Published:Updated:

``கல்யாணம் பண்ற மாதிரி போட்டோவை பாவ்னிந்தர் ஏன் பகிர்ந்தார்னு தெரியல!" - அமலாபால் தரப்பு விளக்கம்

அமலா பால்
அமலா பால்

சமூக வலைதளங்களில் நடிகை அமலா பாலுக்குத் திருமணம் முடிந்திருப்பதாகச் செய்திகள் வந்தன. இதுகுறித்து அமலா பாலின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலாபால். 'மைனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், 'ஆடை' படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்தப் படம் விமர்சனம் ரீதியாக இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது இந்திப் படங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து வருகிறார் அமலாபால். இந்நிலையில், மும்பை பாடகர் பாவ்னிந்தர் சிங் உடன் அவர் திருமண செய்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் இவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் இந்தப் புகைப்படம் இன்ஸ்டாவிலிருந்து நீக்கப்பட்டது. செய்திகள் பலவற்றில் அமலாபாலுக்குத் திருமணம் முடிந்துவிட்டதாகத் தகவல்கள் வந்தநிலையில் அமலா பால் மேனேஜர் தரப்பில் இதைப் பற்றி விசாரித்த போது,

``கல்யாணம் பண்ற மாதிரி போட்டோவை பாவ்னிந்தர் ஏன் பகிர்ந்தார்னு தெரியல!" - அமலாபால் தரப்பு விளக்கம்

``இந்தத் திருமணம் பற்றி வந்துகொண்டிருக்கும் செய்தி தவறு. மும்பையில் நடந்த ஈவன்ட் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதை எதற்காக பாவ்னிந்தர் இன்ஸ்டாவில் பகிர்ந்தார் என்று தெரியவில்லை. திருமணம் என்பது அமலாபாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை'' என மேனேஜர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு