. தமிழ், தெலுங்குல அப்படியில்லை. அந்தக் கேரக்டரோட ஸ்டைல் ஃபேக்டரும் தேவை.’’

``நீங்க ஒரு டாக்டர். ஆனா, சினிமாவுக்கு வந்துட்டீங்க. உங்க நண்பர்கள் உங்ககிட்ட சினிமா பத்திப் பேசுவாங்களா?’’

‘‘பெரும்பாலும் ஹீரோக்களைப் பத்திதான் கேட்பாங்க. சினிமாவுல பார்க்கிற மாதிரிதான் நேர்லயும் இருப்பாங்களான்னு கேட்பாங்க. இப்போ கொரோனா காலத்துல தடுப்பூசி போடச் சொல்லி விழிப்புணர்வு வீடியோ பண்ணியிருக்காங்க. என்னதான் அவங்களுக்கு கன்டன்ட் தெரிஞ்சாலும் கேமரா முன்னாடி சொல்ல வரலை. எனக்கு போன் பண்ணி, ‘எப்படி நடிக்கிற, எனக்கு கேமரா ஆன் பண்ணினவுடன் எல்லாம் மறந்துடுது’ன்னு கேட்டாங்க. மத்தபடி அவங்களுக்கு எப்போவும் நான் அவங்களுடைய தோழிதான், சினிமா ஹீரோயின் கிடையாது.’’

“தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கணும்!”
“தனுஷிடம் ஒரு கேள்வி கேட்கணும்!”

`` ‘அசுரன்’ படத்தை லண்டன்ல தனுஷ்கூட பார்த்தீங்களாமே!’’

‘‘ஆமா. டீம் எல்லோரும் சேர்ந்து ‘அசுரன்’ படத்துக்குப் போனோம். மாசக் கணக்குல லண்டன்ல இருந்ததனால ஊரை, வீட்டை மிஸ் பண்ணினேன். அப்போதான் எல்லோரும் படத்துக்குப் போனோம். சென்னை தியேட்டர் மாதிரியான ஃபீல் வந்தது. அந்த ரெண்டு மணி நேரம் லண்டன்ல இருக்கோம்ங்கிறதையே மறந்துட்டேன்.’’

``தனுஷ்கிட்ட ஒரு கேள்வி கேட்கணும்னா என்ன கேட்பீங்க?’’

‘‘ஹாலிவுட்ல படங்கள் பண்ணும்போது என்னைக் கொஞ்சம் ரெகமண்ட் பண்ணுவீங்களா?’’

``லாக்டெளன்ல என்ன புதுசா கத்துக்கிட்டீங்க?’’

‘‘ரொம்பப் பொறுமையா இருக்கக் கத்துக்கிட்டு இருக்கேன். தவிர, அரசியலைக் கவனிக்க ஆரம்பிச்சிருக்கேன்.’’