ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``பெண் சுதந்திரத்தை என் மகள்கள் மிஸ்யூஸ் பண்ணதில்லை!’’

குட்டி பத்மினி
பிரீமியம் ஸ்டோரி
News
குட்டி பத்மினி

நடிகை குட்டி பத்மினி - அன்னையர் தினம் சிறப்புப் பகிர்வு

நடிப்பு, சீரியல் தயாரிப்பு என்று எப்போதும் பரபரப்பாக இருப்பவர் நடிகை குட்டி பத்மினி. அன்னையர் தினத்தையொட்டி, தன் மூன்று மகள்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார் அவர்.

‘`பெண் குழந்தையான்னு அதிர்ச்சியோடு கேட்ட காலமும் இருந்துச்சு. இப்பவும் ஒருசிலர் இந்தக் கேள்வியை கேட்டுட்டுதான் இருக்காங்க. ‘பொண்ணு பிறந்திருக்கா... கொடுத்து வெச்சவங்க நீங்க’ன்னு சொல்றதையும் இப்போ அதிகமா கேட்கிறேன். அந்தவகையில நான் கொடுத்து வெச்ச அம்மா’’ - சிலிர்ப்போடு தொடர்கிறார் குட்டி பத்மினி.

‘`என் பொண்ணுங்களுக்கு புத்தி தெரியுற வயசு வந்ததும் என்னோட மனக்கஷ்டம், பணக்கஷ்டம், ஏன்... கணவரால வந்த பிரச்னைகளைகூட வெளிப்படையா அவங்ககிட்ட பகிர ஆரம்பிச்சேன். அவங்களோட சின்ன வயசுல இருந்தே, ‘இந்த விஷயத்துல நீங்க என்ன நினைக்கிறீங்க; எனக்கு உங்களோட ஒப்புதல் வேணும்’னு அவங்ககிட்ட கேட்டிருக்கேன். பாய் ஃபிரெண்ட்ஸ்பத்திகூட என்கிட்ட டிஸ்கஸ் செய்யலாம்கிற அளவுக்கு ரொம்ப ஃபிரெண்ட்லியா வளர்த்தேன். அதனால, மூணு பேருமே எனக்குத் தெரியாம எதையுமே செய்ததில்லை. உண்மையைச் சொல்லணும்னா… இது எல்லாமே அவங்களோட சுதந்திரம். அந்த பெண் சுதந்திரத்தை அவங்க மிஸ்யூஸ் பண்ணதே இல்ல’’ - அம்மாவின் குரலில் பெருமிதம்!

‘`பெத்தவங்க திட்டுவாங்கன்னு பயந்துதானே பொண்ணுங்க வெளியே நடக்கிறதை வீட்ல சொல்ல மாட்டேங்கிறாங்க. அந்த பயம்தானே ‘உன் வீடியோவை வெளியிடாம இருக்கணும்னா நான் சொல்றதை நீ கேட்கணும்’னு மிரட்டுறவங்களுக்கு தைரியம் கொடுக் குது... பெண் குழந்தைகளுக்கு சுதந்திரத்தையும் தைரியத்தையும் கொடுத்து வளர்த்துப் பாருங்க. கம்பீரமா வளர்வாங்க’’ என்பவருடைய மூன்று மகள்களும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள்.

``பெண் சுதந்திரத்தை என் மகள்கள் மிஸ்யூஸ் பண்ணதில்லை!’’

``பெரியவ கீர்த்தனா. அமெரிக்கா போய் திரைக்கதை தொடர்பா படிக்கணும்னு ஆசைப்பட்டா. படிச்சு முடிச்சு அங்கே வேலை பார்த்துட்டிருந்தப்போ ‘ஒரு ஃபாரினரை லவ் பண்றேன்’னு சொன்னா. நல்லா படிச்சவர்னு தெரிஞ்சதும் அவங்க கல்யாணத்துக்கு `யெஸ்' சொல்லிட் டேன். ரெண்டாவது பொண்ணு ரிதினிகா, சட்டப்படிப்புல மாஸ்டர் டிகிரி முடிச்சிட்டு இப்போ கனடாவுல எம்.பி.ஏ. ஃபைனல் இயர் படிச்சிட்டிருக்கா. கடைக்குட்டி ஆர்யா, கனடாவுல பிசினஸ் ஸ்டடீஸ் படிச்சு முடிச்சிட்டா. படிப்பும் வேலையும் பெண்களுக்கு ரெண்டு கண்கள் மாதிரி... இதைக் கொடுக்க வேண்டியது பெத்தவங்களோட கடமை’’ - அழுத்தமாகச் சொல்கிறார் குட்டி பத்மினி.