Published:Updated:

``அரசியல்வாதிகளின் பசங்கன்னா இந்த என்கவுன்டர் நடந்திருக்குமா?'' - அதுல்யா ரவி

அதுல்யா ரவி
அதுல்யா ரவி

நடிகை அதுல்யா ரவி பேட்டி.

`காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. தொடர்ந்து `ஏமாலி', `நாடோடிகள் 2' தற்போது `அடுத்த சாட்டை' என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாவிருக்கும் படம் `கேப்மாரி' எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய், வைபவி, சித்தார்த் விபின், சத்யன் எனப் பலர் நடித்துள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பாக இருந்தவரிடம் பேட்டிக்காகப் பேசினோம்.

அதுல்யா ரவி
அதுல்யா ரவி
``ஒன்பது பேருக்கு மத்தியில் நான் சிங்கிள் சிங்கப் பெண்!'' அதுல்யா ரவி

``எஸ்.ஏ.சி சார் இயக்குகிற ஒரு படத்துல நடிக்கிறதுக்கான சான்ஸ் எனக்குக் கிடைச்சதே சர்ப்ரைஸான விஷயம். ஒரு நாள் எஸ்.ஏ.சி சார் என்னை ஆபீஸுக்கு வரச்சொல்லி `கேப்மாரி' படத்தின் கதையை சீன் பை சீன் சொன்னார். மாடர்ன் பொண்ணு, நார்மல் பொண்ணுனு ரெண்டு நேரெதிர் கதாபாத்திரம். கிளாமர் ரோல்ல நான் நடிக்க மாட்டேன்ங்கிற காரணத்தால எனக்கு என்ன கேரக்டர் சரியா வருமோ அதைக் கொடுத்தார் எஸ்.ஏ.சி சார். ஷாட்டுக்குப் போகும்போது அந்தக் கதாபாத்திரம் நடிக்க வேண்டியதை எஸ்.ஏ.சி சார் ஸ்பாட்ல நடிச்சுக் காட்டுவார். இதனால, என்னாலேயும் அந்தக் கதாபாத்திரத்துக்குள்ள ஈஸியா போய் நடிக்க முடிஞ்சது."

`` 'கேப்மாரி' படத்துடைய டிரெய்லர் வெளியானப்போ அது டிரெண்டிங்ல வந்துச்சு. டிரெய்லரைப் பார்த்துட்டு இந்துஜா, கதிர்னு சினி ஃபீல்டுல இருக்கிற சில க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எனக்கு போன்பண்ணி, `வித்தியாசமா டிரை பண்ணியிருக்க. கண்டிப்பா நல்ல ரிசல்ட் வரும்’ன்னு பாராட்டி, வாழ்த்துகள் சொன்னாங்க. நான் `தளபதி' விஜய்யோட பெரிய ரசிகை. இதனால, அவர் என்னுடைய படத்தைப் பார்த்தாலே ரொம்ப சந்தோஷப்படுவேன்” எனக் குதூகலமாகிறார்.

அதுல்யா ரவி
அதுல்யா ரவி

``அமலாபால் தயாரிப்புல நடிக்கிற அனுபவம்...?"

``அமலாபால் இப்போ தன்னோட கரியர்ல கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிற படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கான கிராஃபும் இப்போ நல்லா வந்திட்டிருக்கு. இந்த மாதிரியான சமயத்துல வளர்ந்து வர்ற என்னை மாதிரியான நடிகைகளுக்கும் வாய்ப்பு கொடுக்கிறது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. அவங்க சூப்பரா பழகுவாங்க, செம ஜாலி டைப்பும்கூட" என்றவரிடம் தொடர்ந்து பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்துக் கேட்டோம்.

``சமீபமா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரா நடந்துகிட்டு வர்ற பாலியல் வன்முறைகள் அதிகமாகிக்கிட்டே வருது. இவற்றையெல்லாம் கேட்கும்போது ரொம்ப கொடுமையாவும் இருக்கு. நிச்சயமா இதைப் பத்தின தெளிவு எல்லோருக்குமே வரணும். சமீபத்துல நடந்த என்கவுன்டரைக்கூட எடுத்துக்கங்க; இதே தவற்றை, அரசியல்வாதிகளின் பசங்க பண்ணியிருந்தா இந்த என்கவுன்டர் நடந்திருக்குமா!"

Athulya ravi
Athulya ravi
அதுல்யா ரவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!

``பொள்ளாச்சியில் நடந்த கொடுமையெல்லாம் இப்போ என்ன நிலையில இருக்குன்னே தெரியலை. தண்டனைங்கிறது எல்லோருக்கும் சரிசமமா இருக்கணும். அப்போதான் தப்புகள் குறையும். அம்மாவோ, குடும்பத்தில் இருக்கிற பெரியவங்களோ தங்களுடைய குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச்னா என்னனு சொல்லிக் கொடுத்து வளர்க்கணும். இதுக்கு நாம முன்னெடுக்கிற சின்னச் சின்ன விஷயம்கூட எதிர்காலத்துல பெரிய மேஜிக்கை உண்டு பண்ணலாம். இதுக்காக என்னால முடிந்த முயற்சிகளை, நான் கண்டிப்பா செய்வேன்'' என்று சோஷியல் மெசேஜோடு பேட்டியை முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு