Published:Updated:

`ஹன்சிகா நடிப்பதில்லையா?' - அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களுடன் அசத்தல் லைன்-அப்!

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவின் கைவசம் ஏழு படங்களும் இரண்டு வெப் சீரிஸ்களும் உள்ளன. அந்த ஏழு படங்களில் ஐந்து தமிழ்ப் படங்கள்.

`ஹன்சிகா நடிப்பதில்லையா?' - அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களுடன் அசத்தல் லைன்-அப்!

நடிகை ஹன்சிகாவின் கைவசம் ஏழு படங்களும் இரண்டு வெப் சீரிஸ்களும் உள்ளன. அந்த ஏழு படங்களில் ஐந்து தமிழ்ப் படங்கள்.

Published:Updated:
நடிகை ஹன்சிகா
ஒரு வருடத்தில் ஏகப்பட்ட ஹீரோயின்கள் அறிமுகமாவார்கள். ஆனால், அதில் சிலரே க்யூட், ப்ரிட்டி, சார்மிங், கார்ஜியஸ் என பல ஆங்கில அடைமொழிகளைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அந்த கேட்டகரியில் பப்ளி, குட்டி குஷ்பூ என இளைஞர்களின் க்ரஷ் மெட்டீரியலானார், ஹன்சிகா. 2010-ல் தமிழில் அறிமுகமாகி வெகு சில படங்களிலேயே முன்னணி நாயகிகள் பட்டியலில் இணைந்தவர். 

இதன் பிறகு, நிறைய ஹீரோயின்கள் கோலிவுட்டில் அறிமுகமாகி டாப் கியரில் சென்றுகொண்டிருந்தாலும், ஹன்சிகாவை யாரும் மறக்கவில்லை. ஆனால், 'ஹன்சிகா இப்போ படம் நடிக்கிறதில்லையா?', 'என்னென்ன படங்கள் பண்றாங்க?' போன்ற கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், 2010 முதல் 2019 வரை ஒரு வருடம்கூட ஹன்சிகாவின் படம் வராமல் இருந்ததில்லை. 

லாக்டெளன் காரணமாக 2020, 2021 ஆகிய இரண்டு வருடங்கள் மட்டும்தான் இவரின் படம் வெளியாகவில்லை. இந்த வருடம் அவரின் 50வது படமான 'மஹா' வெளியானது. 'ஹன்சிகா நடிக்கிறதில்லையா?' போன்ற கேள்விகளுக்கான பதில் இதோ. 

நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா

ஹன்சிகாவின் கைவசம் ஏழு படங்களும் இரண்டு வெப் சீரிஸ்களும் உள்ளன. அந்த ஏழு படங்களில் ஐந்து தமிழ்ப் படங்கள்.

'பார்ட்னர்' - சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம். ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார். தவிர, பாலக் லல்வானி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கியிருக்கிறார்.

'ரெளடி பேபி' - ஹீரோயின் சென்ட்ரிக் த்ரில்லர் படம். அறிமுக இயக்குநர் JM சரவணன் இயக்குகிறார். சத்யராஜ், மீனா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். சாம் சி எஸ் இசையமைக்கிறார். 

'கூகுள் குட்டப்பா' இயக்குநர்கள் சபரி - சரவணன் இயக்கத்தில் ஃபேன்டஸி படமொன்றில் நடிக்கிறார், ஹன்சிகா. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் சந்தர் தயாரிக்கிறார். இன்னும் படத்துக்குப் பெயரிடவில்லை. மற்றொரு பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஆரியுடன் நடித்துவருகிறார் ஹன்சிகா. அந்தப் படத்தை இயக்குநர் இகோர் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபமாக, இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் படப்பிடிப்பில்தான் தற்போது பிஸியாக இருக்கிறார். 

நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா

'105 Minutes' என்ற தெலுங்குப் படம் ஒன்று இவரது நடிப்பில் வெளிவரக் காத்திருக்கிறது. சிங்கிள் கேரக்டர் - சிங்கிள் ஷாட் பிலிம் என்பதுதான் இதன் ஸ்பெஷல். தவிர, 'My Name is Shruti' என்னும் மற்றொரு தெலுங்கு க்ரைம் த்ரில்லர் படம் வேறு இருக்கிறது. இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் 'மை 3' என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துவிட்டார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளிவர இருக்கிறது. இதில் ஹன்சிகாவுடன் சாந்தனு, ஜனனி ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஆக, மாதம் ஒரு ஹன்சிகா படம் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.