Published:Updated:

``மிதாலி டீம்ல நான்  ஆடியிருக்கேன்; அதனாலதான் அந்த ஆசை!" - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி

லட்சுமி ப்ரியா சந்திரமெளலி
லட்சுமி ப்ரியா சந்திரமெளலி

`மிதாலி செம கூல். அவங்களுக்குள்ளயும் பதற்றம் இருக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்க மாட்டாங்க. ஏன்னா, அது மத்த பிளேயர்களையும் பாதிக்கும். அதே சமயம், ரொம்ப ஃபிரெண்ட்லி.’

கிரிக்கெட் வீராங்கனை, கார்ப்பரேட் கம்பெனி, தியேட்டர் ஆர்டிஸ்ட், சினிமா நடிகை என லட்சுமி ப்ரியா சந்திரமெளலிக்கு பல அத்தியாயங்கள் உள்ளன. தற்போது `கர்ணன்' படத்தில் தனுஷுடன் நடித்து வருகிறார். அவரின் சினிமா கரியர், கிரிக்கெட் அனுபவம் எனப் பலவற்றை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

கதைகள் தேர்ந்தெடுக்கிறதுல லட்சுமி ப்ரியா எப்படி?

``ஒரு நடிகையா எனக்கு அடுத்தடுத்து படங்கள் பண்ணிகிட்டே இருக்கணும்னு அவசரம் கிடையாது. செய்றதை மனசுக்கு திருப்தியா செய்யணும். கதையில என்னோட பங்கு நல்லா இருந்து, நடிகையா வேற ஒருத்தருடைய வாழ்க்கையை வாழ எனக்கு முழு இடமும் இருந்தா மட்டும்தான் நடிப்பேன். வேற எந்தக் கரணத்துக்கும் கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்கிற சூழல்ல நான் இல்ல. அப்படி வருஷத்துக்கு ஒரு படமோ, ரெண்டு படமோ பண்ணாலும் பொறுமையா என்ஜாய் பண்ணி வொர்க் பண்ணிகிட்டிருக்கேன்."

கூகை நிகழ்ச்சில, ``தமிழ் சினிமாவுல ஹீரோயினாக்கூட ஆகிடலாம். ஆனா, ஒரு நடிகையாகுறதுல அவ்ளோ சிரமங்கள் இருக்கு''னு சொல்லியிருந்தீங்க. ஏன்?

``மிதாலி டீம்ல நான்  ஆடியிருக்கேன்; அதனாலதான் அந்த ஆசை!" - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி

``தமிழ் சினிமாவுல பெரும்பாலான கதைகள் ஹீரோவை மையமா வெச்சுதான் இருக்கும். அந்தப் படங்கள்ல ஹீரோயினே ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் மாதிரிதான் இருப்பாங்க. இதைத் தவிர, ஒரு பெண் கதாபாத்திரம் படத்துல இருந்தா அந்தக் கேரக்டருடைய தேவையும் ஆழமும் ரொம்ப குறைவா இருக்கும். அந்த மாதிரி, கதைகளே குறைவா இருக்கும்போது நடிகைகளுக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்? அதனாலதான் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை ஸ்பெஷலா பார்க்கிறோம். காரணம், எல்லா படங்களும் ஹீரோ சென்ட்ரிக்கா இருக்கு. எப்போ ஹீரோவுக்கு நிகரா ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கப்போகுது? அந்த மாதிரி இருக்கிறது ரொம்பக் குறைவான படங்கள்தான். நான் சொல்றதுக்கும் திரையில அவங்க வர்ற நேரத்துக்கும் தொடர்பு இல்லை. நாசர் சார், பிரகாஷ்ராஜ் சார் மாதிரி நடிகர்கள் இந்தளவுக்கு இருக்கிறதுக்கு காரணம், அவங்களுக்கு அந்தளவுக்கு வாய்ப்புகள் இருந்திருக்கு. நாசர் சார் மாதிரி யாராவது பெண் கேரக்டர்கள் சொல்லுங்கனு சொன்னா, நம்ம யோசிப்போம். ஏன்னா, அந்த மாதிரி கேரக்டர்கள் பெண்களுக்கு எழுதுறதில்லை. ரொம்பவே குறைவுதான். அது மாறணும். அப்போதான் மனோரமா ஆச்சி மாதிரி ஒருவர் கிடைப்பாங்க."

`ஏஞ்சல்ஸ்', `சால்ட் மேங்கோ ட்ரீ'னு மலையாள சினிமாவுல நடிச்சது?

``எதிர்பாராத விதமா வந்த வாய்ப்புதான் `ஏஞ்சல்ஸ்'. ஆனா, `சால்ட் மேங்கோ ட்ரீ' அப்படியில்லை. அந்தக் கேரக்டருக்கு நிறைய ஹீரோயின்களைப் பார்த்திருக்காங்க. ஆனா, செட்டாகலை. அந்த டைரக்டரும் என் ஃபிரெண்டு ஹரீஷ் உத்தமனும் ஃபிரெண்ட்ஸ். அவர் மூலமா வந்த வாய்ப்பு அது. ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் நான் அந்தப் படத்துக்குள்ள போனேன். பிஜு மேனன் சாருக்கு ஜோடியா நடிச்சேன். நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்ச படம். வேற மாதிரி அனுபவமா இருந்தது. எல்லோரும் செம ஜாலியா வொர்க் பண்ணாங்க. அவங்களுடைய தொழில் நேர்த்தி அப்படி இருந்தது. என்ன சீன் எடுக்கப்போறாங்கன்னு அங்க இருக்கிற லைட் மேன், மேக் அப் ஆர்டிஸ்ட்னு எல்லோருக்குமே தெரியும்."

அதுக்குப் பிறகு மலையாளத்துல அதிகம் கவனம் செலுத்தாதது ஏன்?

``மிதாலி டீம்ல நான்  ஆடியிருக்கேன்; அதனாலதான் அந்த ஆசை!" - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி

``அந்த ரெண்டு படங்கள் முடிச்சவுடன் அங்கிருந்து சில ஆஃபர் வந்தது. ஆனா, எல்லாமே நான் `சால்ட் மேங்கோ ட்ரீ'ல பண்ண கேரக்டர் மாதிரியே இருந்ததுனால பண்ணல. அதுக்குப் பிறகு, வந்த சில வாய்ப்புகளை கால்ஷீட் பிரச்னைனால பண்ண முடியாம போயிடுச்சு. இப்போகூட மோகன்லால் சாருடைய `ராம்' படத்துல நடிக்கக் கேட்டாங்க. நான் மோகன்லால் சாருடைய பெரிய ரசிகை. என்ன பண்றது கால்ஷீட் இல்லாதனால நடிக்க முடியாம போயிடுச்சு. மறுபடியும் மலையாளத்துல ஒரு நல்ல படம் பண்ணணும்னு ஆசை இருக்கு."

லீட் ரோல் இல்லாமல் வேற கேரக்டருக்கு உங்களுக்கு அப்ரோச் பண்ணும்போது உங்க மனநிலை என்னவா இருக்கும்?

``சில கதைகள்ல லீட் ரோலுக்கு என்னை கேட்டபோது, `எனக்கு இந்தக் கேரக்டர் பிடிச்சிருக்கு. அந்தக் கேரக்டர்ல நடிக்கட்டுமா'னு நானே வேற ஒரு கேரக்டரை கேட்டிருக்கேன். எனக்கு லீட் ரோல்லதான் நடிக்கணும்னு இல்லை. அந்தக் கதையில முக்கியமான, நடிக்கிறதுக்கு ஸ்கோப் இருக்கிற ரோல் எதுவா இருந்தாலும் நான் பண்ணுவேன். ஹீரோயின், நெகட்டிவ் ரோல், குணச்சித்திர நடிகை இவையெல்லாமே நம்ம வெச்சிருக்கிற டேக் அவ்வளவுதான்."

`கர்ணன்' படத்துக்கான வாய்ப்பு எப்படி வந்தது? உங்களுக்கான ரோல் எப்படி இருக்கும்?

மாரி செல்வராஜ் - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி
மாரி செல்வராஜ் - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி

`` `பரியேறும் பெருமாள்' என்னை ஆழமா பாதிச்ச படம். அந்தப் படம் பத்தி அதிகமா யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்படி ஒரு நாள் மாரி செல்வராஜ் சார்கிட்ட இருந்து எனக்கு கால் வந்தது. `நான் மாரி பேசுறேன்'னு சொன்னவுடன் எனக்கு செம ஷாக். என்ன பேசுறதுனு தெரியாம உளறிட்டேன். அவரைப் பேச விடாமல் எனக்கு `பரியேறும் பெருமாள்' எந்தளவுக்கு பிடிச்சதுனு அவர்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன். அப்பதான். `கர்ணன்ல இப்படி ஒரு ரோல் இருக்கு, உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க, எனக்கு உங்களை வெச்சு ஸ்கிரிப்ட் பண்ண சரியா இருக்கும்'னு சொன்னார். உடனே ஓகே சொல்லிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு கூப்பிட்டாங்க, நேர்ல சந்திச்சு `பரியேறும் பெருமாள்' பத்தி நிறைய பேசினேன். அவருடைய பயணமும் சிந்தனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் வாழ்க்கையைப் பார்த்து நிறைய கத்துக்கணும்னு நினைச்சேன். கொஞ்ச நாள் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. நடிகர்களைவிட அந்த ஊர் மக்கள் நிறைய பேர் நடிக்கிறாங்க. என் கேரக்டர் ரொம்ப சிம்பிளாவும் சென்ஸிபிளாவும் இருக்கும்."

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில விளையாடியிருக்கீங்க. இப்போ டி-20 மகளிர் உலகக் கோப்பையில இந்திய அணியுடைய பர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது?

``இந்தியா `பி' டீமுக்காக மிதாலி ராஜ் தலைமையில வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா விளையாடியிருக்கேன். அப்புறம் லைஃப் மாறிடுச்சு. இப்போ கிரிக்கெட் அதிகமா விளையாடுறது இல்லையே தவிர, தொடர்ந்து அவங்களுடைய எல்லா மேட்சையும் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த வேர்ல்டு கப் மேட்சையும் பார்த்தேன். நம்ம மேட்ச் பார்த்ததுனாலதான் இந்தியா தோத்துட்டாங்க; பார்க்காமல் இருந்திருக்கலாம்னு எல்லா சென்டிமென்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மாதிரிதான் எனக்கும் இருந்தது. விளையாட்டுல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கும். அந்த நாள் நமக்கான நாளில்லை. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங்னு எல்லாமே சொதப்பிடுச்சு. மத்த எல்லா மேட்சும் நம்ம கேர்ள்ஸ் தூள் கிளப்பிட்டாங்க. தவிர, முதல்முறையா ஃபைனலுக்குள்ள வந்தது, அத்தனை பேர் ஸ்டேடியத்துக்கு வந்து மேட்ச் பார்த்தது, உலகம் முழுக்க டிவியில ஒளிப்பரப்பு பண்ணதுனு எல்லாமே இதுதான் முதல்முறை. அதனால அந்த பிரஷரும் பதற்றமும் இருக்கத்தான் செய்யும். இது ஒருவகையில மகளிர் கிரிக்கெட்டுக்குக் கிடைச்ச மோட்டிவேஷன்னுதான் சொல்லணும்."

உங்க கேப்டன் மிதாலி ராஜ் பத்தி?

``மிதாலி டீம்ல நான்  ஆடியிருக்கேன்; அதனாலதான் அந்த ஆசை!" - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி

``மிதாலி செம கூல். அவங்களுக்குள்ளயும் பதற்றம் இருக்கும். ஆனா, அதை வெளிக்காட்டிக்க மாட்டாங்க. ஏன்னா, அது மத்த பிளேயர்களையும் பாதிக்கும். அதே சமயம், ரொம்ப ஃபிரெண்ட்லி. ஒரு விஷயம் நம்ம பிளான் பண்ண மாதிரி வரலைன்னா உடனே பிளான் `பி' கிரியேட் பண்ணுவாங்க. அப்படியும் வொர்க் அவுட் ஆகலைன்னா, ஓகே இன்னிக்கு அவ்வளவுதான். அடுத்த மேட்சுக்கு தயாராவோம்னு ஓடிக்கிட்டு இருக்கிற நபர்."

மறுபடியும் கிரிக்கெட் விளையாடணும்னு தோணியிருக்கா?

``நிறைய முறை தோணியிருக்கு. ஆனா, அப்போ இருந்த கனவு வேற, இப்போ இருக்கிற கனவு வேற. இருந்தாலும் எப்போவும் கிரிக்கெட் மேல இருக்கிற காதல் எனக்குள்ள இருந்துட்டே இருக்கும். இப்பவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நெட் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்."

சி.எஸ்.கே ரசிகைன்னு கேள்விப்பட்டோம். ஐபிஎல் நெருங்கிடுச்சு. ஒரு கிரிக்கெட்டராகவும் ரசிகையாகவும் எந்தளவுக்கு ஆவலா இருக்கீங்க?

``ஆமாங்க. ஒரு கிரிக்கெட்டர் அப்படிங்கிறதெல்லாம் தாண்டி ஐபிஎல் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட். சென்னை சூப்பர் கிங்ஸ்ங்கிறது ஒரு எமோஷன்; ஒரு திமிர். அதே மாதிரி நம்ம `தல' தோனினு சொல்றது ஒரு எமோஷன்; ஒரு திமிர். ஐபிஎல் ஆரம்பிச்சுடுச்சுனாலே சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஒரு தனி கெத்து வந்திடும்ல. எப்படியும் ஒருசில மேட்ச்சுக்காவது நிச்சயமா ஸ்டேடியம் போயிடுவேன்."

மிதாலி ராஜுடைய பயோபிக்ல டாப்ஸி நடிச்சிட்டு இருக்காங்க. நீங்க மிதாலிகூட பயணிச்சிருக்கீங்க. உங்களுக்கு எவ்வளவு ஆர்வமா இருக்கு?

``மிதாலி டீம்ல நான்  ஆடியிருக்கேன்; அதனாலதான் அந்த ஆசை!" - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி

``ரொம்ப ஆர்வமா இருக்கேன். டாப்ஸி எப்படிப் பண்ணுவாங்கன்னு நம்ம யோசிக்கவே தேவையில்லை. எந்தக் கேரக்டரா இருந்தாலும் அதை எடுத்துக்கிட்டு அதுக்குத் தேவையான விஷயங்களைக் கத்துக்கிட்டு அசத்திடுவாங்க. இருந்தாலும் மிதாலியுடைய பாடி லேங்குவேஜ், ஸ்டைல், பேச்சுனு சின்னச் சின்ன விஷயங்களை அவங்க எப்படிக் கொண்டுவர்றாங்கன்னு பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன்."

உங்களுடைய ட்ரீம் ரோல்னு ஏதாவது இருக்கா?

``எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் படத்துல விளையாட்டு வீராங்கனையா நடிக்கணும்னு ரொம்ப ஆசை. நான் ஒரு கிரிக்கெட்டர்ங்கிறதுனால கிரிக்கெட் படம் கிடைச்சா அதுக்கு மேல என்ன வேணும்? அந்த வகையில `சபாஷ் மித்து'ல டாப்ஸி பண்ற ரோல்தான் என்னுடைய ட்ரீம் ரோல்."

திருமண வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு?

``ரொம்ப சூப்பரா போய்க்கிட்டிருக்கு. அவர் ஒரு எழுத்தாளர், நடிகர். ரெண்டு பேரும் ஒரே துறையில இருக்கிறதுனால என்ன பண்றோம், எங்க போறோம்னு ஒருவருக்கொருவர் நல்லா புரிஞ்சுக்க முடியுது. அவர் நிறைய ஸ்கிரிப்ட்ஸ் எழுதி என்கிட்ட கொடுத்து என்னுடைய ஐடியாவைக் கேட்பார். என் ஆடிஷனுக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார். ரெண்டு பேரும் அவங்க அவங்க கரியருக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்கோம்."

அடுத்த கட்டுரைக்கு