Published:Updated:

"ஷங்கர்கிட்ட சாரி சொல்லப் போனேன்...`முதல்வன்' படத்துல நடிக்கவெச்சிட்டார்!"- `கூத்துப்பட்டறை’ கலைராணி

`முதல்வன்' படம் ரிலீஸாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்தப் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகை கலைராணி.

"அடையார் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்ல ஆக்டிங் கோச்சிங் பண்ணேன். அதுக்கு அப்புறம் கூத்துப்பட்டறையில் சேர்ந்தேன். நிறைய நாடகங்கள் பண்ணிட்டிருந்தப்போ ஆபாவாணன் சார் எடுத்த `ஊமை விழிகள்' படத்துல நடிச்சேன். நாசர் சார் எடுத்த `தேவதை' படத்துலயும் நடிச்சிருந்தேன். இந்த ரெண்டு படங்களும் நண்பர்கள் டைரக்‌ஷன் பண்ணுனது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனப்போ `ஒரு ரோல் இருக்கு... நீ நடி'னு சொல்லி நடிக்க வெச்சாங்க. ஆனா, ஒரு படத்துல சரியா கமிட்டாகி நடிச்ச படம்னா அது `முதல்வன்'தான்.

கலைராணி
கலைராணி

படத்துல நடிக்கிறதை விடவும் நாடகங்களில் நடிக்கிறதுதான் எனக்கு எப்பவும் பிடிக்கும். ஒவ்வொரு மே மாசமும் அரசு பள்ளிக்கூடத்துல படிக்குற பசங்களுக்கு தியேட்டர் வொர்க் பண்ணுவோம். அந்தச் சமயத்துல சேத்துப்பட்டுல இருக்குற மாநகராட்சி பள்ளிக்கூடத்துல படிக்கிற பசங்களின் பிரச்னைகளை மையமா வெச்சு `சிங்கார சென்னை' அப்படிங்கிற நாடகத்தை பண்ணோம். இந்த வேலைகளில் நான் கொஞ்சம் பிஸியா இருந்த நேரத்துலதான் ஷங்கர் சார் ஆபிஸில் இருந்து 21 முறை எனக்கு போன் பண்ணியிருந்தாங்க. நான் நிறைய முறை போனை எடுக்கவே இல்லை. அப்படியே எடுத்தாலும் எங்க அம்மா பேசுற மாதிரி, `ராணி வெளியே போய் இருக்கா வந்தவுடனே வந்து பாக்கச் சொல்றேன்'னு சொல்லிட்டு வெச்சிருவேன். என்னோட கவனமெல்லாம் நாடகத்துலதான் இருந்தது.

ஒருநாள் ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து அனந்து என்பவர் என்னைப் பார்க்க கூத்துப்பட்டறைக்கே வந்துட்டார். படத்தோட கதையை என்கிட்ட சொன்னார். `ஹீரோவுடைய அம்மாவை சாகடிக்குறதுதானே சினிமாவுல காலகாலமா நடந்துக்கிட்டு இருக்கு'னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். `இப்போதைக்கு ஒரு நாடகம் பண்ணிட்டிருக்கேன். அது முடிஞ்சவுடனே நடிக்குறேன்'னு சொல்லி அவரை அனுப்பிட்டேன். ஆனா, வந்த வாய்ப்பை ஏன் தவறவிட்டுட்டேன்னு என்னோட நண்பர்கள் பலரும் திட்டினாங்க. அதனால் ஷங்கர் சாரை நேரில் பார்த்து மன்னிப்புக் கேட்கலாம்னு போனேன். தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஷூட்டிங்கில் இருந்தார்.

கலைராணி
கலைராணி

அவரிடம் மன்னிப்பு கேட்டேன். `எனக்கு மன்னிப்புலாம் வேண்டாம். இந்த ரோலில் நடிக்குறீங்களா'னு கேட்டார். கே.வி.ஆனந்த் சார் ஒளிப்பதிவு பண்ணிட்டிருந்தார். அவரை எனக்கு நல்லா தெரியும். கூத்துப்பட்டறையில் எப்போதும் தொடர்பில் இருக்கிறவர் அவர். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் படத்துல நடிக்குறேன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் மேக்கப் டெஸ்ட் எடுத்தாங்க. அர்ஜூன் சாருக்கு அம்மா கேரக்டர் பண்ணிருங்கனு சொன்னார். அம்மா கேரக்டருக்கு எப்படி இருக்கணும்னு எனக்குத் தெரியல. அதனால ஸ்பாட்டில் ஓரமா உட்கார்ந்து இருந்தேன். அப்போ ஷங்கர் சார் பக்கத்துல வந்து, `ஏதாவது மனசு சரியில்லையா... ஏதும் பிரச்னையா'னு கேட்டார். ஷங்கர் சார் எப்போவுமே அவரோட ஆர்டிஸ்ட் எந்த மனநிலையில் இருக்காங்கனு நோட் பண்ணிக்கிட்டே இருப்பார். என்னை அவர் விசாரிச்ச விதம் ரொம்ப பிடிச்சிருந்தது. `ஹீரோவுடைய அம்மாவா எப்படி நடிக்கிறது'னு தெரியலைனு சொன்னேன். `இந்தப் படத்தோட அம்மா சரியான டிவி பைத்தியம். பார்க்க பக்கத்து வீட்டு அம்மா மாதிரியிருக்கணும். உங்களோட பாடி லாங்குவேஜ்ல நடிச்சாப் போதும்'னு சொல்லி உற்சாகப்படுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம்மகிட்ட சில மேனரிசம் இருக்கும். அதைப் பத்தி நமக்கே தெரியாம இருக்கும். அதை சரியா கண்டுபிடிச்சு வெளியே கொண்டு வருவார் ஷங்கர். அந்தளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நம்மை நோட் பண்ணிக்கிட்டே இருப்பார். எனக்கான சுதந்திரத்தை ஸ்பாட்டில் கொடுத்தார். என்னோட முதல் காட்சி படத்துல `ஓடுது ஓடுது பாருங்க'னு சொல்லணும். எனக்கு நடிக்கவே வரல. ஒரு ஷாட் எடுக்க லேட் ஆகுதுனா அந்த நேரத்துல ஆர்டிஸ்ட்கூட உட்கார்ந்து பேசுவார். நிறைய ஜோக்ஸ் அடிப்பார். நல்ல ஹூயூமர் சென்ஸ் அவர்கிட்ட இருக்கும். இந்தப் படத்துல வீடு இடிஞ்சு விழுகுறப்போ நான் அழுத காட்சி பயங்கரமா பாராட்டப்பட்டுச்சு. இந்தக் காட்சியை எடுக்குறப்போ ஷங்கர் சார் என்கிட்ட நிறைய பேசினார். என் பெஸ்ட்டைக் கொடுத்தேன். என்னோட வாய்ஸ் மாடுலேஷன் எனக்கு ப்ளஸா இருந்தது. இதுக்கு அப்புறம் தொடர்ந்து அம்மா கேரக்டர்ஸ், அழுகுற சீன்ஸ் இதுமாதிரியான வாய்ப்புகளே வந்தன. எனக்கே ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. ஷங்கர் சாருக்கு போன் பண்ணி, `எல்லா இயக்குநர்களையும் ஒருநாள் கூப்பிட்டு நான் அழறேன். அதை மட்டும் ஷூட் பண்ணிக்கோங்கன்னு சொல்லப் போறேன்'னு சொன்னேன். `உங்களுக்கு வர்ற கேரக்டரில் எதை எடுக்கலாம்னு நீங்கதான் முடிவு பண்ணனும்'னு சொன்னார்.

'முதல்வன்'
'முதல்வன்'
`பிக்பாஸ்' கமல்ஹாசனைத் தெரியும்... 70'களில் இருந்த கமல்ஹாசன் எப்படிப்பட்டவர் தெரியுமா?! #Nostalgia

அவரோட `பாய்ஸ்' படத்துலயும் நடிச்சிருப்பேன். சித்தார்த் கல்யாணம் முடிஞ்சவுடனே வர்ற போலீஸ் ஸ்டேஷன் காட்சி எடுத்திருப்பார். பசங்களோட அஞ்சு குடும்பமும் அங்கே இருக்கும். இந்தக் காட்சி 72 டேக் வரைக்கும் போச்சு. அவர் நினைச்சது கிடைக்குற வரைக்கும் விடல. அதேமாதிரி படத்துல என் பையன் இறந்து போற காட்சி எடுக்குறப்போ அன்னைக்கு முழுக்க அவர் முகம் வாடி சாவு வீட்ல இருக்குற மாதிரிதான் இருந்துச்சு. காட்சியோட உள்தன்மையை நமக்குள்ளேயும் கடத்துவார்.

தேவர்மகன் முதல் விஸ்வரூபம் வரை... கமலின் அரசியலும் அதன் மீதான விமர்சனங்களும்!
பாய்ஸ்
பாய்ஸ்

`முதல்வன்' படம் ரிலீஸுக்குப் பிறகு எங்கே போனாலும் `ஒருநாள் முதல்வரின் அம்மா'னு சொல்லுவாங்க. ஹைதரபாத்ல ஷூட்டிங் போயிருந்தப்போ `அம்மா காரு வந்திருக்காங்க'னு நிறைய பேர் காலில் விழுந்தெல்லாம் ஆசீர்வாதம் வாங்கினாங்க. எனக்கு ஒரே சங்கடமா இருக்கும். அர்ஜுனுக்கு அம்மாவா நடிச்சதுனாலேயே என்னை குந்திதேவியா நினைச்சுக்கிட்டேன்'' என சிரிக்கிறார் கலைராணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு