Published:Updated:

``48 மணி நேரம் ஷூட், இந்தப் படம் வித்தியாசமான அனுபவமா இருக்கும்; ஏன்னா? - `கயல்' ஆனந்தி

கயல் ஆனந்தி

நடிகை கயல் ஆனந்தி தற்போது தமிழ் சினிமாவில் நடித்து முடித்திருக்கும், இனி நடிக்கப்போகும் படங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

``48 மணி நேரம் ஷூட், இந்தப் படம் வித்தியாசமான அனுபவமா இருக்கும்; ஏன்னா? - `கயல்' ஆனந்தி

நடிகை கயல் ஆனந்தி தற்போது தமிழ் சினிமாவில் நடித்து முடித்திருக்கும், இனி நடிக்கப்போகும் படங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

Published:Updated:
கயல் ஆனந்தி

``அறிமுக ஹீரோக்கள்கூட நடிக்கிறதால உங்களோட இமேஜ் எங்கயாவது குறைஞ்சதா ஃபீல் பண்ணியிருக்கீங்களா?"

ஆனந்தி
ஆனந்தி

`` 'என் ஆளோட செருப்ப காணோம்' படத்துல நடிக்கிற வரைக்கும் பெரிய ஹீரோக்களோடதான் நடிக்கணும்னு நினைச்சிகிட்டிருந்தேன். ஆனா, இந்தப் படம் நான் நினைச்சதை மாத்தி, கதைதான் முக்கியம் ஹீரோ இல்லைன்னு சொல்லிடுச்சு. அதுக்கப்புறம்தான் கதைக்கும் எனக்கும் முக்கியத்துவம் கொடுக்குற படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இப்ப நான் நடிச்சு முடிச்சிருக்கிற `கமலி ஃப்ரம் நடுக்காவேரி' படத்தோட ஸ்க்ரிப்ட்டும் அப்படித்தான். சின்ன படம், அறிமுக ஹீரோ, இயக்குநர்னு சில காரணங்களால முதல்ல நடிக்க யோசிச்சேன். அப்புறம் படத்தோட கதையை ஹைதராபாத்ல வந்து சொன்னாங்க. கேட்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துடலாம்னுதான் இருந்தேன். ஆனா, கதை கேட்டவுடனே ஓகே சொல்லிட்டேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படம். ஒரு பொண்ணோட பார்வையில இருந்துதான் படம் நகரும். இன்னும் சில கிராமங்கள்ல பசங்களை மட்டும், நல்ல கல்வி கிடைக்கிறதா நினைச்சி, பிரைவேட் ஸ்கூலுக்கும், பொண்ணுங்களை கவர்மென்ட் ஸ்கூலுக்கும் அனுப்புற முறை இருக்கு. பொண்ணுங்களுக்குக் கிடைக்காத சப்போர்ட் பத்தி இந்தப் படம் பேசும். முக்கியமா இந்தப் படம் பொண்ணுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இந்தப் படத்துல நடிச்சிருக்கிற மத்த கேரக்டர்கள் பற்றி?"

``அழகம் பெருமாள் சார் என்னோட அப்பா கேரக்டர் பண்ணியிருக்கார். இமான் அண்ணாச்சி புரொஃபசர் கேரக்டர்ல வருவார். ஸ்கூல் போர்ஷன்ல  என்கூட `நக்சலைட்ஸ்' ஶ்ரீஜா பண்ணியிருக்காங்க. இது இவங்களோட முதல் படம். இவங்களுக்கு சினிமாவுல நல்ல எதிர்காலம் இருக்கு."

``இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்புல நடித்த அனுபவம்?"

பரியேறும் பெருமாள் படத்தில்...
பரியேறும் பெருமாள் படத்தில்...

``மாரி செல்வராஜ் சார் அவரோட ஸ்க்ரிப்ட்டுக்கு நான் சரியா இருப்பேன்னு என்னைத் தேர்ந்தெடுத்தார். இந்தப் படத்தோட பூஜை அப்ப ரஞ்சித் சாரைப் பார்த்தேன். ரொம்பப் பேசிக்கல. பொதுவாவே எனக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சுமுகமான உறவு இருக்கு. முதல் படமான `பரியேறும் பெருமாள்' எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. முதல் படத்துலே நடிச்சதால `இரண்டாம் உலகப்போரின் கடைசி' குண்டு படத்துலேயும் என்னைக் கமிட் பண்ண முதல்ல யோசிச்சாங்களாம். இருந்தும் கதைக்கும் என்னோட நடிப்பு சரியா இருக்கும்னு நினைச்சதால என்னையே நடிக்க வெச்சிட்டாங்க. படத்தோட ரிலீஸுக்கு முன்னாடி படம் பார்த்த ரஞ்சித் சார், `நீ நல்லா நடிச்சிருந்த. இந்தந்தக் காட்சிகள்ல நடிப்பை நல்லா வெளிப்படுத்தியிருந்த'னு மெசேஜ் அனுப்பினார். நல்ல நடிப்புக்கான அங்கீகாரத்தை ரஞ்சித் சார் எப்பவுமே கொடுப்பார்."

`` `அலாவுதீனின் அற்புத கேமரா' படம் பத்தி?"

'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தில்...
'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தில்...

`` `மூடர் கூடம்' இயக்கிய நவீன் சார் படம். ஃபாரின்லதான் படத்தோட ஷூட்டிங் நடந்தது. இந்தப் படத்துல கொஞ்சம் வித்தியாசமா பிக் பாக்கெட் அடிக்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். ஸோ, இந்தப் படம் என்னை வேற மாதிரி காட்டும். ஃபேன்டஸி ஜானர். 50 நாள்கள் வரை ஷூட் நடந்தது. அந்த 50 நாள்களும் ஒரு ஃபேமிலி மாதிரி இருந்தோம். நவீன் சாரும் இயக்குநரா மட்டும் இல்லாம ஸ்பாட்ல எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வார். லைட் மேன், சில நாள் கேமரா மேனாவும்கூட வேலை பார்த்தார். ரொம்ப திறமைசாலி. இந்த டீம்லே நான் மட்டும்தான் பொண்ணு. அதனால, எதுக்காகவும் திட்டாம நல்லா பார்த்துக்கிட்டாங்க. ரிலீஸுக்கு நானும் வெயிட்டிங்."

`` `ராவணக் கோட்டம்' படத்துல எந்த மாதிரியான ரோல்?"

சாந்தனு, பாக்யராஜ் மற்றும் விக்ரம் சுகுமாரன்
சாந்தனு, பாக்யராஜ் மற்றும் விக்ரம் சுகுமாரன்

``இன்னும் படத்தோட ஷூட் முடியல. மே மாசம் அடுத்த ஷெட்யூல் ஆரம்பிக்குது. நான் சாந்தனுக்கு ஜோடியா நடிக்குறேன். விக்ரம் சுகுமார் சார் என்னை நடிக்கக் கூப்பிடுவார்னு எதிர்பார்க்கல. ஸ்க்ரிப்ட் படிக்கும்போதே ரொம்ப ஆர்வமாகிட்டேன். அவரோட வொர்கிங் ஸ்டைல் ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. லைவ் லொக்கேஷன்லதான் ஷூட்டிங் எடுத்தாங்க. படத்துல கமிட்டானப்ப யோசிச்சேன். அப்புறம் நல்ல படத்துல வேலை பார்க்கிறோம்னு திருப்தி வந்துடுச்சு. தொடர்ந்து 48 மணிநேரம் எல்லாம் ஷூட் நடந்தது. ஆடியன்ஸுக்கு வித்தியாசமான படைப்பா இந்தப் படம் இருக்கும்."

``கல்லூரி படிப்பு முடிஞ்சதா?"

``ஹைதராபாத்ல எம்.பி.ஏ முடிச்சிட்டு நடிச்சிட்டிருந்தேன். எதுக்காகவும் படிப்பை பாதியிலயே விட்டுற கூடாதுனு உறுதியா இருந்தேன். அடுத்து பி.ஹெச்.டி பண்ணலாம்னு இருக்கேன். என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் `எதுக்காக இவ்வளவு படிக்கிற'னு கேட்குறாங்க. படிக்கிறது பிடிச்சிருக்கு. அதனால எவ்வளவு பிஸியா இருந்தாலும் படிப்பேன். அதுமட்டுமல்லாம காலேஜ்ல ப்ரின்சிபல் தொடர்ந்து படிக்கச் சொல்லியிருக்காங்க. அவங்களுக்காவே தொடர்ந்து படிப்பேன்."

``டோலிவுட்ல இருந்துதான் கோலிவுட் வந்தீங்க. அதுக்கப்புறம் அங்க போகவே இல்லையே?"

ஆனந்தி
ஆனந்தி

``தமிழ் ஸ்க்ரிப்ட் பிடிச்சிருக்கு. தெலுங்கு சினிமாவும் ஆரோக்கியமான விஷயம்தான். ஆனா, ஹைதராபாத்ல விருப்பத்துக்கு ஏத்த மாதிரி வெளில என்னால நடமாட முடியாது. காரணம், சொந்த ஊர், ஒரே மொழினால நிறைய பேர் அடையாளம் கண்டுபிடிச்சிடுவாங்க. சென்னையில அப்படி இல்ல. என்னோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி வெளியே போயிட்டு வருவேன். பெரும்பாலும் என் பக்கத்துல வந்து நிற்க மாட்டாங்க. எனக்கான ப்ரைவசி இருக்கும். முக்கியமா, ஹைதராபாத்ல படிச்சிகிட்டும் இருந்ததனால தெலுங்கு படத்துல கமிட்டாகல. நினைச்ச நேரதுக்கு காலேஜ் போக முடியாதுனு தோணுச்சு. இதுதவிர, பெரிய காரணங்கள் எதுவும் இல்லை."