Published:Updated:

ஜெய்சங்கர் - ஜெயலலிதா நட்பு பத்தி தெரிஞ்சதைப் பேசினேன்‌! - சர்ச்சையான வீடியோ குறித்து குட்டி பத்மினி

குட்டி பத்மினி

பொதுவா ஷுட்டிங் ஸ்பாட் பிரேக்ல புத்தகங்களை எடுத்துட்டு வாசிக்க உட்கார்ந்திடுற ஜெயலலிதா ஜெய்சங்கர்கூட மட்டும் பேசினது அந்த நாட்கள்ல கிசுகிசுவா பத்திரிக்கைகள்ல வந்துச்சு. - குட்டி பத்மினி

ஜெய்சங்கர் - ஜெயலலிதா நட்பு பத்தி தெரிஞ்சதைப் பேசினேன்‌! - சர்ச்சையான வீடியோ குறித்து குட்டி பத்மினி

பொதுவா ஷுட்டிங் ஸ்பாட் பிரேக்ல புத்தகங்களை எடுத்துட்டு வாசிக்க உட்கார்ந்திடுற ஜெயலலிதா ஜெய்சங்கர்கூட மட்டும் பேசினது அந்த நாட்கள்ல கிசுகிசுவா பத்திரிக்கைகள்ல வந்துச்சு. - குட்டி பத்மினி

Published:Updated:
குட்டி பத்மினி

``நடிகர் ஜெய்சங்கர் நல்லா இங்கிலீஷ் பேசுவார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'ராமண்ணா'ங்கிற டைரக்டர் இயக்கின 'நீ' படத்துல அவருடன் நடிச்சப்ப அவருடைய இங்கிலீஷ் பேச்சுக்காகவே ஷுட்டிங் ஸ்பாட்டில் கலகலன்னு அவருடன் பேசிட்டிருப்பார். பொதுவா ஷுட்டிங் ஸ்பாட் பிரேக்ல புத்தகங்களை எடுத்துட்டு வாசிக்க உட்கார்ந்திடுற ஜெயலலிதா ஜெய்சங்கர்கூட மட்டும் பேசினது அந்த நாட்கள்ல கிசுகிசுவா பத்திரிக்கைகள்ல வந்துச்சு

இந்த தகவல் எப்படியோ எம்.ஜி.ஆர். காதுக்குப் பேய்விட , ஒரு நாள் எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர் ஜெயலலிதாக்கா வீட்டுல இருக்கிறார்னு நினைச்சுட்டு துப்பாக்கி எடுத்துட்டு ஜெயலலிதாக்கா வீட்டுக்கே போயிட்டார். ஒருவேளை அன்னைக்கு ஜெய்சங்கர் அங்க இருந்திருந்தா எம்.ஜி.ஆர். அவரைச் சுட்டாலும் சுட்டிருப்பார்"

- இப்படிப் பேசி தன்னுடைய யூ டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நடிகை குட்டி பதிமினிக்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா - ஜெய்சங்கர்
ஜெயலலிதா - ஜெய்சங்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்த முதல் நாடகமான 'முரசே முழங்கு' நாடகத்தைத் தலைமையேற்று தொடங்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் குட்டி பத்மினியும் நடித்திருந்தார். அந்த நாடகத்தில் நடித்த 'ஓமப்பொடி' பிரசாத் என்கிற நடிகர் இதுதொடர்பாக குட்டி பத்மினியைத் தொடர்பு கொண்டு கடுமையாகப் பேசியிருக்கிறார்.

''எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பத்தி நீங்க எப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசலாம்? அவங்க அப்படிப் போனதை நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா? இப்படிப் பேசறது தப்பில்லையா? கேட்டா எனக்குத் தெரிஞ்சதைப் பேசினேன்னு சொல்றீங்க‌, உங்களைப் பத்திக்கூடத்தான் எனக்குத் தெரியும். நானும் பேசி வீடியோ போடட்டுமா" என ஆவேசமாகப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக குட்டி பத்மினியிடமே பேசினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
குட்டி பத்மினி
குட்டி பத்மினி

``எனக்குத் தெரிஞ்ச சில விஷயங்களைப் பேசினேன். அதேநேரம் யார் மனசையும் புண்படுத்தணும்கிற நோக்கம் எனக்கில்லை. இதயக்கனி விஜயன் அந்த வீடியோக்கு கண்டனம் தெரிவிச்சார்னு கேள்விப்பட்டேன். அதுபோக சிலர் பேசினாங்க. அவங்ககிட்டயே மனம் புண்பட்டிருந்தா மன்னிச்சிடுங்கனு சொல்லி இந்த விஷயத்தை அப்பவே முடிச்சிட்டேன். வீடியோவையும் என்னுடைய யூ டியூப் சேனல்ல இருந்து எடுத்துட்டேன். இதுக்குப் பிறகும் 'உன்னைப் பத்தி எனக்கும் தெரியும் வீடியோ வெளியிடுவேங்கிற ரீதியில பேசறவங்களை என்ன சொல்றது? யார் என்ன வீடியோன்னாலும் வெளியிட்டுக்கலாம். எனக்கு அதுபத்திக் கவலை இல்லை' என்கிறார் இவர்.

நடிகர் ஜெய்சங்கரை எம்.ஜி.ஆர் சுட்டாலும் சுட்டிருப்பார் எனக் குட்டி பத்மினி சொன்னது குறித்து நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் ஜெய்சங்கரிடம் கேட்டதற்கு ``'நோ கமெண்ட்ஸ்'ங்க, இது பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பலை" என முடித்துக் கொண்டார்.