Published:Updated:

``ஒன்பது பேருக்கு மத்தியில் நான் சிங்கிள் சிங்கப் பெண்!'' அதுல்யா ரவி

அதுல்யா ரவி
அதுல்யா ரவி

`காதல் கண்கட்டுதே' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை அதுல்யா ரவி அவரது வாழ்க்கையில் பிடித்தமான உறவுகள் பற்றி பேசுகிறார்.

காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருக்கிறப்போ நண்பர்கள்கூட சேர்ந்துதான் என்னோட முதல் படத்தை ஆரம்பிச்சேன். படத்தோட டைரக்டர் என் சீனியர் ஒருத்தரின் ஃப்ரெண்ட். அவரும் படத்துல ரெண்டாவது ஹீரோவா நடிச்சிருப்பார். நாங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்துதான் `காதல் கண்கட்டுதே' படத்துல வேலை பார்த்தோம். காலேஜ் படிக்கிறப்போ குறும்படமா எடுத்து நிறைய விருதுகள் வாங்கின படத்தை தான் முழுநீள திரைப்படமா எடுக்க நினைச்சோம். எங்க நண்பர் மனோஜ்தான் இந்தப் படத்தை எடுத்தே ஆகணும்னு நின்னார். ஆனா, இந்தப் படத்தை எடுக்கிறதுக்கு முன்னாடியே மனோஜ் ஒரு விபத்துல இறந்துட்டார். நாங்க நல்லா இருக்கணும்னு நினைச்ச அவர் இப்போ உயிரோட இல்லை! இவருடைய ஆசையை நிறைவேற்றத்தான் நாங்க இந்தப் படத்தை ரொம்பக் கஷ்டப்பட்டு எடுத்தோம். `காதல் கண்கட்டுதே' படம் எடுத்தப்போ எங்ககிட்ட ஷூட்டிங்குக்காக பணமே இல்லை. நாங்க எல்லாம் வாரம் முழுக்க வேலை பார்த்து அந்தக் காசை வைச்சு படத்தை எடுப்போம். பல வாரம் எங்களுக்கு வேலை சரியா அமையாது. ஷூட்டிங்கும் நடக்காது. பல சிரமத்துக்கு இடையிலதான் அந்தப் படத்துக்கான ஷூட்டிங்கை முடிச்சோம்.

``ஒன்பது பேருக்கு மத்தியில் நான் சிங்கிள் சிங்கப் பெண்!'' அதுல்யா ரவி

முக்கியமா, எங்க டீம்ல நான் மட்டும்தான் பொண்ணு. மத்த ஒன்பது பேரும் பசங்க. கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆச்சு `காதல் கண்கட்டுதே' படத்தை எடுத்து முடிக்க. இந்த மூணு வருஷம் முழுக்க ஒன்பது பசங்ககூடதான் டிராவல் பண்ணினேன். யாருக்கும் என் மேலே சின்ன க்ரஷ் கூட வந்ததில்லை. முக்கியமா இந்தப் படத்துல இருந்தவங்களில் எனக்கு மட்டும்தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது. நான் சில படங்களில் நடிச்சிட்டேன். இருந்தும்... கூட நடிச்சவங்க யாருக்கும் துளி பொறாமைகூட என்மேல வந்ததில்லை. நம்ம டீம்ல இருந்து போன அதுல்யா நல்லயிருக்கா அப்படினுதான் நினைப்பாங்க. சினிமாவுல நடிக்கிறதுக்கு எங்க வீட்டுல முதலில் ஓகே சொல்லலை. அப்போ படத்தோட இயக்குநர் சிவா எங்க அம்மாகிட்ட, `என்னை நம்பி அனுப்பி வைங்க அம்மா, நாங்க சரியா பார்த்துக்குறோம்'னு நம்பிக்கை கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட் போறதுக்கு வீட்ல இருந்து அவர்தான் என்னைப் பிக்கப் பண்ணி டிராப் பண்ணுவார். ஷூட்டிங் முடிச்சிட்டு நான் யாராவது ஃபிரெண்ட பார்க்கப்போறேன்னு சொன்னாகூட, `நான்தான உன்னை உங்க வீட்டுல இருந்து கூப்பிட்டு வந்தேன். உங்க வீட்டுலேயே விட்டுறேன். அதுக்கு அப்புறம் எங்க வேணாலும் போ'னுதான் சொல்லுவார். அந்தளவுக்கு என்னை ரொம்ப பாதுகாப்பா பார்த்துக்கிட்டது என்னோட டீம்தான்.'' என்றவரிடம் திருமணம் உறவுமுறைகள் பற்றி கேட்டபோது,

``எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் காதல் திருமணம் பண்ணுனவங்க. வீட்டுல சம்மதம் கொடுக்காதனால நிறைய பிரச்னைகளைப் பார்த்தவங்க. எத்தனையோ கஷ்டங்களை வாழ்க்கையில் ரெண்டு பேரும் பார்த்திருந்தாலும் எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்வாங்க. குறிப்பா, எங்க அம்மாவுக்கு எதாவது போன்கால் வந்தாகூட அதைக்கூட அப்பா எடுத்துப் பேசமாட்டார். உனக்கு வந்த போன்கால் நீயே பேசுனுதான் சொல்லுவார். அம்மாவுக்கு அசைவம் சமைக்கத் தெரியாது. அப்பாவோட நண்பர்கள்தான் வார இறுதியில் வீட்டுக்கு வந்து அசைவம் சமைப்பாங்க. எல்லாரும் ஜாலியா, அரட்டை அடிச்சிட்டு சந்தோஷமா பொழுதைக் கழிப்போம். எந்தச் சூழலில் அப்பா அம்மாவைச் சந்தேகப்பட்டது கிடையாது. ரொம்ப அந்நியோன்யமான தம்பதி. இதுமாதிரி என்னையும் எப்போவும் சந்தோஷமா வெச்சுக்கிற ஒருத்தர்தான் வாழ்க்கைத் துணையா வரணும்னு ஆசைப்படுறேன். '' என்றார் அதுல்யா ரவி.

அடுத்த கட்டுரைக்கு