Published:Updated:

``ரஜினியை `கோமாளி’ டிரெய்லர்ல சுட்டிக்காட்டியது ஏன்னா..?!'' - காஜல் அகர்வாலின் லாஜிக்

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

"ஒருத்தருடைய கேரக்டர், அவங்க பயன்படுத்துற ஆடைகள், நகைகள், மேக்கப் பொருள்களில் இல்லை. நிறைய படிங்க, நிறைய டிராவல் பண்ணுங்க, நிறைய மனிதர்களை சந்திச்சு அவங்ககூட நேரம் செலவழிங்க. அதுதான் உண்மையான அழகு."

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடித்திருக்கும் 'கோமாளி' படம், ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்தப் படம் பற்றியும் தனது 12 வருட சினிமா கரியர் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், நடிகை காஜல் அகர்வால்.

கடந்த 12 வருடங்களில் நிறைய வெற்றி தோல்விகளை சந்திச்சிருப்பீங்க. முதல் நாள் முதல் ஷாட் ஞாபகம் இருக்கா..?

"எனக்கு சினிமா பத்தி அப்போ எதுவும் தெரியாது. ரொம்பவே பதற்றமா இருந்தது. முதல் ஷாட் நடிக்கும்போது, நான் என்ன பண்றேன்னே எனக்குத் தெரியலை. சினிமாதுறைக்கு வந்த பிறகு, என்னுடைய ஆர்வம், உழைப்பு, முயற்சி இதுனால நிறைய கத்துக்கிட்டேன்; இன்னமும் கத்துக்கிட்டு இருக்கேன். ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ்னு யார்கூடவும் நேரம் செலவழிக்க முடியாது. நமக்கு ஒண்ணு வேணும்னா, இன்னொன்னை இழந்துதானே ஆகணும்."

தெரியாத மொழிகளில் ஸ்கிரிப்ட்டை புரிஞ்சு நடிக்கிறது எவ்வளவு சவாலான விஷயம்... நீங்க அதுக்காக என்ன பண்றீங்க?

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

"ஆரம்பத்துல எனக்கு ரொம்ப ரொம்ப சிரமமா இருந்தது. மொழியே தெரியாமல் அந்த எமோஷனைப் புரிஞ்சு நடிக்கிறது, இருக்கிறதுலேயே கஷ்டம். இப்போ, எனக்கு எல்லா மொழியும் கொஞ்சம் தெரியும். செட்ல இருக்கிறவங்க நிறைய கத்துக்கொடுத்தாங்க. எனக்கு எந்த மொழியில சொன்னா அந்த எமோஷனும் டயலாக்கும் புரியுமோ அதுல எனக்கு சொல்லிக்கொடுத்தாங்க. அப்புறம், அந்தத் தமிழ் டயலாக்கை மனப்பாடம் பண்ணி செட்ல பேசிப்பார்ப்பேன். டேக்லயும் நான் தமிழ்ல வசனம் பேசுவேன். அப்போதான் டப்பிங்ல லிப் சிங்க் கரெக்டா இருக்கும். அது, பார்க்கிறவங்களுக்கு அந்த ஊர் பொண்ணு மாதிரி ஃபீல் கொடுக்கும். தவிர, எனக்கான தன்னம்பிக்கையும் கொடுக்குது."

நீங்க மேக்கப் இல்லாமல் இருக்கிற போட்டோவை பதிவிட்டு 'Spread Positivity'னு போட்டிருந்தீங்க. பாசிட்டிவிட்டி பரப்புவது ஒரு நடிகைக்கு எந்த அளவுக்கு முக்கியம்?

பிரியங்கா காந்தி முதல் காஜல் அகர்வால் வரை... சோஷியல் மீடியா ட்ரெண்டிங் பதிவுகள்!

"ஒரு நடிகைக்கு சமூக பொறுப்புகள் அதிகம் இருக்கு. காரணம், அவங்களை நிறைய பேர் ஃபாலோ பண்ணுவாங்க. அவங்களை ஒரு ரோல் மாடலா நினைச்சுக்குவாங்க. அதனால, அவங்க தவறான வழியில போயிடக்கூடாதுனு நான் என்னை சரியான வழியில செலுத்திக்கப்பார்க்கிறேன். நடிகைக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்கும் பாசிட்டிவிட்டி ரொம்ப ரொம்ப முக்கியம். கொஞ்சம் பாசிட்டிவிட்டியே நிறைய சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் தரும். படத்துக்காக வெளியே விழாக்களுக்காக போனால் மட்டும்தான் நான் மேக்கப் பொருள்களைப் பயன்படுத்துவேன். மத்த நேரங்களில் நோ மேக்கப், நோ ஜுவல்ஸ். கேஷுவலான டிரஸ்ஸிங்லதான் இருப்பேன். ஒருத்தருடைய கேரக்டர், அவங்க பயன்படுத்துற ஆடைகள், நகைகள், மேக்கப் பொருள்களில் இல்லை. நிறைய படிங்க, நிறைய டிராவல் பண்ணுங்க, நிறைய மனிதர்களை சந்திச்சு அவங்ககூட நேரம் செலவழிங்க. அதுதான் உண்மையான அழகு."

'கோமாளி' பட அனுபவம்? டிரெய்லர்ல ரஜினியை வெச்சு ஒரு சீன் வந்தது. அது, சர்ச்சையை உண்டாக்கும்னு நினைக்கலையா?

Kajal Aggarwal
Kajal Aggarwal

"'கோமாளி' ரொம்ப நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. வித்தியாசமான கதைக்களம். டைரக்டர் ரொம்ப சாதுர்யமா நிறைய விஷயங்களைப் பேசியிருக்கார். அந்தக் காட்சி, நல்ல ஹியூமர். அதுல என்ன இருக்கு? எல்லோரும் ரஜினி சாருடைய ரசிகர்கள். 1996-க்கும் 2016-க்கும் உள்ள வித்தியாசத்தை காட்டியிருக்கார், இயக்குநர். அவ்ளோதான்."

’மகதீரா' படத்தைப் பத்தி எங்களுக்குத் தெரியாத சீக்ரெட் சொல்லுங்க..."

"அந்த நேரத்துல நான் முழுக்க முழுக்க வெஜிடேரியனா இருந்தேன். தினமும் சாலட், ஜூஸ் மட்டும்தான் சாப்பிடுவேன். அதனால உடம்பு நல்லா குறைஞ்சுடுச்சு. அந்தப் படத்துல சில காட்சிகள்ல நான் உடல் பருமனாகவும் சில காட்சிகள்ல ரொம்ப ஒல்லியாகவும் இருப்பேன். அதனால ராஜமெளலி சார் செம அப்செட்டாகி, 'ஏன் இப்படிப் பண்ணீங்க?'னு கேட்டதும், எனக்கும் ரொம்ப அப்செட் ஆகிடுச்சு."

நீங்க இதுவரை சாப்பிட்ட வித்தியாசமான உணவு என்ன ?

"முதலைக்கறி."

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால்

ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுட்டு அதிக பில்லா எவ்ளோ கட்டுயிருக்கீங்க?

"லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு 60,000 ரூபாய் பில் கொடுத்தேன்."

அடுத்த கட்டுரைக்கு