Published:Updated:

"அந்தக் கட்டைவிரல் சீக்ரெட்... அப்பாவி ரசிகர்களின் அன்பினால் சிரிப்பேன்!" - நடிகை சாயாசிங் #HBDChayaSingh

சாயா சிங்
சாயா சிங்

"விடியற்காலையில என்னை எழுப்பி, `வா! யோகா பண்ணலாம்; ஜிம்முக்குப் போகலாம்'னு கூப்பிடுவார். இப்போ ஃபிட்னஸில் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டுடுச்சு."

''நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமா தொழிலுடன் கூடிய அழகான இல்லற வாழ்க்கை அமையணும்னு ஆசைப்பட்டேன். அதன்படி சிறந்த வாழ்க்கைத் துணையா கிருஷ்ணா எனக்குக் கிடைச்சார். எங்களுக்குப் பெரிசா எதிர்பார்ப்புகள் இல்லை. அதனால ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட்டிவா இருக்கிறோம்." - நடிகை சாயாசிங் முகத்தில் தெரியும் அன்லிமிட்டட் உற்சாகம், அவரின் வார்த்தைகளிலும் எதிரொலிக்கிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சாயாசிங், தன் கணவரும் நடிகருமான கிருஷ்ணா கொடுக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக் குறித்து பகிர்ந்துகொள்கிறார்.

சாயா சிங்
சாயா சிங்

``மூணு வருஷத்துக்கு முன்பு. என் பிறந்தநாள்ல கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் மறக்கவே முடியாது. எங்க வீட்டுல 21 படிக்கட்டுகள் இருக்கும். ஒவ்வொரு படிக்கட்டுக்கும் ஒன்று வீதம் எனக்குப் பிடிச்ச கிஃப்ட்டுகளை வெச்சு ஆச்சர்யப்பட வெச்சார். கோயில் போறது, ஏதாவதொரு கருணை இல்லத்துக்குப்போய் குழந்தைகளுக்கு இனிப்புக் கொடுக்கிறது, கேக் வெட்டுறதுனு ஒவ்வொரு பிறந்த நாளையும் எளிமையாகத்தான் கொண்டாடுவேன். என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், என் கணவர் கொடுக்கிற சர்ப்ரைஸ்தான் ஸ்பெஷல். அதேபோல கிருஷ்ணாவின் பிறந்த நாளுக்கும் நான் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பேன். ஆனா, அவர் ரொம்பவே ஸ்மார்ட். நான் கொடுக்கிற கிஃப்ட் பத்தி எப்படியோ முன்கூட்டியே தெரிஞ்சுப்பார். நான் கிஃப்ட் கொடுக்கும்போது என் மனசு கஷ்டப்படக்கூடாதுனு, சர்ப்ரைஸ் ஆனதுபோல ரியாக்ட் பண்ணுவார்" என்கிறார் க்யூட் ரியாக்‌ஷனுடன்.

திருமண வாழ்க்கைக் குறித்துப் பேசுபவர், `` `ஆனந்தபுரத்து வீடு' படத்துல நடிக்கிறப்போ எங்களுக்குள் பெரிசா பழக்கம் இல்லை. என்மேல அவருக்குத்தான் முதலில் காதல்ங்கிற அன்பு வந்திருக்கு. அதை, என் சிறந்தத் தோழியான என்னுடைய அம்மாகிட்ட சொல்லியிருக்கார். பிறகு இருவருக்கும் பிடிச்சுப்போக, எங்க கல்யாணம் முடிஞ்சது. அதனால லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்தான் எங்களுடையது. இப்போ கிருஷ்ணா, என் பெஸ்ட் ஃப்ரெண்ட்; நலன் விரும்பி, சிறந்த வாழ்க்கைத் துணை. எங்களுக்குள் சண்டைகள் வந்தா, சூழலுக்குப் பொறுத்து யாராச்சும் ஒருத்தர் விட்டுக்கொடுத்துப்போயிடுவோம்.

சாயா சிங்
சாயா சிங்

நீச்சல்னா எனக்குப் பயம். ஆனா, அதைக் கத்துக்கிறது எளிமையானதுனு எனக்கு நீச்சல் சொல்லிக்கொடுத்தார். தவிர, ஸ்கேட்டிங், பேட்மிட்டன் உட்பட பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தார். குறிப்பா அவருக்கு உடற்பயிற்சியில அதிக ஆர்வமுண்டு. தினமும் விடியற்காலையில என்னை எழுப்பி, `வா! யோகா பண்ணலாம்; ஜிம்முக்குப் போகலாம்'னு கூப்பிடுவார். இப்போ ஃபிட்னஸில் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டுடுச்சு. அவருக்குச் சமையல் கத்துக்கொடுக்க சில வருஷமா போராடிட்டிருக்கேன். அதில் அவருக்கு விருப்பமில்லைனாலும், சமையல் உட்பட என் பணிகள் பலவற்றுக்கும் ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பார்" என்கிறார்.

சினிமா, சின்னத்திரை என இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கிறார்கள். ``எங்க இருவரின் ஒவ்வொரு புராஜெக்ட்ஸ் பத்தியும் ஒண்ணா ஆலோசனை செய்வோம். என் புராஜெக்ட் பத்தி அவருக்குத் தெரிஞ்ச ப்ளஸ், மைனஸ் விஷயங்களைத் தெளிவா சொல்லுவார். பிறகு, `உனக்கு விருப்பமிருந்தால் நடி. விருப்பப்பட்ட புராஜெக்டில் வேலை செய். நடிப்பில் பிரேக் எடுத்துக் தோணுச்சுன்னா உடனே எடுத்துக்கோ'னுதான் சொல்லுவார். அதேசமயம், அவர் புராஜெக்ட் பத்தி மணிக்கணக்கில் இருவரும் ஆலோசனை செய்வோம். கல்யாணத்துக்குப் பிறகு, நாங்க இருவரும் ஒரு தெலுங்கு சீரியலில் சேர்ந்து நடிச்சோம். அது ரொம்ப ஸ்பெஷல் புராஜெக்ட்.

சாயா சிங்
சாயா சிங்
அடுத்த கட்டுரைக்கு