Published:Updated:

`` `பிகில்' படம்தான் என் வாழ்க்கையும்!'' - சஸ்பென்ஸ் சொல்லும் அனுசித்தாரா

அனுசித்தாரா
அனுசித்தாரா

மலையாள சினிமாவின் ஹோம்லி, பப்ளி பேபி, அனுசித்தாரா. 22 வயதேயான அனுசித்தாரா நடிக்கவந்த கதையே சுவாரஸ்யமானது.

பாரத்புழா ஆற்றங்கரையில், 18-ம் நூற்றாண்டில் கேரளாவில் கொண்டாடப்பட்ட விழா மாமாங்கம். பழம்பெறும் இவ்விழாவை மையமாகக்கொண்டு பீரியட் - ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியிருக்கும் படம்தான், `மாமாங்கம்'. மம்மூட்டி, உன்னி முகுந்தன், பிரச்சி, சித்திக், கனிகா எனப் பல சீனியர் நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதில், நடிகர் உன்னியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அனுசித்தாரா.

அனுசித்தாரா
அனுசித்தாரா

மலையாள சினிமாவின் ஹோம்லி, பப்ளி பேபி, அனுசித்தாரா. குண்டுக் கண்கள், குவிந்த முகம், மென்சிரிப்பு என அனுசித்தாராவை அணு அணுவாய் ரசிக்கும் ரசிகர்கள் அதிகம். தமிழ்நாட்டிலும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் அனுசித்தாராவிடம் பேசினோம். செம ஸ்வீட்டாக வந்து விழுந்தன ரிப்ளைகள்!

``மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம், `மாமாங்கம்'. இந்த மெகா பட்ஜெட் படத்தில் நான் நடிக்கிறேன் என்பதோடு, மம்மூட்டி படத்தில் நடிக்கிறேன் என்பது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இது என்னுடைய கரியரில் மறக்கவே முடியாத ஒரு படமாக இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என்னைப் பொறுத்தவரை சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் படம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். நல்ல கதை, அதுல என்னுடைய கதாபாத்திரம் வலுவாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அந்த வகையில், `மாமாங்கம்' படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் மனிக்கம். உன்னி முகுந்தனுடன் நடித்துள்ளேன்.

அனு சித்தாரா
அனு சித்தாரா

உணர்வுகளை மிகவும் உறுதியாகக் கையாளக்கூடிய பாத்திரம் தான் மனிக்கம். நிஜத்திலும் என்னுடைய கேரக்டர் அதுதான் என்பதால் ரொம்பவே ஈஸியாக அந்த கேரக்டர்ல என்னால பொருந்திப்போக முடிஞ்சது. இப்போ, மலையாளத்துல பல படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்துட்டு இருக்காங்க. ரொம்பவே வரவேற்கக்கூடிய மாற்றம் இது. இந்த மாதிரியான காலகட்டத்துல நான் நடிச்சிட்டு இருக்கேன் அப்டிங்கறதும் எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு" என்று சிரித்தவரிடம், எப்போது தமிழ்ப் படங்களில் பார்க்கலாம் என்று கேட்டோம்.

``ரஜினி, கமல், சூர்யா, விஜய், தனுஷ்... இப்படி பல திறமையான நடிகர்களைத் தமிழில் பிடிக்கும். அதேபோல ஷங்கர், மிஷ்கின், கார்த்திக் சுப்பராஜ், அட்லின்னு இயக்குநர்கள்லயும் பெரிய லிஸ்ட்டே இருக்கு. நான் அதிகம் படம் பார்க்கக்கூடிய ஒரு ஆள் என்கறதால இவங்களோட படங்களையெல்லாம் மிஸ் பண்ணாம பார்த்துடுவேன். தமிழில் நான் கடைசியா பார்த்த படம், `பிகில்'. இந்தப் படத்தோட, பர்சனலா நான் ரொம்பவே கனெக்ட் ஆகிட்டேன்.

அனுசித்தாரா
அனுசித்தாரா
`` `இந்தியன் 2’ படத்துல நடிக்கப் போறேன்'' - `பிகில், `கைதி’யில் கலக்கிய ஜார்ஜ் மரியான்!

எப்படினா படத்தோட செகண்ட் ஹாஃப்ல, கல்யாணம் ஆனதுக்குப் பிறகு கணவனோட சப்போர்ட் மூலமா மனைவி விளையாட்டுல எப்படி ஜெயிப்பாங்கன்னு ஒரு காட்சி எடுத்துருப்பாங்க. அதுபோலத்தான் என் வாழ்க்கையும். எனக்கு 18 வயசுலயே கல்யாணம் ஆகிடுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்தேன். என்னுடைய கணவர் எனக்குப் பெரிய சப்போர்ட். அவரில்லாம சினிமால எனக்கு இப்ப கிடைச்சிருக்க இடம் சாத்தியமான்னு தெரியலை.

அனுசித்தாரா
அனுசித்தாரா
`` `பிகில்'ல வராத சீன், நயன்தாராவின் பரிசு, கண்ணை மூடி திட்டு வாங்கின விஜய்!" - `பிகில்' அம்ரிதா

அதுமட்டுமில்லாம, நான் கேரளால இருக்கிற கலாமண்டலம்லதான் படிச்சேன். மோகினியாட்டம், பரத நாட்டிய டான்சர் நான். இதுக்கெல்லாம் ஃபுல் சப்போர்ட், கல்யாணத்துக்குப் பிறகும் என்னோட குடும்பத்துலருந்து கிடைச்சதுல ரொம்பவே லக்கி நான். க்ளாசிக்கல் டான்ஸ் ஸ்டேஜ்ல பர்ஃபார்ம் பண்ண எனக்குப் பிடிக்கும். சீக்கிரமே தமிழ்நாட்டுல டான்ஸ் பர்ஃபாமென்ஸ் பண்ணணும் என்பதை என் விஷ் லிஸ்ட்ல வச்சிருக்கேன். ஏன்னா தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ரொம்ப அன்பானவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்லயும் அந்த அன்பையும் மரியாதையையும் உணர்ந்திருக்கேன்" என்ற அனுசித்தாரா `மாமாங்கம்' படத்தில் மறக்கமுடியாத அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

``மாமங்கம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் அனுபவத்தை மறக்கவே மாட்டேன். ஏன்னா, மம்மூட்டி சார்கூட எனக்கான காம்பினேஷன் சீன் அன்னைக்குதான் படமாக்கினாங்க.

அனுசித்தாரா
அனுசித்தாரா

காஸ்ட்யூம் ப்ளஸ் அந்த ஹேர் ஸ்டைல்ல மம்மூட்டி சாரை நேர்ல பார்க்க பயங்கர ஆர்வமா இருந்தேன். அந்த கெட்அப்ல நிஜமான வாரியர் மாதிரியே இருந்தார். பல சமயம் ஷூட்டிங் ஸ்பாட்ல எப்ப அவர்கூட சேர்ந்து நடிப்போம்னு பாத்துட்டு இருப்பேன். அது நிறைவேறினதுல அனுசித்தாரா செம ஹேப்பி" எனத் தனது குண்டுக் கண்கள் கலங்க சிரிக்கிறார் அனுசித்தாரா.

அடுத்த கட்டுரைக்கு