Published:Updated:

“நடிக்கணும்ங்கிறது இருபது வயசுல இருந்தே எனக்குக் கனவு!”

கீதா கைலாசம்
பிரீமியம் ஸ்டோரி
கீதா கைலாசம்

வசந்தபாலன் சார் இயக்கத்துல துஷாரா விஜயன்கூட ஒரு படம் பண்ணிட்டிருந்தேன். அப்போ துஷாராகிட்ட ‘நட்சத்திரம் நகர்கிறது' அப்டேட் கேட்டுக்கிட்டே இருப்பேன்

“நடிக்கணும்ங்கிறது இருபது வயசுல இருந்தே எனக்குக் கனவு!”

வசந்தபாலன் சார் இயக்கத்துல துஷாரா விஜயன்கூட ஒரு படம் பண்ணிட்டிருந்தேன். அப்போ துஷாராகிட்ட ‘நட்சத்திரம் நகர்கிறது' அப்டேட் கேட்டுக்கிட்டே இருப்பேன்

Published:Updated:
கீதா கைலாசம்
பிரீமியம் ஸ்டோரி
கீதா கைலாசம்

‘‘சேலத்துல ‘மாமன்னன்' ஷூட்டிங்குக்காக இருந்தப்போதான் ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்தை தியேட்டர்ல பார்த்தேன். என்னுடைய கேரக்டரைப் பார்த்து அத்தனை பேரும் சிரிச்சு ரசிச்சாங்க. ‘நாம நடிச்சப்போ ரொம்ப சீரியஸா நடிச்சோமே. அது திரையில வேற ஒண்ணா வெளிப்படுதே'ன்னு சினிமாவோட மேஜிக்கை ஆச்சரியமா பார்த்துக்கிட்டே இருந்தேன்...’' உற்சாகமாகத் தொடங்குகிறார் கீதா கைலாசம்.

“நடிக்கணும்ங்கிறது இருபது வயசுல இருந்தே எனக்குக் கனவு!”
“நடிக்கணும்ங்கிறது இருபது வயசுல இருந்தே எனக்குக் கனவு!”

``பா.இரஞ்சித் அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?’’

‘‘அவரை ஒருமுறை அவர் அலுவலகத்துல சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்பவே, ‘உங்க டைரக்‌ஷன்ல நடிக்கணும் ஆசை சார்'னு சொன்னேன். ‘அடுத்த படம் ஆரம்பிக்கிறப்போ ஞாபகப்படுத்துங்க'ன்னு சொன்னார். நடுவுல இந்திரா பார்த்தசாரதியோட கதை ஒண்ணை நண்பர்கள் நாடகமாக்கினாங்க. அதுல நடிச்சேன். அந்த நாடகத்தைப் பார்த்துட்டு ‘சார்பட்டா பரம்பரை' படத்துல பசுபதி சார் ஜோடியா நடிக்கக் கூப்பிட்டார் இரஞ்சித். பீரியட் படம்ங்கிறதால படம் தொடங்குறதுக்கு முன்னாடி இருந்தே நிறைய வொர்க்‌ஷாப் நடந்தது. வசன உச்சரிப்புல ஆரம்பிச்சு நிறைய நுணுக்கமான விஷயங்களை இரஞ்சித் சார்கிட்ட இருந்து கத்துகிட்டேன். ஒரு வருத்தம் என்னன்னா, என்னோட நிறைய காட்சிகள் எடிட்ல போயிடுச்சு.’’

“நடிக்கணும்ங்கிறது இருபது வயசுல இருந்தே எனக்குக் கனவு!”
“நடிக்கணும்ங்கிறது இருபது வயசுல இருந்தே எனக்குக் கனவு!”

`` ‘நட்சத்திரம் நகர்கிறது'?’’

‘‘வசந்தபாலன் சார் இயக்கத்துல துஷாரா விஜயன்கூட ஒரு படம் பண்ணிட்டிருந்தேன். அப்போ துஷாராகிட்ட ‘நட்சத்திரம் நகர்கிறது' அப்டேட் கேட்டுக்கிட்டே இருப்பேன். திடீர்னு ஒரு நாள் இரஞ்சித் சார் டீம்ல இருந்து ஷூட்டிங் வரச் சொல்லி போன். நான் போனப்போ பாதிப்படம் ஏற்கெனவே முடிஞ்சிருந்தது. ‘பெண்கள் எந்த அளவுக்கு சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க, எதனால தூக்கிப் பிடிக்கிறாங்கன்னு உங்க கேரக்டர் வழியாத்தான் காட்டப்போறேன்’னு சொன்னார் இரஞ்சித். அப்பவே இது முக்கியமான ரோல்தான்னு தோணுச்சு. சிங்கிள் ஷாட் நிறைய இருந்தது. அதனாலே முதல் ரெண்டு நாள் கஷ்டப்பட்டேன். கடைசி நாள் கொஞ்சம் ஈஸியா இருந்தது. அதைத் திரையில பார்த்தப்போதான் நான் முன்னாடி சொன்ன அந்த மேஜிக் நடந்திருந்தது.’’

``படம் பார்த்துட்டு சாய் பல்லவி போன் பண்ணி உங்களைப் பாராட்டித் தள்ளிட்டாங்கன்னு கேள்விப்பட்டோமே?’’

‘‘ஆமா. போனை எடுத்ததுமே நான் உங்க ரசிகை ஆயிட்டேன்னு சொன்னாங்க. தொடர்ந்து பத்து நிமிஷம் என்னை ஒரு வார்த்தை இடையில பேசவிடாம என் நடிப்பை சிலாகிச்சுப் பாராட்டித் தள்ளிட்டாங்க. ‘வெந்து தணிந்தது காடு' பட ஷூட்டிங் அப்போ சிம்புவும் என் நடிப்பைப் பார்த்துட்டு ‘நல்லா நடிக்கிறீங்க'னு பாராட்டினார்.’’

“நடிக்கணும்ங்கிறது இருபது வயசுல இருந்தே எனக்குக் கனவு!”

``இயக்குநர் பாலசந்தரின் மருமகள்; சின்னத்திரையையே மாற்றியமைச்ச பால கைலாசம் மனைவி. ஆனா சினிமாவுக்கு வர இவ்வளவு தாமதமானது ஏன்?

‘‘சினிமாவுல நடிக் கணும்ங்கிறது இருபது வயசுல இருந்தே எனக்குக் கனவு. ஆனா முதல்ல டைரக்‌ஷன், ஸ்கிரிப்ட், புரொடக்‌ஷன் வேலைகளைக் கத்துக்குவோம்னு ஆஃப் கேமரால சீரியல் புரொடக்‌ஷன் பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துக்கு அப்புறம்தான் நடிக்கணும்ங்கிற ஆசை பிரதானமாச்சு. அதுக்கு சரியான வாய்ப்புகள் இப்போதான் அமைஞ்சிருக்கு. பாலசந்தர் சார் சினிமா வழியா பெண்களோட முக்கியத்துவம் பத்திப் பேசினவர். அதனால என்னோட சினிமா ஆசைக்கு என் மாமனார் பாலசந்தரோ, கணவர் பால கைலாசமோ கண்டிப்பா மறுப்பு தெரிவிச்சிருக்கவே மாட்டாங்க.’’