சினிமா
தொடர்கள்
Published:Updated:

“மரத்தைச் சுத்தி ஆடுறது இல்லாமப் போயிடுச்சு!”

லைலா
பிரீமியம் ஸ்டோரி
News
லைலா

தமிழ் சினிமாவுல நான் சந்தோஷப்பட நிறைய தருணங்கள் இருக்கு. ஒரே ஃபேமிலியில் உள்ள சூர்யா, கார்த்தி, ஜோதிகா இவங்களோட நடிச்சிருக்கேன். அடுத்து சிவகுமார் சாரோட நடிக்கணும்னு ஆசை.

``பண்டிகைன்னாலே எனர்ஜிதான். அதிலும் சில தீபாவளிகள் பர்சனலாகவும் ரொம்ப ஸ்பெஷலாகிடும். ‘பிதாமகன்', ‘நந்தா', ‘தீனா'ன்னு என் பல படங்கள் தீபாவளி ரிலீஸ் கொண்டாடியிருக்கு. அக்டோபர் 24தான் என் பிறந்தநாள். சர்ப்ரைஸா தீபாவளி அன்னிக்கே என் பர்த்டேவும் வந்திட்டா, ரெண்டு கொண்டாட்டமா அமைஞ்சிடும். அப்ப ‘பிதாமகன்'ல என் பிறந்த நாளைக் கொண்டாடினேன். இப்ப ‘சர்தார்' ட்ரீட் ஆகிடுச்சு...'' - குழந்தைக் குதூகலத்துடன் கலகலக்கிறார் லைலா. 90ஸ் கிட்ஸை தன் கன்னக்குழிச் சிரிப்பழகில் கவர்ந்திழுத்த லைலாவிடம் பேசினேன்.

“மரத்தைச் சுத்தி ஆடுறது இல்லாமப் போயிடுச்சு!”

``எப்படி இருக்கீங்க... 16 வருஷத்துக்குப் பிறகு நடிக்க வந்திருக்கீங்க. ஏன் இந்த இடைவெளி?’’

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கேன். 16 வருஷம்ங்கறது நிஜமாகவே பெரிய இடைவெளிதான். குழந்தைகளை கவனிக்கணும்னு பிரேக் எடுத்துக்கிட்டேன். இப்ப அவங்க வளர்ந்துட்டாங்க. அதனால நடிக்கலாம்னு தோணுச்சு. ஆனா, என்னைத் தேடி வந்த கதைகள், கேரக்டர்கள் எதுவுமே எனக்கானதா அமையல. சிலர் கதை சொல்ல வர்றப்பவே, ‘ஒரு அம்மா கேரக்டர் இருக்கு'ன்னு ஆரம்பிப்பாங்க. சிலர், அக்கா, அண்ணி கேரக்டர்களோட வந்திருக்காங்க. செகண்ட் இன்னிங்ஸ்ல கெத்தா வரணும்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன்.

இதற்கிடையே நிறைய டி.வி தொடர்கள்ல நடிக்கக் கேட்டும் வாய்ப்புகள் வந்துச்சு. அதுல பல சீரியல்கள்ல டைட்டில் ரோல் பண்ணவும் கேட்டாங்க. எனக்கு சீரியல்ல ஆர்வம் இல்ல. அந்தச் சமயத்துலதான் நான் எதிர்பார்த்த மாதிரி வெப்சீரீஸ் ஒண்ணு வந்துச்சு. கதையும் பிடிச்சிருந்தது. உடனே கமிட் ஆனேன். அதோட படப்பிடிப்பும் சென்னைலதான் நடந்தது. அதன் பிறகே ‘சர்தார்'ல கமிட் ஆனேன். அந்த வெப்சீரிஸ் டிசம்பர்ல வருது. இத்தனை வருஷத்துக்குப் பிறகு திரும்பி வந்தபோதும், தமிழ் ரசிகர்கள்கிட்ட அதே அன்பும், நலம் விசாரிப்பும் கிடைக்கறது சந்தோஷமா இருக்கு. சினிமாவையும் நடிப்பையும் உண்மையா நேசிக்கறதால, இந்த கம்பேக் சாத்தியமாகியிருக்கு.''

``சூர்யாவோட நிறைய படங்கள் நடிச்சிட்டீங்க. எப்போதிலிருந்து உங்களுக்குக் கார்த்தியைத் தெரியும்?’’

‘‘நடிகர் சங்கத் தேர்தல் சமயத்துல, தபால்ல மும்பைக்கு எனக்கு வாக்குச்சீட்டு (ballot paper) அனுப்பி வச்சிருந்தாங்க. எங்க அப்பா வாங்கிப் பார்த்துட்டு, ‘முழுக்க தமிழ்ல இருக்கு. எனக்கு ஒண்ணுமே புரியல'ன்னு வீட்டுக்குள் எங்கேயோ வச்சிட்டார். எனக்கு விஷயமே தெரியாது. அந்த டைம்ல கார்த்திகிட்ட இருந்து போன் வந்தது. ‘நான் சூர்யா பிரதர் பேசுறேன்'னு ஆரம்பிச்சார். ‘உங்களை எனக்குத் தெரியுமே’ன்னேன். ‘நடிகர் சங்கத் தேர்தலுக்கு வாக்குச் சீட்டை அனுப்பியிருக்கோம். ஓட்டு போட்டுட்டு அனுப்பி வைங்க'ன்னு சொன்னார். அதன்பிறகு அப்பாகிட்ட விசாரிச்சு, அதைத் தேடிக் கண்டுபிடிச்சு ஓட்டு போட்டு தபால்ல அனுப்பினேன். கார்த்தியினாலதான் ‘சர்தார்'ல வந்தேன். படப்பிடிப்பில்கூட அவர்கிட்ட பிராங்க் பண்ணி நிறைய விளையாடுவேன். நாங்க ஸ்பாட்ல இருந்தாலே கலகலக்கும்.’’

``மார்க்கெட் உச்சத்துல இருக்கறப்பவே கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டீங்க...’’

‘‘நான் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஒன்பது வருஷத்துக்கு முன்னாடியிருந்து மெதியைத் தெரியும். நண்பர்களா இருந்து, காதலர்களானோம். என் கல்யாண விஷயம் இண்டஸ்ட்ரியில் யாருக்குமே தெரியாது. கல்யாணம் அன்னிக்குத்தான் சர்ப்ரைஸா பலருக்குத் தெரியும். அப்பவும் பல ரசிகர்களுக்குத் தெரியாது. ஒரு டைரி முழுவதும் லவ் லெட்டர்ஸ் எழுதி வச்சிருந்து புரொபோஸ் பண்ணுனாரு ஒருத்தர். இன்னொருத்தர் என்னோட போட்டோக்கள் முழுவதும் சேகரிச்சு வச்சிருந்து புரொபோஸ் பண்ணினார். எனக்குக் கல்யாணமான விஷயத்தைச் சொன்னதும் ஷாக் ஆனவங்களும் உண்டு.''

“மரத்தைச் சுத்தி ஆடுறது இல்லாமப் போயிடுச்சு!”

``இப்ப சினிமா எப்படி இருக்கு?’’

‘‘தமிழ் சினிமாவுல நான் சந்தோஷப்பட நிறைய தருணங்கள் இருக்கு. ஒரே ஃபேமிலியில் உள்ள சூர்யா, கார்த்தி, ஜோதிகா இவங்களோட நடிச்சிருக்கேன். அடுத்து சிவகுமார் சாரோட நடிக்கணும்னு ஆசை. அதைப் போல இளையராஜா சார், யுவன் சார், கார்த்திக்ராஜா சார்னு மூணு பேர் இசையிலும் நடிச்சிருக்கேன். வடிவேலு சாரோட போலீஸா நான் நடிச்ச காமெடியும் ஆல்டைம் ஃபேவரிட்டா அமைஞ்சிருக்கு. சரத்குமார், கார்த்திக், விக்ரம், அஜித், சூர்யான்னு பெரிய ஹீரோக்கள் படம் பண்ணியிருக்கேன். பாலா சார் படங்கள் பண்ணியிருக்கேன். தெலுங்கிலும் மலையாளத்திலும்கூட பண்ணியாச்சு. மும்பையில் இருந்து வந்த எனக்கு நல்ல டீமும், படங்களும் அமைஞ்சது இப்பவும் பிரமிப்பா இருக்கு. இப்ப இயக்குநர்களோட ஸ்கிரிப்ட் முறைகளும், கதாபாத்திரங்களும், வொர்க்கிங் ஸ்டைலும் பெரிய அளவுல மாறியிருக்கு. இதுல முக்கியமான ஒண்ணையும் சொல்லியாகணும். ஹீரோ, ஹீரோயின் மரத்தைச் சுத்தி ஆடுறது இல்லாமல் போனது சந்தோஷமா இருக்கு. நல்ல கதைகள் அதிகரிச்சிருக்கு. வித்தியாசமான முயற்சிகளை ரசிகர்கள் வரவேற்கறதும் சந்தோஷமா இருக்கு.''