சினிமா
Published:Updated:

“எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாது!”

சாயாசிங்
பிரீமியம் ஸ்டோரி
News
சாயாசிங்

ஒருத்தரைப் பார்க்கும்போதே அவங்களுடைய கேரக்டர் என்னங்கிறது ஆடியன்ஸுக்குத் தெரியணும்... டயலாக் பேசுறதைவிட கேரக்டர் லுக் ரொம்ப முக்கியம்

``எல்லாரும் `மன்மத ராசா' பாட்டைப் பார்த்துட்டு நான் மிகப் பெரிய டான்சர்னு நினைச்சிட்டிருக்காங்க.. ஆனா, உண்மையில் நான் டான்சரெல்லாம் கிடையாதுங்க. அந்தச் சமயத்தில், டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுக்கிறதை பயங்கரமா பிராக்டீஸ் பண்ணி பர்ஃபாம் பண்ணுவேன்... அவ்வளவுதான்!” என ஆரம்பத்திலேயே ஷாக் கொடுக்கிறார் சாயாசிங். தற்போது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `மதுரை சிஸ்டர்ஸ்' தொடரில் நடித்துக்கொண்டிருப்பவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தேன்.

`` `மதுரை சிஸ்டர்ஸ்' பொறுத்தவரை நான் தான் மூத்த அக்கா. அப்பா, அம்மா இறந்த பிறகு, மூன்று தங்கைகளையும் கவனிச்சிக்க வேண்டிய பொறுப்பு என்கிட்ட இருக்கு. இந்த சீரியலில் ரொம்பவே மெச்சூர்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த சீரியல் முழுக்க மதுரை கதைக்களம் என்பதால் மதுரைக் கடைவீதி மாதிரியான செட் போட்டிருக்காங்க. அங்கே ஒரு அம்மன் சிலை இருக்கு. தினமும், ஷூட் போகுறதுக்கு முன்னாடி அந்த அம்மன் முகத்தைப் பார்த்துட்டுதான் போவேன். அவ்வளவு அழகா அந்தச் சிலையைச் செய்திருக்காங்க” என்றவரிடம் `பூவே உனக்காக' தொடரில் அவருடைய மார்டன் லுக் குறித்துக் கேட்டதும், புன்னகைக்கிறார்.

“எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாது!”

``ஒருத்தரைப் பார்க்கும்போதே அவங்களுடைய கேரக்டர் என்னங்கிறது ஆடியன்ஸுக்குத் தெரியணும்... டயலாக் பேசுறதைவிட கேரக்டர் லுக் ரொம்ப முக்கியம். அந்த சீரியலில் என்னைப் பார்த்துட்டு பலர் நல்லா இருக்குன்னு கமென்ட் பண்ணியிருந்தாங்க. அந்த வகையில் என்னுடைய டிசைனர் டீமிற்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்றவரிடம், அவருடைய கணவர் கிருஷ்ணா குறித்துக் கேட்கவும் வெட்கப் புன்னகையோடு பேசத் தொடங்கினார்.

“அவர் இப்ப சன் டி.வியில் 'தாலாட்டு' தொடரில் நடிச்சிட்டிருக்கார். அதனால, ரெண்டு பேரும் பிசியா ஓடிட்டிருக்கோம். எங்களுக்கு ஆன்லைனில் ஆர்டர் பண்ணிப் பொருள்கள் வாங்குறதில் உடன்பாடில்லை. அதனால, காதலர் தினத்திற்குக்கூட நாங்க ரெண்டு பேரும் பொருள்கள் பரிமாறிக்கொள்ள முடியல. ஃப்ரீயா இருக்கும்போது ரெண்டு பேரும் டிராவல் பண்ணி அவருக்கு நானும், எனக்கு அவரும் கிஃப்ட்ஸ் வாங்கிக் கொடுக்கணும்னு பேசி வெச்சிருக்கோம்” என்றார்.