Election bannerElection banner
Published:Updated:

``அரசாங்கத்துக்கு என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது!'' - ஜோதிகா

ராட்சசி திரைப்படம்
ராட்சசி திரைப்படம்

கெளதம் ராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம், `ராட்சசி'. இதில் அரசுப் பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

``எப்போவுமே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்தி, சூர்யாவை வெச்சுத்தான் படம் பண்ணுவாங்க. எனக்குப் படம் பண்ணதில்லை. அதனால, நானே இந்தப் படத்துகாக அவங்ககிட்ட போய் கேட்டேன். சின்ன படத்தை இவங்க தயாரிச்சாலும் அதுக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவாங்க. படத்துக்கான மரியாதை கிடைக்கும்.

எஸ்.ஆர்.பிரபு
எஸ்.ஆர்.பிரபு

இதற்கெல்லாம் காரணம், இவங்க கதையைத் தேர்ந்தெடுக்கிற விதம்தான். படத்தைத் தயாரிச்சிருக்கிற பிரபு, பிரகாஷ் ரெண்டுபேருமே கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சிருக்காங்க. `ராட்சசி' படத்துக்கு அவங்க இன்புட்ஸும் அதிகம்.

இயக்குநர் கெளதம் என்கிட்ட ரெண்டு மணிநேரம் கதையைச் சொன்னார். அவர் இந்தப் படத்துல சொன்ன மெசேஜ் எனக்குப் பிடிச்சிருந்தது. இது ஏற்கெனவே சிலர் சொல்லியிருந்தாலும், கெளதம் இந்தக் கதையை வடிவமைச்ச விதம் ரொம்பப் பிடிச்சிருந்தது. இதுல ஒரு காதல் டிராக்கும் இருக்கு. அப்பா - மகள் உறவை ரொம்பப் புதுசா காட்டியிருக்கார். இப்போ நிறைய அறிமுக இயக்குநர்கள்கூட படம் பண்றேன். இவங்க எல்லோரும் ரொம்பத் தெளிவா இருக்காங்க. சமூக அக்கறையுடன் படம் எடுக்கிறது எப்படினு தெரிஞ்சு வெச்சிருக்காங்க. கெளதமும் அதை ரொம்பத் தெளிவா பண்ணிருக்கார். 'கீதா ராணி'ங்கிற என் கேரக்டரை ரொம்ப மெச்சூரிட்டியா டிசைன் பண்ணியிருந்தார். கோபத்தைக்கூட அழகா வெளிப்படுத்தும், அந்த கேரக்டர்.

ஜோதிகா
ஜோதிகா

படத்துக்கு வசனம் எழுதியிருக்கிற பாரதி தம்பி, நான் நார்த் இந்தியன் பொண்ணுனு கொஞ்சமும் யோசிக்காம வசனம் எழுதியிருந்தார். எல்லாமே கஷ்டமான வசனங்களா இருந்தது. ஷூட்டிங் போறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே என் கையில டயலாக்ஸ் இருந்தது. அந்தளவுக்கு கெளதம் மற்றும் பாரதி தம்பி சரியா வொர்க் பண்ணியிருந்தாங்க. ஒளிப்பதிவாளர் கோகுல் என்னை ஒல்லியா காட்ட ரொம்பக் கஷ்டப்பட்டார். இந்தப் படத்துல நான் ரொம்ப ஷார்ப்பான, சின்சியரான டீச்சர். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல என்னைத் தவிர மத்தவங்க யாரும் லன்ச் பிரேக்கூட எடுத்துக்காம, அர்ப்பணிப்போடு வேலை பார்த்தாங்க.

படத்தோட டீசர் வெளியானதும் ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் என்னனு ட்விட்டரில் பார்த்தேன். நான் ட்விட்டர்ல கிடையாது. என் கணவருடைய போன்லதான் பார்த்தேன். பலரும் 'லேடி சமுத்திரக்கனி', 'சாட்டை' படம் மாதிரி இருக்குனு கமென்ட் கொடுத்திருந்தாங்க. அந்தப் படத்துல இருக்கிற மெசேஜ் 'ராட்சசி' படத்திலும் இருக்கலாம். இன்னும் 100 படம் அந்தக் கருத்தைச் சொன்னாலும், நம்ம சமூகத்துக்கு அது தேவைதான். தவிர, பெரிய பட்ஜெட் படங்கள் ஒரேமாதிரியான கதையைக் கொண்டிருந்தாலும், அதைப் பத்தியெல்லாம் யாரும் பேசவும் சொல்லவும் மாட்டேங்கிறாங்க. ஹீரோ வர்றார், ஆக்‌ஷன் பண்றார், ரெண்டு மூணு ஹீரோயின்ஸ்கூட ரொமான்ஸ் பண்றார், இடைவேளை வரும், அப்புறம் சென்டிமென்ட், க்ளைமாக்ஸ்னு போயிடுது... ஆனா, அதைப் பற்றியெல்லாம் கமென்ட் பண்ணாம, இந்த மாதிரி படங்களை மட்டும் ஏன் 'சாட்டை, 'பள்ளிக்கூடம்' மாதிரி இருக்குனு கேட்குறாங்க.

ஜோதிகா
ஜோதிகா

இந்த நேரத்துல என்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் இருக்கு. அகரம் பவுண்டேஷன்ல 99% பசங்க அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்காங்க. அவங்ககிட்ட பேசும்போதுதான், பல அரசுப் பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்களே இல்லைனு தெரிய வந்தது. இப்படிப் பல பசங்க ஆசிரியர்களே இல்லாமதான் படிக்கிறாங்க. இப்படி ஒரு நிலையை அரசாங்கம் நமக்குக் கொடுத்துட்டு, எப்படி நீட் தேர்வு எழுதணும்னு எதிர்பார்க்கிறாங்கன்னே தெரியல!" என்று தன் கவலையை வெளிப்படுத்திப் பேசினார். ஜோதிகா.

விழாவில் இயக்குநர் கெளதம் ராஜ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் கோகுல் பென்னி, வசனகர்த்தா பாரதி தம்பி, எடிட்டர் பிலோமின் ராஜ், ஸ்டன்ட் மாஸ்டர் சுதேஜ் மற்றும் பாண்டியன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளார் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு