Published:Updated:

`` `தமன்னா மாதிரி வருவ’னு பாலாஜி சக்திவேல் சார் சொன்னார்!'' - லாக்டெளன் வைரல் திவ்யா

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி

மொட்டைமாடி ரம்யாவின் போட்டோஷூட் போல இப்போது திவ்யா துரைசாமியின் போட்டோஷூட்ஸ் ட்விட்டரில் வைரல். இந்த லாக்டெளன் நாள்களில் தினமும் ஒரு சீரிஸ் ஆஃப் போட்டோஸ் என திவ்யா களமாட, ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது!

போட்டோஷூட் திவ்யா முன்னாள் செய்தி வாசிப்பாளர். ஹரிஷ் கல்யாண் நடித்த ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் மூலம் நடிகையாகவும் சினிமாவுக்குள் அறிமுகமானவர். இவரிடம் பேசினேன்.

செய்தி வாசிப்பாளர் அனுபவம் சொல்லுங்க?

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி
``கெளபாய் படமும், லாரன்ஸ் மாஸ்டரும் பின்னே அந்தக் குதிரையும்!'' - இயக்குநர் சிம்புதேவன்

‘’இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, படிப்புக்குச் சம்பந்தமான வேலை பார்க்கலாம்னு முயற்சி பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் ஒரு முன்னணிச் செய்தி சேனலுக்கு நியூஸ் ரீடர்ஸ் தேவைனு விளம்பரம் பார்த்தேன். எனக்கு தமிழ் உச்சரிப்பு நல்லா வரும்; அதனால ட்ரை பண்ணிப்பார்க்கலாம்னு போனேன். இன்டர்வியூவுக்கு நிறைய பேர் வந்திருந்தாங்க. ஆனா, அதில் நான்தான் முதல் ஆளாய் அடுத்த ரவுண்டுக்கு செலக்ட் ஆனேன். வெள்ளிக்கிழமை இன்டர்வியூக்குப் போனேன்; திங்கட்கிழமை வேலைல சேரச் சொல்லிட்டாங்க. எதிர்பார்க்கவேயில்லை. திடீர்னு நியூஸ் ரீடராகிட்டேன்.’’

சினிமா ஆசை எப்போது வந்தது?

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி

’’சென்னைல இருக்கற ஒரு செய்தி சேனல் விடாம எல்லா நியூஸ் சேனல்லையும் வேலைபார்த்துட்டேன். அப்படி கடைசியா ஒரு சேனல்ல வேலை பார்க்கும்போது ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. எனக்கும் நியூஸ் ரீடர் வேலை போதும்கிற மைண்ட்செட் வந்துட்டதால சினிமா சான்ஸுக்கு ஓகே சொல்லிட்டேன். ’இஸ்பேட் ராஜா’ படத்தில் நான் மா.கா.பா ஆனந்துக்கு ஜோடியா நடிச்சிருப்பேன். இந்த கேரக்டருக்கு வேற ஒரு பொண்ணுதான் முதலில் கமிட்டாகி, சில காட்சிகள் எடுத்திருக்காங்க. அது செட்டாகலைனு டைரக்டர் ரஞ்ஜித் ஜெயக்கொடி ஃபீல் பண்ணதால, அவரோட உதவி இயக்குநர் ஃபேஸ்புக்ல இருந்த என் போட்டோவைக் காட்ட அப்படித்தான் இந்த வாய்ப்பு வந்தது. இந்தப் படம் ரிலீஸானதும், என் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ். சரி, இனிமேல் நாம தொடர்ந்து நடிக்கலாம்னு முடிவு பண்ணி, என் வேலையும் விட்டுட்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்க இருக்கேன்.’’

இப்போ என்னென்ன படங்களில் நடிச்சிட்டு இருக்கீங்க?

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி

’’பாலாஜி சக்திவேல் சாரோட அடுத்த படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிச்சிருக்கேன். இந்தப் படத்துக்காக என்கிட்ட கேட்டப்போ பாலாஜி சக்திவேல் சார்கிட்ட, ‘சார் உங்க படத்துல ஹீரோயினா நடிக்கணும்னுதான் ஆசை. ஆனால், இது ரொம்ப சின்ன ரோலா இருக்கு. இருந்தாலும், இந்த கேரக்டரில் நடிச்சு உங்களை இம்ப்ரெஸ் பண்றேன்’னு சொல்லிட்டுத்தான் நடிச்சேன். அதேமாதிரி, எனக்கான ஷூட்டிங் முடிஞ்சு நான் கிளம்பும் போது பாலாஜி சக்திவேல் சார் என்கிட்ட, 'நீ ரொம்ப நல்லா நடிச்சிருக்க. நிச்சயமா உனக்கு நல்ல நல்ல படங்கள் கிடைச்சு, நீ பெரிய ஆளா வருவ. ’கல்லூரி’ படத்தில் தமன்னாவை முதன் முதலில் நடிக்க வைக்கும் போது, ‘இந்தப் பொண்ணு பெரிய ஆளா வருவா’னு எனக்கு தோணுச்சு. இன்னைக்கு உன்னைப் பார்க்கும் போதும் எனக்கு அப்படித்தான் தோணுது. நிச்சயமா இது நடக்கும். உன்னை மாதிரி தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வரதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்’னு சொன்னார்.

அவரோட வார்த்தைகள் இன்னைக்கு வரைக்கும் எனக்கு எனர்ஜி கொடுத்திட்டே இருக்கு. அடுத்து ஒரு படத்தில் ஹீரோயினா கமிட்டாகி இருக்கேன். பாலு மகேந்திரா சாரோட ஃபிலிம் ஸ்கூலில் படிச்சவர்தான், இந்தப் படத்தோட இயக்குநர். இந்த லாக்டெளன் இல்லாமல் இருந்திருந்தால், அந்தப் படத்துக்கான அறிவிப்பு வந்திருக்கும்; ஷூட்டிங்கும் ஆரம்பிச்சிருக்கும். லாக்டெளன் முடிஞ்சதுக்கு அப்பறம் இந்தப் படத்தோட அறிவிப்பு வரும்.’’

நியூஸ் ரீடர் டு நடிகை... இந்த அனுபவம் எப்படி இருக்கு?

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி

’’நியூஸ் ரீடரா இருந்தப்போ எனக்கு அடுத்தடுத்த சேனல்ல வாய்ப்புகள் தானாவே வந்துச்சு. அதெல்லாம் யூஸ் பண்ணிக்கிட்டு, அந்தத் துறையில் நான் கொஞ்சம் ஃபேமஸாத்தான் இருந்தேன். ஆனால், சினிமா அப்படி கிடையாது. இங்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு படத்தில் நடிச்சதுக்கு அப்புறமும், அடுத்த படத்துக்கான வாய்ப்புக்காக பல மாதங்களா அலைஞ்சேன். ஒரு இயக்குநரைப் பார்க்குறதுக்காக ஒரே இடத்தில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காத்திட்டு இருந்தேன். அதுக்கப்புறமும் அந்த இயக்குநரை நான் சந்திக்க முடியல. இது ஒரு சின்ன உதாரணம்தான். இந்த மாதிரி பல விஷயங்களில் கஷ்டப்பட்டுத்தான், பட வாய்ப்புகளை தேடிட்டு இருக்கேன். எனக்கு எப்போதுமே ஒரு காரியத்தில் இறங்கிட்டால், பாதியிலேயே அதை விட்டுட்டு வரப் பிடிக்காது. அதனால், இஷ்டப்பட்டுட்டே கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.’’

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவாகத்தான் கிடைக்கும்னு சொல்லுவாங்களே; அது உண்மைதானா..?

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி

’’பெரிய வாய்ப்புகள் கிடைக்காததுக்குக் காரணம் நான் தமிழ்ப் பெண்ணா இருக்கிறதுதான்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவாத்தான் கிடைக்குது. அதுக்குக் காரணம் யாரும் முழுசா முயற்சி பண்ணாம விட்றதுதான்னு நினைக்கிறேன். பாலாஜி சக்திவேல் சார் மாதிரி ஒரு சில இயக்குநர்களைத் தவிர மற்ற இயக்குநர்கள் வெளி மாநில நடிகைகளைத்தான் அதிகம் நடிக்க வைக்கிறாங்க. சினிமாவில் நடிக்கணும்னு முயற்சி பண்ற தமிழ்ப் பெண்கள், சரியான இயக்குநர்களை ரீச் பண்ண முடியாம போய்டுறாங்க. அதுமட்டுமல்லாம, பல பேர் தங்களது முயற்சிக்கு உடனே பலன் கிடைக்கணும்னு நினைப்பாங்க. அது சினிமாவுக்குச் சரிப்பட்டு வராது. இங்க பொறுமை அவசியம். அதனால, முழுசா முயற்சி செஞ்சா, தமிழ் சினிமாவில் அதிக தமிழ்ப் பெண்கள் நடிப்பாங்கனு நினைக்கிறேன்.’’

லாக்டெளன் நாள்கள் எப்படி போயிட்டு இருக்கு..?

Dhivya Dhuraisamy
Dhivya Dhuraisamy

’’இந்த லாக்டெளன் சமயத்துல நான் நியூஸ் ரீடரா இருந்திருந்தேன்னா, நேரமே இல்லாமல் பிஸியா இருந்திருப்பேன். ஆனால், இப்போ அப்படி இல்லாததால நம்மளை நாமே பிஸியா வெச்சுக்க தினமும் போட்டோஸ் போடுவோம்னு ஆரம்பிச்சேன். முதலில் இந்த லாக்டெளன் மார்ச் 31-ம் தேதி வரைக்கும் தானேனு ஆரம்பிச்சேன். அப்புறம் பார்த்தால் ஏப்ரல் 14, மே 3-னு தள்ளிப்போய் இப்போ மே 17 வரைக்கும் போய்டுச்சு. போட்டோஸ் போட ஆரம்பிச்ச சில நாள்கள்லயே என்கிட்ட இருந்த போட்டோஸ் எல்லாத்தையும் போஸ்ட் பண்ணிட்டேன். அடுத்து போடுறதுக்கு போட்டோஸ் இல்லை. சரி இனிமேல் போட்டோஸ் போட வேணாம்னு நினைக்கிற நேரத்துல, அதிக ரெஸ்பான்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு; நிறைய பேர் எப்போ போட்டோஸ் போடுவீங்கனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால, என் வீட்டுக்குப் பக்கத்துலேயே இருந்த ஒரு போட்டோகிராபர் நண்பர்கிட்ட, வாரத்துக்கு அஞ்சு நாள் போட்டோஷூட் பண்ணி தினமும் போட்டோஸ் போட்டுட்டு இருக்கேன். அதுக்கான ரெஸ்பான்ஸும் நல்லா இருக்கு.’’

அடுத்த கட்டுரைக்கு