Published:Updated:

`` `மாஸ்டர்' ஷூட்டிங்ல அப்படி ஒரு கேள்வி கேட்டு விஜய் என்னை கலாய்ச்சுட்டார்!'' - ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

`` `வடசென்னை’யோட இரண்டாவது நாள் ஷூட்டிங் அப்போ, வெற்றி சார்கிட்ட, ‘உங்களுக்கு வேணும்னா வேற நடிகையைக்கூட நடிக்க வைங்க. நான் என்னமோ இதுக்கு சரிப்பட்டு வருவேன்னு தோணல’னு சொன்னேன்.''

சினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர், தனியிசைக் கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. ஆல்தியா, சந்திரா என இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களைப் போலவே இவரது ரியல் கேரெக்டரிலும் போல்டுனெஸ் இருக்கும்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

சினிமா, இசை, எழுத்து எனப் பேசுவதற்கு அவரிடம் நிறைய இருந்தது. நீண்ட நாள் தொடர்தலுக்குப் பிறகு குவாரன்டீன் மாலை வேளையில் அவருடன் உரையாடினோம்.

ஒரு இசைக் கலைஞனுக்கு மக்கள்கிட்ட இருந்து வர்ற அந்த சந்தோஷ சத்தம்தான் எப்பவுமே எனர்ஜி.
ஆண்ட்ரியா

குவாரன்டீன் நாள்களில் அதிக நேரம் செலவிட்டது எந்த விஷயத்துக்காக?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

''இசை, பாட்டு, கவிதை, யோகா என இந்த விஷயங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரை இசை ஒரு தெரபி. இந்த நேரத்தில் என்னோட இசை மத்தவங்களுக்கு சந்தோஷம் கொடுக்குதுனு நினைக்கும்போது இன்னும் உற்சாகமா இருக்கு. இந்தச் சூழல்ல, பொருளாதார ரீதியா கஷ்டப்படறவங்களுக்கு இசை மூலமா நிதி திரட்டுறதுனால நிறைய பேர்கிட்ட இருந்து அழைப்பு வருது. அதையும் பார்த்து பண்ணிட்டிருக்கேன்."

லாக்டெளன் முடிஞ்சதும் முதல்ல போக நினைக்கும் இடம்?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

''நிச்சயமா ஸ்டேஜ்தான். ஸ்டேஜ்ல நின்னு ஒரு ஷோ பண்ணணும். ஒரு இசைக் கலைஞனுக்கு, மக்கள்கிட்ட இருந்து வர்ற அந்த சந்தோஷ சத்தம்தான் எப்பவுமே எனர்ஜி. அந்த எனர்ஜியை மிஸ் பண்றேன். அதெல்லாம் சீக்கிரமே திரும்ப கிடைக்கணும்.”

கடந்த சில வருடங்களா தமிழ் சினிமால பெண்களை மையப்படுத்தி எடுக்குற படங்கள் அதிகமாகிட்டு வருது. அதைப் பத்தி உங்களோட கருத்து?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

``இது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனா, என்னைப் பொறுத்தவரை லாக்டௌனுக்குப் பிறகு தமிழ் சினிமா மொத்தமும் நிறைய மாற்றங்களைச் சந்திக்க இருக்கும்னுதான் சொல்வேன். அதுல முக்கியமான ஒரு விஷயம், டிஜிட்டல் தளங்களை நோக்கித்தான் சினிமாவோட நகர்வு இருக்கும். ஏன்னா, இந்த லாக்டௌன் சூழல்ல ஓ.டி.டி உபயோகிக்கிறது அதிகமாகிட்டு வருது. இது, லாக்டௌனுக்குப் பிறகும் தொடரும். ஓ.டி.டி ப்ளாட்ஃபார்ம் பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு சரியான தளமா இருக்கும். சரியான தயாரிப்பாளர்கள் இதை முன்னெடுத்தாங்கன்னா நிறைய படங்கள் வரும். முக்கியமா வுமன் சென்ட்ரிக் படங்கள். டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம், தென்னிந்திய மக்களுக்கே புது விஷயம். நிச்சயமா பெரிய ஹீரோ படங்கள் எல்லாம் தியேட்டர்லதான் ரிலீஸ் ஆகும். அதுல எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனா, இதையும் முயற்சி செய்யலாம். புதுவிஷயங்கள் எல்லாமே புரட்சிதானே."

ஒரு படத்துக்குள்ள கமிட் ஆகும்போது என்ன மாதிரியான விஷயங்களைக் கவனத்துல வெச்சுப்பீங்க?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

`` ’அன்னையும் ரசூலும்’, ‘வடசென்னை’ படங்கள்ல கமிட் ஆகும்போது, எனக்கு முழுக் கதையும் தெரியாது. அந்த இயக்குநர்களோட வேலைபார்க்கணும்னு கமிட்டானேன். அந்தப் படத்துல கண்டிப்பா ஒரு மேஜிக் இருக்கும்னு தெரியும். ஒரு சில நேரத்துல, அந்த நம்பிக்கைலதான் இயக்குநர்களை நம்பி கதைக்குள்ள கமிட் ஆவேன். அதுமட்டுமில்லை, கதை பயங்கரமா இருக்கலாம். ஆனா, ஒரு இயக்குநர் அதை நல்லா எடுக்கலைன்னா, பிரயோஜனம் இல்லையே. இதுல தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு டீம் வொர்க்கும் இருக்கு.”

எந்த இயக்குநர்கூட வேலை பார்க்க ஆசை?

மணிரத்னம்
மணிரத்னம்

``மணிரத்னம் சாரோட வேலைபார்க்க ஆசை இருக்கு. அவரோட படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் ‘ரோஜா’, ‘தளபதி’லாம் என்னோட ஆல் டைம் ஃபேவரைட். சீக்கிரம் ஆசைப்பட்டது நடக்கும்னு நம்புறேன்.”

‘மாஸ்டர்’ல கமிட் ஆன கதை?

vijay
vijay
MASTER

``முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்' பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா'னு என்னைக் கலாய்ச்சார். விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்' செம ஹிட். அதே மாதிரி `மாஸ்டர்'லயும் வாய்ப்பு கிடைக்கும்னு உங்களை மாதிரியே நானும் எதிர்பார்த்தேன். ஆனா, ஃபீமேல் சிங்கரே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க."

நம்பர் 1 இடத்துல நம்பிக்கை இருக்கா?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

``அது மாறிட்டேதான் இருக்கும். அது மேல எனக்கு பெருசா நம்பிக்கையும் இல்லை. நல்ல பட வாய்ப்பு வரணும், அதுல நான் திருப்தியா நடிகணும். அவ்வளவுதான். வேற எதுவுமே வேண்டாம். என்னை யோசிச்சு இயக்குநர்கள் கதை எழுதணும். அதுதான் என்னோட குறிக்கோள். இப்ப அந்த மாதிரியான கதைகளும் வந்துட்டிருக்கு. இதே எனக்குப் போதும். எப்பவுமே நம்ம வேலைதான் பேசணும்."

‘தரமணி’ ஆல்தியா, ‘வடசென்னை’ சந்திரா, ரெண்டு கதாபாத்திரங்களுமே வேற வேற எக்ஸ்ட்ரீம். எப்படி உங்களை தயார்படுத்திக்கிட்டீங்க?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

``இயக்குநர்களுக்காக கமிட்டான கதைகள்தான் ரெண்டுமே. அதுவும் ‘தரமணி’ படம் பண்ணும்போது, ராம் சார்கூட நிறைய சண்டை போட்டிருக்கேன். ஆல்தியாவைப் பத்தின கேள்விகள் ஆண்ட்ரியாக்குள்ள வந்துட்டே இருக்கும். அதனால, அவரோட நிறைய விவாதம் வரும். அதேபோலதான், ‘வடசென்னை’ சந்திராவும். இரண்டாவது நாள் ஷூட்டிங் அப்போ வெற்றி சார்கிட்ட, ‘உங்களுக்கு வேணும்னா வேற நடிகையைக்கூட நடிக்க வைங்க. நான் என்னமோ இதுக்கு சரிப்பட்டு வருவேன்னு தோணல’னு சொன்னேன். ஆண்ட்ரியாக்குள்ள சந்திரா போக கொஞ்சநாள் ஆச்சு. ராஜன் – சந்திரா போர்ஷன் ஷூட் பண்ணும்போதுதான் கொஞ்சம் செட்டானேன். ஏன்னா, அங்க இருக்கிற சந்திராதான் உண்மையான கதாபாத்திரம். அது கண்டுபிடிச்சதும் மத்தது எல்லாம் எனக்கு தானா வந்துடுச்சு."

பாடகி, நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர்னு எல்லாப் பக்கமும் ட்ராவல் பண்ண எப்படி நேரம் கிடைக்குது?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

``நான் அப்படி எதுவும் யோசிக்கிறது கிடையாது. அந்த நேரத்துல என்ன தோணுதோ செய்வேன். ஒவ்வொரு விஷயத்துல ஒவ்வொருத்தர் ஜீனியஸா இருப்பாங்க. நான் அப்படி ஜீனியஸ் இல்லைன்னாலும், ஓரளவுக்கு நல்லா பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்குறதால பண்றேன். எழுதுறதுல இன்னும் அதிகம் கவனம் செலுத்தணும்னு இருக்கேன். ஏன்னா, எழுதற விஷயம் என்னைப் பொறுத்தவரை உணர்வுபூர்வமானது. எழுதறது எனக்கே புது விஷயம். வாழ்க்கையில புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருக்கணும். இல்லைன்னா போர் அடிச்சிடும். சமீபத்துலகூட ‘ப்ரோக்கன் விங்க்ஸ்’ங்கிற கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருந்தேன். அது, நான் சின்ன வயசுலருந்து இப்ப வரை எழுதின கவிதைகளோட தொகுப்பு. இந்த லாக்டௌன் சூழலால அதைப் புத்தகமா மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்க முடியலைனு என்னோட இன்ஸ்டா பேஜ்ல அப்லோட் பண்ணிட்டு இருக்கேன்.''

திரைப்பட இசையமைப்பாளரா உங்களை எப்ப பார்க்கலாம்?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

``இப்போதைக்கு ஐடியா இல்லை. அதுவா அமைஞ்சா பார்க்கலாம். அதுமட்டுமில்லாம, அது அவ்வளவு ஈஸியான விஷயமும் கிடையாது. ஒரு பாட்டு எழுதும்போது, எனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணுவேன். ஆனா, படத்துக்கு இசையமைக்கிறது அப்படியான விஷயம் கிடையாது. அங்க தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, கதையோட சூழல்னு நிறைய விஷயங்களை கவனத்துல வெச்சிக்கணும். நிறைய திறமையான இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவுல இருக்காங்க. அவங்களே பண்ணட்டும். அவங்களுக்காக நான் பாடுறதே போதும்.”

உங்களோட ஃபேவரைட் இசையமைப்பாளர்கள்?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

``ரஹ்மான் சாரை எப்பவுமே பிடிக்கும். தெலுங்குல தேவி ஸ்ரீபிரசாத். அவர்கூட வொர்க் பண்ணும்போது தானாவே ஒரு எனர்ஜி நமக்குள்ள வந்துடும். அடுத்தது கண்டிப்பா, யுவன். அவர்கூட நிறைய நல்ல பாடல்கள் எனக்கு அமைஞ்சிருக்கு. அப்புறம் சந்தோஷ் நாராயணன். என்ன பண்ணினாலும் வித்தியாசமா சூப்பரா பண்ணிடுவார். இப்ப தமிழ் சினிமா இண்டஸ்ட்ரில மாஸ் காட்டிட்டு இருக்குற அனிருத், செம ஹார்ட்வொர்க் பண்ணக்கூடிய ஒருத்தர். அப்புறம் லியோன், நிவாஸ் பிரசன்னா, இப்படி நிறைய பேரை சொல்லிட்டே போகலாம். இவங்களையெல்லாம் தாண்டி, ராஜா சார்தான் எப்பவுமே எனக்கு டாப்.”

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

ஃபிட்னெஸ் சீக்ரெட்?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

``எனக்கு வொர்க்அவுட் பண்ண ரொம்பப் பிடிக்கும். வழக்கமா ஜிம் போவேன். ஆனா, இந்தச் சூழல்ல அதை மிஸ் பண்றேன். அதனால வீட்டுலேயே யோகா பண்றேன். ஒரு நாள்ல குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடம்புக்கு வேலை கொடுக்கணும். அதுவும் இந்த லாக்டௌன் சூழல்ல கண்டிப்பா பண்ணணும். அது நம்ம உடம்புக்கு மட்டுமில்ல, மனசுக்கும் நிம்மதி. ஃபிட்னெஸ்ங்கிறது வெயிட்லாஸ் மட்டுமில்ல, நம்ம உணர்வுகள் தொடர்பானதும்கூட.”

முதல்பட அனுபவம்?

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

`` ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துக்குள்ள கமிட்டாகுறதுக்கு முன்னாடி தூர்தர்ஷன்ல ரேவதி மேம் இயக்கத்துல ஒரு நாடகம், சின்னச்சின்ன விளம்பரங்கள், இப்படித்தான் பண்ணிட்டு இருந்தேன். அப்படி இருக்கும்போது ஒரு விளம்பரம் கெளதம் மேனன் சார்கூட பண்ணேன். அதுமூலமாதான் இந்தப் பட வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு முன்னாடியும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனா, அப்ப படிச்சிட்டு இருந்ததால வந்த வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்துட்டேன். அப்ப கெளதம் சாரோட அசிஸ்டென்ட் என்கிட்ட வந்து, ‘எப்படினாலும் அமெரிக்கா போய் படிக்கப்போற. இந்த ஒரு படம் பண்ணினா, உனக்குக் கிடைக்கற பணம் பாக்கெட் மணிக்கு பயன்படும்’னு சொல்லி என்னை நடிக்க வெச்சார். சினிமாக்குள்ளதான் போகணும்னு எந்த ஐடியாவும் இல்லாமதான் இருந்தேன். சினிமாங்கிற அத்தியாயம் என் வாழ்க்கையில அதுவா நடந்தது. பாக்கெட் மணிக்காகன்னு விளையாட்டா ஆரம்பிச்ச பயணம், இப்ப வேற திசையில நல்லபடியா போயிட்டிருக்கு.

‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துல ‘உன் சிரிப்பினில்’ பாட்டுதான் என்னோட முதல் ஷாட். நிறைய மேக்கப்லாம் போட்டு விட்டாங்க. அந்தப் படத்தோட சினிமாட்டோகிராஃபர் மேக்கப்போட என்னை பார்த்துட்டு ’இதெல்லாம் வேண்டாம், மேக்கப் இல்லாம நார்மலா வா’ன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. ஏன்னா, எனக்கு மேக்கப் போடுறதே பிடிக்காது. அப்படி இப்படினு ஒரு வழியா அந்தப் படம் நடிச்சு வெளிய வந்ததும், எனக்கு நல்ல பெயர் கிடைச்சது. ஒருவேளை, அந்தப் படத்துல நடிக்காமப் போய், சினிமாக்குள்ள வராம இருந்திருந்தாலும், ஒரு என்டர்டெய்னராதான் இருந்திருப்பேன்.”

அடுத்த கட்டுரைக்கு