Published:Updated:

``விஜய் சார் என்னைக் `கொழந்த'னு கூப்பிடுவார்; ஏன்னா?!" - `மாஸ்டர்' கௌரி கிஷன்

கெளரி கிஷன்
கெளரி கிஷன்

`ஜானு', `மாஸ்டர்', `கர்ணன்' என இந்த வருடம் கால்ஷீட் நோட் முழுக்க முக்கியமான படங்களாக நிரம்பியிருக்கின்ற உற்சாகத்தில் இருக்கும் கெளரியிடம் `மாஸ்டர்' படத்திற்கான வாய்ப்பு வந்த கதையைக் கேட்டோம்.

``விஜய் சார்கூட படத்துல ஒரு ஃப்ரேம்ல இருக்கேன்கிறதையே இன்னும் என்னால நம்ப முடியல. அந்த அளவுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சதால ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" எனச் சிரிக்கிறார் `96' கெளரி.

கெளரி கிஷன்
கெளரி கிஷன்

`ஜானு', `மாஸ்டர்', `கர்ணன்' என இந்த வருடம் கால்ஷீட் நோட் முழுக்க முக்கியமான படங்களாக நிரம்பியிருக்கின்ற உற்சாகத்தில் இருக்கும் கெளரியிடம் `மாஸ்டர்' படத்திற்கான வாய்ப்பு வந்த கதையைக் கேட்டோம்.

`` `மாஸ்டர்' படத்தோட இயக்குநர் லோகேஷ் அண்ணாவை `கைதி' பட ரிலீஸுக்கு முன்னாடி மீட் பண்ணேன். அப்ப விஜய் சார்கூட அடுத்த படம் பண்ணப்போறதா அவர் சொன்னபோது எனக்கு பயங்கர சர்ப்ரைஸா இருந்தது. அதுக்குப் பிறகு, கதையைக் கேட்டதும் இன்னும் பிடிச்சுப் போயிடுச்சு. செம வலுவான கதை. விஜய் சார் கதையில நம்ம நடிக்கப் போறோம்கிற சந்தோஷம் இருந்தாலும், என்னோட கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவமும் இருக்கணும்னு எதிர்பார்த்தேன். அதுவும் படத்துல கண்டிப்பா இருக்கும்" என்றவரிடம் விஜய்யுடன் முதல் நாள் அனுபவம் கேட்டதும் படபடவென பதில் வந்தது,

கெளரி கிஷன்
கெளரி கிஷன்

``முதல் நாள் விஜய் சாரை ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்தப்ப கொஞ்சம் பயமும், தயக்கமும் இருந்தது. நானே ஏதாவது பேசி அவரை தொந்தரவு பண்ணக்கூடாதுனு தயங்கிகிட்டே இருந்தேன். ஷூட் அப்ப அவர்கூட நிற்கும்போதுலாம் நடுங்கிட்டே இருந்தேன். ஆனா, போகப் போக ரெண்டு பேரும் நல்லா பேச ஆரம்பிச்சிட்டோம். அதுவும், டெல்லில கடைசி போர்ஷன் ஷூட்ல விஜய் சார் என்னை பயங்கரமா கலாய்க்க ஆரம்பிச்சிட்டார். செட்லயே நான்தான் ரொம்ப சின்ன பொண்ணு. அதனாலே என்னை அவர் கொழந்தனுதான் செல்லமா கூப்பிடுவார்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``விஜய் சார் என்னை அப்படிக் கூப்பிடும்போது சாந்தனு அண்ணாவும் மத்தவங்களும், `சார் இவ சரியான கேடி. கொழந்த இல்ல'னு பதிலுக்கு அவங்களும் கலாய்ப்பாங்க. அந்த அளவுக்கு `மாஸ்டர்' டீம்ல எல்லாருமே அவ்வளவு ஜாலியா இருப்பாங்க. ஷூட்டிங் நாள்கள் ரொம்ப நாளா இருந்த மாதிரி இருந்தாலும் ரொம்ப சீக்கிரமே முடிஞ்சது ஆச்சர்யமா இருக்கு. கால்ஷீட் முடிஞ்சதுக்கப்புறம் டீம்ல எல்லாருமே, ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிடுறது, ஷாப்பிங் பண்றதுனு ஜாலியா சுத்தினோம். கடைசி நாள் `இந்த ஷூட் இவ்வளவு சீக்கிரம் முடியணுமா'ங்கிற அளவுக்கு ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்.

கெளரி கிஷன்
கெளரி கிஷன்

நம்ம ரியல் காலேஜ் லைஃப்ல இப்படி ஒரு மாஸ்டர் இல்லையேன்னு நினைக்க வைக்கிற அளவுக்கான கதாபாத்திரம் விஜய் சாருக்கு. அவர்கிட்ட ஒரு நாள் பேசிட்டிருந்தப்ப, `என்னைக்காவது ஒரு நடிகரா இன்செக்யூரா நினைச்சிருக்கீங்களா'னு கேட்டேன். அதுக்கு அவர், `நான் அவ்வளவு குட் லுக்கிங்லாம் இல்ல. எனக்கு என்ன வருதோ அதைப் பண்ணிட்டிருக்கேன். மத்தபடி எதுவும் இல்லை'னு சொன்னார். விஜய் சார் டான்ஸ் பத்தி சொல்லவே வேண்டாம். அவர் சின்னதா ஒரு மூவ் பண்ணாக்கூட செம கிரேஸா, மாஸா இருக்கும். அப்படியே பார்த்துட்டே இருக்கலாம். செட்ல மாளவிகாகிட்டயும் இதைத்தான் சொல்லிட்டே இருப்பேன்."

அதைத் தொடர்ந்து மாளவிகா மோகன் குறித்து கேட்டோம், ``உண்மைய சொல்லணும்னா, மாளவிகா என்னோட கேர்ள் க்ரஷ். அவங்க இன்ஸ்டால போடற போஸ்ட்களுக்கு நான் பெரிய ரசிகை. இதை அவங்ககிட்ட சொன்னப்ப சிரிச்சாங்க. `என்னோட டீம்தான் தினமும் போஸ்ட் பண்ண சொல்லிச் சொல்றாங்க. மத்தபடி இது என் ஃபாலோயர்களுக்கு போரிங்கா இருக்கும்னு எனக்குத் தெரியும்'னு சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் இப்ப பயங்கர க்ளோஸ் ஆகிட்டோம்."

கெளரி கிஷன்
கெளரி கிஷன்

விஜய் சேதுபதி என்ன சொன்னார் என்றதும் இன்னும் எனர்ஜி ஆகிறார், ``விஜய் சேதுபதி சார் கூட எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் படத்துல இல்ல. என்னைப் பார்த்ததும் `ஜானு, நீயும் மாஸ்டர்ல இருக்கியா... சூப்பர் சூப்பர்'னு செம ஜாலியா பேச ஆரம்பிச்சார். `96' மெமரீஸ் பத்திப் பேசினோம். மொத்தத்துல `மாஸ்டர்' அனுபவம் எனக்கு அடிபொலி" என்கிறார் சிரித்துக்கொண்டே.

அடுத்த கட்டுரைக்கு