Published:Updated:

“நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”

காஜல் அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
காஜல் அகர்வால்

என்னுடைய பல பாடல்களுக்கு அவங்கதான் கோரியோகிராபர். அவங்கக்கூட வொர்க் பண்ணும்போது அவ்வளவு கம்பர்ட்டபுளாக இருக்கும்

“நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”

என்னுடைய பல பாடல்களுக்கு அவங்கதான் கோரியோகிராபர். அவங்கக்கூட வொர்க் பண்ணும்போது அவ்வளவு கம்பர்ட்டபுளாக இருக்கும்

Published:Updated:
காஜல் அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
காஜல் அகர்வால்

பல வருடங்களாக முன்னணி ஹீரோயினாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல. ஆனால், காஜல் அகர்வால் அப்படிப்பட்டவர். பல பிளாக்பஸ்டர் படங்களில் காஜல் இடம்பெற்றிருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பிஸியாகவே இருக்கும் காஜல், இப்போது குடும்பத்தலைவியும்கூட. லாக்டெளன் வாழ்க்கை, சினிமா, குடும்பம் ஆகியவை குறித்து அவரிடம் ஒரு அரட்டை!

``திருமண வாழ்க்கை எப்படிப் போய்க்கிட்டிருக்கு காஜல்?’’

‘`சூப்பரா போகுது. என் கணவர் கெளதமை ரொம்ப வருஷங்களா தெரியும். நாங்க நல்ல நண்பர்களா இருந்தோம். அப்புறம் அந்த நட்பு காதலா மாறி திருமணம் வரைக்கும் வந்திடுச்சு. அதனால, எங்களுடையது லவ் கம் அரேஞ்ச்டு மேரேஜ் என்னை நல்லாப் புரிஞ்சுக்கிறார், ரொம்ப நல்லாப் பார்த்துக்கிறார். அவருடைய குடும்பம் ரொம்ப அழகானது. அப்படியான குடும்பத்துல வாழ நான் கொடுத்து வெச்சிருக்கணும். என்னதான் கணவன், மனைவின்னு உறவுகள் மாறினாலும் எங்களுக்குள்ள இருக்கிற நட்பு அப்படியேதான் இருக்கு. அவர் ஒரு பிசினஸ்மேன், உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். அதனால, ரொம்ப பிஸியாவே இருப்பார். வேலை விஷயமா நிறைய இடங்களுக்குப் போக வேண்டியது இருக்கும். ஆனா, லாக்டெளன் காரணமா வீட்லதான் ஆபீஸ் இயங்குது. எனக்கும் ஷூட்டிங் இல்லை. ஸோ, கல்யாணம் முடிஞ்சவுடன் எங்களுக்குள்ள நேரம் செலவழிக்க லாக்டெளன் பெரிய உதவியா இருக்கு. லாக்டெளனுக்கு இப்படியொரு பாசிட்டிவ் பக்கம் இருந்தாலும் அதனுடைய இன்னொரு முகம் நாட்டுல இருக்கிற மக்களை அவ்வளவு கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கு. அதெல்லாம் நியூஸ்ல பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு.’’

 “நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”
 “நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”

``நடன இயக்குநர் பிருந்தா முதல்முறை இயக்கியிருக்கிற ‘ஹே சினாமிகா’ படத்துல நடிச்ச அனுபவம்?’’

‘`பிருந்தா மாஸ்டர் கூட ரொம்ப வருஷமா பயணிச்சிட்டிருக்கேன். என்னுடைய பல பாடல்களுக்கு அவங்கதான் கோரியோகிராபர். அவங்கக்கூட வொர்க் பண்ணும்போது அவ்வளவு கம்பர்ட்டபுளாக இருக்கும். ‘ஹே சினாமிகா’ மூலமா அவங்க இயக்குநரானது எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்தப் படத்துல எனக்கு சைக்காலஜிஸ்ட் கேரக்டர். துல்கர்கூட முதல்முறை சேர்ந்து நடிக்கிறேன். ரொம்ப ஜாலியான நபர், செம கூல். அதே சமயம், வேலையில ரொம்ப சின்ஸியர்.’’

``கல்யாண் இயக்கத்துல நீங்க நடிச்சிருக்கிற ‘கோஷ்டி’ அரசியல் படமா?’’

‘`இல்ல இல்ல. இது முழுக்க முழுக்க காமெடி படம். ‘ஜில்லா’ படத்துக்குப் பிறகு, இந்தப் படத்துல நான் போலீஸ் இன்ஸ்பெக்டரா நடிச் சிருக்கேன். எனக்கு காமெடி படங்கள் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் பண்ணும் போதே அவ்வளவு காமெடியா இருக்கும். சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திடும். யோகிபாபு, நரேன் சார்னு நிறைய பேர் இருக்காங்க. நிச்சயமா, இந்தப் படம் உங்களை சந்தோஷப் படுத்தும்.’’

 “நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”
 “நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”

``டீகே இயக்கத்துல ஒரு ஹாரர் படம் நடிச்சிருக்கீங்களாமே!’’

‘`அதுல நான் ரெண்டு நாள்தான் நடிச்சேன். டீகே என்னுடைய நண்பர். அவர் கேட்டதுக்காக அதுல கேமியோ பண்ணியிருக்கேன், அவ்ளோ தான்.’’

`` ‘கைதி நம்பர் 150’ படத்துக்குப் பிறகு, சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’ படத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?’’

‘`கல்யாணம் முடிஞ்சவுடன் நான் முதன்முதல் போன ஷூட்டிங் ‘ஆச்சார்யா’தான். அப்போ என்னோடு என் கணவரையும் வரவெச்சு ஸ்பாட்ல சின்ன செலிபரேஷன் மாதிரி ஏற்பாடு பண்ணிருந்தார். எங்களுக்கு மாலை எல்லாம் போட்டு, கேக் வெட்டி வெல்கம் பண்ணினார். சிரஞ்சீவி சார் ரொம்ப ரொம்ப சீனியர். அவர் எங்களை இந்த மாதிரி வரவேற்றது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவர் எப்போவுமே ரொம்ப ஸ்வீட்டான நபர். கேமரா முன்னாடி நின்னார்னா, செம எனர்ஜியா இருப்பார். அதனால, செட்ல இருக்கும் எல்லோரும் அதே எனர்ஜியுடன் இருப்பாங்க. ‘கைதி நம்பர் 150’ படத்துல எப்படி ‘அம்முடு லெட்ஸ் டூ கும்முடு’ பாடலோ, அதே மாதிரி இந்தப் படத்துலயும் ஒரு பாடல் இருக்கு. அது வேற மாறி இருக்கும்.’’

 “நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”
 “நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”

``இந்தியில படங்கள் நடிச்சிருந்தாலும் உங்களை மையப்படுத்தின கதைகள் நடிச்சதில்லை. இப்போ ‘உமா’ன்னு ஒரு படம் நடிக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோம். உண்மையா?’’

‘`உண்மைதான். இந்தியில முதல்முறை என்னை மையப்படுத்திய கதையில நடிக்கப்போறேன். பிரமாத மான ஸ்கிரிப்ட். ரொம்ப வித்தியாசமான கேரக்டர். அடுத்த மாதம் கொல்கத்தாவுல ஷூட்டிங். இந்தப் படத்துல நடிக்க ரொம்ப ஆவலா இருக்கேன்.’’

``இன்டீரியர் கம்பெனி ஆரம்பிக்கப்போறீங்களாமே?’’

‘`என் கணவர் ஒரு இன்டீரியர் கம்பெனி வெச்சிருக்கும்போது நான் எதுக்கு ஆரம்பிக்கப்போறேன்? என் கணவரோட கம்பெனியில ‘Kitched’னு ஒரு புது பிராண்டை உருவாக்கியிருக்கோம். அது முழுக்க குஷன் தயாரிப்பு களுக்கானது.’’

 “நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”
 “நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”

`` `திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்’னு உங்ககிட்ட வித்தியாசம் ஏதாவது கண்டுபிடிக்க முடியுதா?’’

‘`அப்படி ஒண்ணும் தெரியலை. இப்போ வேலையும் செய்றேன், வீட்டையும் கவனிச்சுக்கிறேன். கொஞ்சம் பொறுப்புகள் கூடியிருக்கு. அதுதான் வித்தியாசம்னு நினைக்கிறேன்.’’

``ஹீரோயினுக்குத் திருமணமானா அவங்களுக்கு வரும் கதைகளும் கதாபாத்திரங்களும் குறைஞ்சுடும்னு ஒரு கருத்து இருக்கே. அப்படித்தானா?’’

‘`இது இந்தத் தலைமுறையில உண்மையில்லைன்னு நினைக்கிறேன். உங்களுக்குத் திருமணமாகிடுச்சுன்னா, நீங்க வேலை செய்றதை விட்டிடு வீங்களா, அப்படி இல்லைல? நடிகைகளுக்குக் கல்யா ணமானா நடிக்கக்கூடாதா என்ன?’’

``சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடையப்போகுது. நிறைய பிளாக்பஸ்டர் படங்கள்ல நடிச்சிட்டீங்க. இப்படியொரு படத்துல நடிக்கணும்னு ஏதாவது ஆசை இருக்கா?’’

‘`முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் சப்ஜெக்ட்ல நடிக்கணும். இதை முயற்சி பண்ணிப் பார்த்து என்னுடைய ஃபிட்னஸ் லெவல் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்.’’

``உங்களின் பலம், பலவீனம் என்னன்னு நினைக்கிறீங்க?’’

‘`பலம் - எல்லாவற்றையும் சீக்கிரம் கத்துக்கிறது. பலவீனம் - சீக்கிரம் நெருக்கமாகிடுவேன். என் பர்சனல், கரியர் ரெண்டுக்கும் இது பொருந்தும்.’’

`` ‘பாரிஸ் பாரிஸ்’ எப்போதான் வெளியாகும்?’’

‘`அதே கேள்விதான் எனக்கும். நாம கஷ்டப்பட்டுப் பண்ணின வொர்க் முடிவடையலைன்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. நிச்சயம் வெளியாகும்னு நம்புறேன்.’’