Published:Updated:

``இதுல ஸ்பெஷல்னு கேட்டா விஜய் சாரைத்தான் சொல்வேன்; ஏன்னா?'' - தேவதர்ஷினி

தேவதர்ஷினி
News
தேவதர்ஷினி

சிரிப்பு முகம் காட்டும் தேவதர்ஷினியின் மற்றொரு சீரியஸ் முகம் சைக்காலஜிஸ்ட். இந்த க்வாரன்டீன் நாள்களில் மெண்டல் ஹெல்த், சினிமா, சீரியல் பயணம், நாஸ்டால்ஜியா விஷயங்கள் என அவரிடம் பேச நிறைய இருந்தது.

`மர்மதேசம்’, `ரமணி VS ரமணி’, `சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என நாஸ்டால்ஜியா ஹிட் சீரியல்களின் காமெடி குயின் தேவதர்ஷினி. சீரியல்களைப் போலவே, சினிமாவிலும் இவரது அதகள காமெடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிரிப்பு முகம் காட்டும் தேவதர்ஷினியின் மற்றொரு சீரியஸ் முகம் சைக்காலஜிஸ்ட். இந்த க்வாரன்டீன் நாள்களில் மெண்டல் ஹெல்த், சினிமா, சீரியல் பயணம், நாஸ்டால்ஜியா விஷயங்கள் என அவரிடம் பேச நிறைய இருந்தது.

மகளுடன் தேவதர்ஷினி
மகளுடன் தேவதர்ஷினி

``நியதி இப்போ ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கறதால, அவளுக்கு ஆன்லைன்ல கிளாஸ் போயிட்டிருக்கு. அதனால, பாப்பாவைப் பார்த்துக்கிறது, என்னோட படிப்புத் தொடர்பான வேலைகளைத் திருப்பி பார்க்கிறதுனு பிஸியா போய்டிருக்கு. இவ்வளவு நாள்கள் ஷூட்டிங், ஷூட்டிங்னு பிஸியா இருந்ததால, வீட்டு வேலைகள் செய்யாம எஸ்கேப் ஆகிட்டிருந்தேன். அதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு இப்போ வேலை பார்த்துட்டு இருக்கேன்” என்கிறார் சிரித்துக்கொண்டே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

க்வாரன்டீன் நாள்கள்ல குடும்பத்துக்குள்ள அதிக சண்டைகள் வர்றதா சொல்றாங்க. ஒரு சைக்காலஜிஸ்ட்டா இதைத் தவிர்க்க உங்களுடைய அட்வைஸ்?

குடும்பத்துடன் தேவதர்ஷினி
குடும்பத்துடன் தேவதர்ஷினி

``எந்த ஒரு ரிலேஷன்ஷிப்லேயும் எல்லாரும் ஒரே கருத்துல ஒத்துப்போவாங்கனு சொல்ல முடியாது. முரண்பாடுகள் வரத்தான் செய்யும். பொதுவா, ஒரே மாதிரியான கருத்து இருக்கிறவங்க வீட்டுக்குள்ள இருக்குறது அதிசயம்தான். உதாரணத்துக்கு, எங்க வீட்டையே எடுத்துக்குவோம். இன்னைக்கு நாங்க மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பார்க்கலாம்னு யோசிச்சாகூட என்ன படம் பார்க்கலாம்னு முடிவு பண்றதுக்கே அரைமணி நேரம் `அதுவா, இதுவா’னு விவாதம் போகும். ஆளாளுக்கு ஒவ்வொண்ணு சொல்வோம். ஆனா, ஒருவர் மத்தவங்க என்ன சொல்றாங்கனு கேட்போம். இந்த மாதிரி, ஒருவரோட கருத்துக்கு மதிப்பு கொடுத்து என்னனு கேட்டாலே பல பிரச்னைகள் இங்க ஏற்படாது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்க நடிச்சதுலயே உங்களுக்கு பிடிச்ச சீரியல் கதாபாத்திரங்கள்?

Ramani VS Ramani
Ramani VS Ramani

`` 'ரமணி VS ரமணி’, 'சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல்கள் பத்தி எல்லாம் இந்த லாக் டௌன் சமயத்துல எனக்கு நிறைய மெசேஜஸ் வந்துட்டிருக்கு. `மர்மதேசம்’ எங்க வீட்லயே இருக்கே. ஆன்லைன்ல `மர்மதேசம்’ போட்டதுக்குப் பிறகு என் பொண்ணு ரெண்டு முறை பார்த்துடுவா. ஆரம்பத்துல நாங்க பண்ண சீரியல்கள் இப்ப வரைக்கும் பேசப்படுறது சந்தோஷமா இருக்கு. ரமணி எல்லாம் வந்து கிட்டத்தட்ட 20 வருஷம் ஆகிடுச்சு. இப்ப பார்க்கும்போதும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கு. ரமணில காமெடி ரோல் பண்ணியிருந்தாலும், எனக்கு காமெடில இருந்த பல தயக்கங்களை எல்லாம் உடைச்சது `சின்ன பாப்பா பெரிய பாப்பா’தான். அதெல்லாம் மலரும் நினைவுகள்.”

சீரியல்ல இருந்து சேத்தனும் நீங்களும் ஒதுங்கிட்டீங்களே?

 தேவதர்ஷினி-சேத்தன்
தேவதர்ஷினி-சேத்தன்

``சீரியல்ல நடிக்க இப்பவும் எங்களுக்கு வாய்ப்புகள் வந்துகிட்டுதான் இருக்கு. `அத்திப்பூக்கள்' சீரியல்தான் கடைசியா நான் நடிச்சது. அதுக்கு முன்னாடி 2011ல `காஞ்சனா' வந்தது. சினிமாவுல பல கதாபாத்திரங்கள் பண்ணியிருந்தாலும் எனக்கு சொல்லிக்கிற மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தது `காஞ்சனா’ படம்தான். பாப்பாவும் அந்தச் சமயத்துல வளர ஆரம்பிச்சுட்டா. அவளுக்கான நேரமும் நான் தர வேண்டியதா இருந்தது. 30 நாள்கள் சீரியல்ல வேலை பார்க்குறதும் சினிமால 10 நாள்கள் வேலை பார்க்கறதும் ஒண்ணுதான். சீரியலைவிட சினிமா பெட்டரா இருந்ததால அதுல மட்டுமே நடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். சேத்தன் ஒரே மாதிரியான சீரியல்கள்ல நடிச்சிட்டிருட்டிந்ததால ஒரு கட்டத்துல சீரியலே வேண்டாம்னு முடிவெடுத்துட்டார். மத்தபடி வேற எதுவும் இல்லை."

முதல் சினிமா பட வாய்ப்பு பத்தி சொல்லுங்க?

தேவதர்ஷினி
தேவதர்ஷினி

`` 'எனக்கு 20 உனக்கு 18’தான் நான் கமிட் ஆன முதல் படம். இந்தப் படத்தோட இயக்குநர் `ரமணி VS ரமணி’யோட ரசிகர். அதைப் பார்த்துதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. ஆனா, அதுக்கு முன்னாடியே `பார்த்திபன் கனவு’ படம் ரிலீஸ் ஆகிடுச்சு. சீரியல்கள்ல என்னைப் பார்த்துட்டு சினிமாவுல ஏத்துப்பாங்களான்னு ஆரம்பத்துல தயக்கம் இருந்தது. ஆனா, அதையெல்லாம், `பார்த்திபன் கனவு’ அமுதா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள்கிட்ட இருந்து வந்த பாராட்டுகள் தகர்த்துருச்சு” என்றவரிடம், ``நிறைய ஹீரோக்களுக்கு அக்கா ரோல் பண்ணியிருக்கீங்க. உங்களுடைய ஃபேவரைட் தம்பி ஹீரோ யார்?'' எனக் கேட்டால் சிரிக்கிறார்,

``இந்த மாதிரி எல்லாம் என்னை மாட்டிவிடக் கூடாது. எனக்கு எல்லாருமேதான் ரொம்பப் பிடிக்கும். ஸ்பெஷல்னு கேட்டீங்கன்னா, விஜய் சார்கூட மூணு படங்கள் பண்ணியிருக்கேன், அதே மாதிரி நானி கூடவும் சில படங்கள் தொடர்ந்து வேலை பார்க்கற மாதிரி வந்தது. அவரும் எனக்கு ரொம்ப க்ளோஸ்தான். அதர்வா எனக்கு பையன் மாதிரி. என் பொண்ணுக்கும் ரொம்பப் பிடிக்கும். அதனால, அதர்வாவைத் தத்து எடுத்துக்க போறேன்னு அவகிட்ட விளையாடிட்டு இருப்பேன். என்னோட கரியர்ல ஒருமுறையாச்சும் கமல் சார்கூட நடிக்கணும்னு ஆசை. அது அம்மா, அண்ணி, அக்கா, பாட்டினு எந்த கேரக்டரா இருந்தாலும் எனக்கு ஓக்கேதான். பார்ப்போம்."

கோவை சரளாவுக்கும் உங்களுக்குமான கெமிஸ்ட்ரி?

கோவை சரளாவுடன்...
கோவை சரளாவுடன்...

``ஸ்கிரீன்ல பார்க்குற மாதிரியே நிஜத்துலேயும் ரொம்ப கலகலப்பானவங்க சரளாம்மா. அவ்வளவு பெரிய சீனியர் ஆர்ட்டிஸ்ட் கூட நடிக்க போறோம்னு ஆரம்பத்துல எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனா, நடிப்புல நிறைய டிப்ஸ் தர்றது, சீன் நல்லா நடிச்சிருந்தா பாராட்டுறதுன்னு சரளாம்மா அவ்வளவு ஸ்வீட். எதிர்காலத்துல நான், வேற யார்கூடயாவது இந்த அளவுக்கு ஸ்க்ரீன் ஷேர் பண்ணப்பேறேனானு தெரியலை. ஆனா, சரளாம்மா அதெல்லாம் பார்க்காம நடிச்சு கொடுத்தாங்க. எங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி வொர்க்கவுட் ஆன கெமிஸ்ட்ரிதான் `காஞ்சனா 3’லயும் இருக்கணும்னு லாரன்ஸ் மாஸ்டர் பண்ண வெச்சார்.”

ஃபிட்னஸ் சீக்ரெட்?

 தேவதர்ஷினி
தேவதர்ஷினி

``மனசை சந்தோஷமா வெச்சிக்கணும். எல்லாரைப் போலவே எனக்கும் கவலைகள், மனஅழுத்தம் எல்லாமே இருக்கு. ஆனா, கவலை வந்துட்டா அதுல மட்டுமே கவனம் செலுத்தாம, அதுல இருந்து எப்படி வெளிய வந்து அதுக்கான தீர்வு என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டா போதும். இது என்னோட மனப்பயிற்சி. மத்தபடி எனக்குத் தெரிஞ்ச சில உடற்பயிற்சிகள், யோகா, அப்பப்போ ஸும்பா க்ளாஸ் போறது, ரெய்கி பண்றதுன்னு இதுதான் என் உடம்புக்கான பயிற்சி.”