Published:Updated:

`கெமிஸ்ட்ரில ஃபெயில், குஞ்சாகோ போபன் க்ரஷ், ஜோவின் பாராட்டு!' - `பொம்மி' அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளி
அபர்ணா பாலமுரளி

அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் அபர்ணா, தன் வாழ்க்கையின் சில முதல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸான `சூரரைப் போற்று' படத்தில் ஹீரோ சூர்யாவைவிடவும் அதிகம் பேசப்படுகிறார் நாயகி அபர்ணா பாலமுரளி. பொம்மி என்ற கேரக்டராகவே வாழ்ந்துகாட்டிய நடிப்புக்கு மட்டுமன்றி, மதுரை ஸ்லாங்கில் சொந்தக் குரலில் பேசியதற்கும் அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

``சொந்தக் குரல்ல பேசினது இதுதான் ஃபர்ஸ்ட் டைம்... `இப்ப போனாத்தான் என்னவாம்... இதுதான் என் முதல் டயலாக். கார்த்திகா வைத்யநாதன்கிட்ட கிளாசிகல் மியூசிக் கத்துக்கறேன். எட்டு தோட்டாக்கள் படத்துலயும் இன்னும் சில மலையாள படங்கள்லயும் பாடியிருக்கேன். தமிழ்ல மியூசிக் டைரக்டர்ஸ் கூப்பிட்டா பாட நான் ரெடி'' - அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் அபர்ணா, தன் வாழ்க்கையின் சில முதல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

முதல் வெற்றி

ரெண்டாவது படிச்சிட்டிருந்தபோது பரதநாட்டியப் போட்டியில கலந்துகிட்டு வாங்கின முதல் பரிசு.

சூரரைப்போற்று
சூரரைப்போற்று

முதல் தோல்வி

``ப்ளஸ் டூ மன்த்லி எக்ஸாம்ல கெமிஸ்ட்ரியில ஃபெயிலாயிட்டேன். லைஃப்ல முதல் தோல்வி அது. என்னால ஏத்துக்கவே முடியலை. பத்தாவதுக்குப் பிறகு ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவுல சயின்ஸ் பாடம் ரொம்ப கஷ்டமா இருந்தது. டீச்சர்ஸ் எல்லாம் என்னை சமாதானப்படுத்தி, சொல்லிக் கொடுத்து அடுத்த டெஸ்ட்டுல நல்ல மார்க் எடுக்கவெச்சாங்க. அப்புறம் மேத்ஸும் சயின்ஸும் என் ஃபேவரைட் சப்ஜெக்ட்ஸா மாறினதெல்லாம் தனிக்கதை."

முதல் காதல்

``குறிப்பிட்டுச் சொல்லிக்கிற மாதிரி எதுவும் வரலை. ஆனா, சின்ன வயசுல மலையாள ஆக்டர் குஞ்சாகோ போபன் மேல ஒரு க்ரஷ் இருந்தது."

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ

``நடிக்க வர்றதுக்கு முன்னாடியும் சரி, நடிகையான பிறகும் சரி, அந்த அனுபவம் இல்லை. என்னுடைய முதல் படம் `மகேஷின்ட பிரதிகார'த்தையே ரிலீஸாகி மூணு நாள் கழிச்சுதான் பார்த்தேன். ஃபர்ஸ்ட்டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கணும்னு வெறித்தனமா வெயிட் பண்ற ஆளில்லை நான்."

`சூரரைப் போற்று' படத்தில் `பன்னு மாதிரி இருக்கு' என்ற டயலாக்...

நடிகைகளுக்கு வெயிட்லாஸ் அவசியமா?

ஜோதிகாவின் பாராட்டு...

இப்படி இன்னும் பல தகவல்களுடன் அபர்ணா பாலமுரளியின் விரிவான பேட்டியை நாளை வெளியாகும் அவள் விகடன் இதழில் படிக்கத் தவறாதீர்கள்!

இந்த அவள் விகடனை நீங்க மிஸ் பண்ணக்கூடாது, ஏன்? 🎊 #AllNewAvalVikatan #Aval23
அடுத்த கட்டுரைக்கு